[ சனிக்கிழமை, 31 சனவரி 2015, 01:26.42 AM GMT ]
இதில் அவுஸ்திரேலிய சிட்னியின் தூதரக அலுவலராக நியமிக்கப்பட்ட பந்துல ஜெயசேகர முக்கியமானவராக கருதப்படுகிறார் இவர் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் கூட சித்தியெய்தவில்லை.
இதனை தவிர முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோசித்தவின் பெண் நண்பரான யசரா, சிட்னியில் பந்துலவின் உதவியாளராக அனுப்பப்பட்டார். அவர், யோசித்தவின் நிதி நிறுவனங்களிலும் பணியாற்றினார்.
லக்ஷ்மன் ஹூலுகல்ல, இவர் தேசிய பாதுகாப்பு ஊடக மையத்தின் பேச்சாளராக இருந்தவர் இவர் கென்பராவில் பதவிக்கு அனுப்பப்பட்டார். எனினும் இவர்கள் தற்போதைய அரசாங்கத்தினால் இன்னும் திருப்பிய அழைக்கப்படவில்லை.
எனினும் எவ்வித குற்றச்சாட்டுக்கும் உள்ளாகாத அவுஸ்திரேலியாவுக்கான உயர்ஸ்தானிகர் திஸ்ஸர சமரசிங்கவை இலங்கை அரசாங்கம் திரும்பி அழைத்துள்ளது என்று இலங்கையின் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyBQVKcfx2.html
இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த கனடா தொடர்ந்தும் உதவும்: ஜோன் பெயர்ட்
[ சனிக்கிழமை, 31 சனவரி 2015, 01:41.23 AM GMT ]
கனேடிய வெளியுறவு அமைச்சர் ஜோன் பெயர்ட் இதனை தெரிவித்துள்ளார்.
புதிய ஜனாதிபதி மைத்திரிபால, இலங்கை மக்களின் ஆணைக்கு உரிய வகையில் செயற்படுவார் என்று நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் வட மாகாணத்தின் ஆளுநராக இருந்த இராணுவ அதிகாரி மாற்றப்பட்டமையை அவர் வரவேற்றுள்ளார்.
மக்களின் பிரச்சினைகளுக்கு மைத்திரி வெளிப்படையாக தீர்வு காண்பார் – கனடா நம்பிக்கை
அதிகார பகிர்வு, பொறுப்பு கூறல், நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பாக இலங்கை அரசாங்கம் ஊக்குவிக்கப்படும் என கனடா தெரிவித்துள்ளது.
கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பேயார்ட் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை கூறியுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
பிரதம நீதியரசராக ஷிராணி பண்டாரநாயக்க மீண்டும் நியமிக்கப்பட்டமை குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் கனேடிய வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.
2013 ஆம் ஆண்டு ஷிராணி பண்டாரநாயக்க பிரதம நீதியரசர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட போது தான் மிகவும் கவலையடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் வடக்கு மாகாண ஆளுநராக எச்.எம்.ஜீ.எஸ். பலியக்கார நியமிக்கப்பட்டமை குறித்தும் கனேடிய அரசாங்கம் மகிழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் எனவும் கனேடிய வெளிவிவகார அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதனை தவிர மக்களின் பிரச்சினைகளுக்கு வெளிப்படைத்தன்மையுடன் ஜனாதிபதி தீர்வுகளை காண்பார் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBQVKcfx3.html
முன்னாள் ஆளுனர் பெற்றுக்கொண்ட அதிகாரங்களை மீளவும் வட மாகாண அமைச்சுகளுக்கு வழங்க நடவடிக்கை
[ சனிக்கிழமை, 31 சனவரி 2015, 01:21.36 AM GMT ]
மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்தில் பதவி வகித்த வட மாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி, மாகாண அமைச்சுக்களின் அதிகாரங்களையும் கைப்பற்றி வைத்திருந்தார்.
இந்த அதிகாரங்களை மீளப்பெற்றுக்கொள்ள புதிய ஆளுனர் பலிஹக்காரவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
கடந்த ஆளுனர் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முரண்பாட்டான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த போதிலும் புதிய ஆளுனர் தொடர்பில் அவ்வாறான சர்ச்சைகள் கிடையாது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பரிந்துரைகள் மற்றும் அனுமதியுடன் புதிய ஆளுனர் நியமிக்கப்பட்டுள்ளார்.
எனவே புதிய ஆளுனர் நியமனம் தொடர்பில் முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.
புதிய ஆளுனருடன் இணைந்து செயற்படத் தயார் என சிவஞானம் கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBQVKcfx1.html
Geen opmerkingen:
Een reactie posten