தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 30 januari 2015

இலங்கை அகதிகள் மீளத்திரும்பல் கூட்டத்தில் தமிழக அரசாங்கம் பங்கேற்காது

குற்றச்சாட்டுக்கள் இருந்தால் முறைப்பாடு செய்யவும்: ராஜித சேனாரட்ன
[ வெள்ளிக்கிழமை, 30 சனவரி 2015, 01:57.21 AM GMT ]
குற்றச்சாட்டுக்கள் இருந்தால் கையூட்டல் மற்றும் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய முடியும் என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
என்னைப் பற்றி குற்றச்சாட்டுக்கள் இருந்தால் கையூட்டல் தவிர்ப்பு ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்ய முடியும்.
குற்றவாளிகள் பற்றிய தகவல்கள் அம்பலமாகியுள்ளன.
போதைப் பொருள் கடத்தல்காரர்கள், சட்டவிரோத மதுபான உற்பத்தியாளர்கள் போன்றவர்களின் பணம் பெற்றுக்கொண்டவர்கள் பற்றிய தகவல்கள் அம்பலமாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தேசிய நிறைவேற்றுப் பேரவையில் மோசடிகாரர்கள் இருப்பதாக பொதுபல சேனா குற்றம் சுமத்தியிருந்தது, இது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBQUKcfty.html

சந்திரிக்கா, மைத்திரி, மஹிந்த இணையாவிட்டால் கட்சிக்கு ஆபத்து: பிரசன்ன ரணதுங்க
[ வெள்ளிக்கிழமை, 30 சனவரி 2015, 02:00.50 AM GMT ]
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க, மஹிந்த ராஜபக்ச ஆகியோர் இணைந்து செயற்படாவிட்டால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆபத்து ஏற்படும் என மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஓர் பின்னடைவு ஏற்பட்டதனை ஒப்புக்கொள்கின்றோம்.
எனினும், இதனை தோல்வியாகக் கருத முடியாது. எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வெற்றியீட்டச் செய்ய முடியும்.
முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா, மஹிந்த ஆகியோர் பழைய விரோதங்களை மறந்து ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் இணைந்து செயற்பட வேண்டும்.
அவ்வாறு செய்யத் தவறினால் சுதந்திரக் கட்சியை காப்பாற்ற முடியாது.
கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் கட்சியை கருத்திற் கொண்டு அனைவரும் இணைந்து செயற்பட வேண்டுமென பிரசன்ன ரணதுங்க ஊடகமொன்றின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBQUKcftz.html

இலங்கை அகதிகள் மீளத்திரும்பல் கூட்டத்தில் தமிழக அரசாங்கம் பங்கேற்காது
[ வெள்ளிக்கிழமை, 30 சனவரி 2015, 02:52.10 AM GMT ]
இலங்கை அகதிகள் தாமாகவே நாடு திரும்புவது தொடர்பில் இன்று புதுடில்லியில் இடம்பெறும் அமைச்சர்களுக்கு இடையிலான கூட்டத்தில் தமிழக அரசாங்கம் பங்கேற்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக்கூட்டத்தில் இந்திய அரசாங்கத்தின் பல்வேறு திணைக்களங்களின் தலைவர்கள், உள்துறை அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இலங்கையில் இருந்து வரும் ஐக்கிய நாடுகளின் அகதிகள் அமையத்தின் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
இந்தநிலையில் தமிழக அரசாங்கமும் தமது பிரதிநிதிகளை அனுப்ப வேண்டும் என்று இந்திய மத்திய அரசாங்கம் கோரியிருந்தது.
எனினும் இலங்கையில் இன்னும் அகதிகள் இயல்பாகவே திரும்பிச் செல்வதற்கான சூழ்நிலை ஏற்படவில்லை என்று தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் மத்திய அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள அகதி முகாம்களில் உள்ளவர்களும் இலங்கை அரசாங்கம் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரை இலங்கைக்கு செல்வது ஏற்புடையதல்ல என்று கூறியிருப்பதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்தநிலையிலேயே இன்றைய கூட்டத்தில் தமிழக பிரதிநிதிகள் பங்கேற்பதில்லை என்று தமிழக அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.
இலங்கையில் 1983ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் பின்னர் 304,000 அகதிகள் தமிழகத்துக்கு சென்றனர். இதில் 212,000 பேர் மீளத்திரும்பிச் சென்றனர். இந்தநிலையில் தற்போது 102,000 பேர் முகாம்களிலும் வேறு இடங்களிலும் தங்கியுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBQUKcft3.html

Geen opmerkingen:

Een reactie posten