தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 30 januari 2015

சர்வதேச விசாரணைக்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது: இலங்கை அரசு திட்டவட்டம் !

அமெரிக்கா விட்டாலும் அம்மையார் விடமாட்டார் போல இருக்கிறது: தொடரவுள்ள போர் குற்றம் !

[ Jan 30, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 26045 ]
அமெரிக்காவின் செல்லப் பிள்ளை ரணில் தற்போது இலங்கையில் ஆட்சி அமைத்துள்ள நிலையில், வரும் மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமை மாநாட்டில் இலங்கைக்கு கால அவகாசம் கொடுக்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டை அமெரிக்கா எடுத்துள்ளது என அறியப்படுகிறது. போர்குற்ற விசாரணைகள் மற்றும் சர்வதேச சுயாதீன விசாரணைகள் இலங்கையில் நடைபெறவேண்டும் என்று ஐ.நா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. இன் நிலையில், புதிய அரசாங்கத்திற்கு அவகாசம் கொடுக்க வேண்டும் என்ற கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இதேவேளை புதிய அரசாங்கம் வந்தாலும் உடனடியாக தமிழர்களின் பிரச்சனை தீர்க்கப்படவேண்டும் என்றும் , அதிகாரப் பரவலாக்கல் உடனடியாக நடைபெறவேண்டும் என்றும் பிரித்தானிட லேபர் கட்சி MP சோஃபி மக்டொனா தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெற்ற போர் குற்றம் மற்றும் சட்டத்திற்கு புறம்பான கொலைகள் தொடர்பாக , உடனடியாக விசாரணைகள் ஆரம்பிக்கப்படவேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இக்கருத்துக்களே பிரித்தானிய பாராளுமன்றிலும் எதிரொலிக்க இருக்கிறது. காலத்தை இழுத்தடிப்புச் செய்தலை, இனியும் நாம் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது என்று மேலும் சோஃபி தெரிவித்துள்ளார்.
இதனால் அமெரிக்கா மென்மையான போக்கை கடைப்பிடித்தாலும் பிரித்தானியா போன்ற நாடுகள் தொடர்ந்து இலங்கை மீது அழுத்தத்தை கொண்டுவரும் நிலை தோன்றியுள்ளதாக கூறப்படுகிறது. பிரித்தானியாவில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழர்களின் வாக்குகள் கிடைக்க வேண்டும் என்றால், இதுபோன்ற அழுத்தங்களை பிரித்தானிய அரசு கொடுத்து தான் ஆகவேண்டும் என்ற நிலை தோன்றியுள்ளது.

சர்வதேச விசாரணைக்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது: இலங்கை அரசு திட்டவட்டம் !

[ Jan 30, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 14625 ]

இலங்கை அரசாங்கம் யுத்தக்குற்றம் தொடர்பான சர்வதே விசாரணைக்கு அனுமதியளிக்காது என குறிப்பிட்டுள்ள அமைச்சர் ராஜித சேனரத்தின,உள்நாட்டு விசாரணையொன்று முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.வடமாகாணத்தில் இராணுவத்தினரிடம் உள்ள தனியார் நிலங்களை ஓப்படைப்பதற்கும்,அரசியல் கைதிகளை விடுதலைசெய்வதற்கும் புதிய அரசாங்கம் எண்ணியுள்ளதாக அமைச்சரவை பேச்சளார் ராஜித சேனரத்தின தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கம் வடமாகாணத்தில் இராணுவபிரசன்னத்தை குறைக்கும்,கடந்த அரசாங்கத்தை போன்று இராணுவநடவடிக்கைகள் மூலமாக மாத்திரம் பயங்கரவாதத்தின் மீள் எழுச்சியை கட்டுப்படுத்தலாம் என இந்த அரசாங்கம் கருதவில்லை,
குறிப்பாக வடமாகாணத்தை பொறுத்தவரை அவ்வளவு பாதுகாப்பு நடவடிக்கைகளும் அவசியம் என நாங்கள் கருதவில்லை, வர்த்தக நடவடிக்கைகளுக்காக கைப்பற்றப்பட்ட நிலங்களை பொதுமக்களிடம் மீள வழங்குவதற்கு தீர்மானித்துள்ளோம், முன்னைய அரசாங்கம் எப்போதும் தோற்கடிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் மீள் எழுச்சி குறித்தே சிந்தித்துகொண்டிருந்தது. இராணுவநடவடிக்கைகளால் மாத்திரம் அதனை தடுக்க முடியும் என நாங்கள் கருதவில்லை.
விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 275 தமிழர்களை விடுதலைசெய்வது குறித்து ஆராயந்துவருகின்றோம், அவர்கள் வெறுமனே சந்தேகத்தின் பெயரில்கைதுசெய்யப்பட்டவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten