தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 31 januari 2015

யாழில் தமிழக தொலைக்காட்சிகளுக்கு இருந்த தடையை தற்போதைய அரசு நீக்கியது !

வடக்கு ஆளுநர் மற்றும் ஷிராந்தை விவகாரம்: கனடா வரவேற்பு !

[ Jan 31, 2015 03:42:10 PM | வாசித்தோர் : 6465 ]
ஷிராணி பண்டாரநாயக்கவை பிரதம நீதியரசராக இலங்கை அரசாங்கம் மீண்டும் நியமித்தமையை வரவேற்றுள்ள கனடா, வடக்கின் புதிய ஆளுநராக இராணுவப் பின்னணி இல்லாத சிவிலியன் ஒருவரை நியமித்தமையையும் வரவேற்றுள்ளது. இவை தொடர்பில் கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயர்ட் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கை மக்கள் வழங்கிய ஆணையை புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உரிய வகையில் செயற்படுத்துவார் என தான் நம்புகின்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் அதிகாரப்பகிர்வு, பொறுப்புக்கூறல் மற்றும் மீளிணக்கப்பாட்டை உண்மையானதாக ஏற்படுத்துதல் என்பவை தொடர்பில் கனடா தொடர்ந்தும் ஊக்குவிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.athirvu.com/newsdetail/2141.html

ஆறு வருடங்களில் 31, 127 கோடி திருடிய மஹிந்த: அதிரும் தகவல்கள்

[ Jan 31, 2015 05:02:36 PM | வாசித்தோர் : 9610 ]
முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஷ தனது செலவாக கடந்த ஆறு வருட காலப்பகுதியில் 31127 கோடி ரூபா பணம் செலவிடப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவு திட்டத்தினை நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 2009ம் ஆண்டு 634 கோடி ரூபாய் பணமும், 2010ம் ஆண்டு 756 கோடி ரூபாய் பணமும், 2011ம் ஆண்டு 5063 கோடி ரூபாய் பணமும், 2012ம் ஆண்டு 5936 கோடி ரூபாய் பணமும் 2013ம் ஆண்டு 8244 கோடி ரூபாய் பணமும், 2014ம் ஆண்டு 10,494 கோடி ரூபாய் பணமும் ஜனாதிபதி மஹிந்தவிற்காக செலவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், 2015ம் ஆண்டுக்காக 9593 கோடி ரூபாயினை செலவிட திட்டமிடப்பட்டிருந்தாகவும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இந்த நிலையில் புதிய அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபாலவின் செலவிற்காக 256 கோடி ரூபாயினை மட்டும் செலவு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
http://www.athirvu.com/newsdetail/2142.html

யாழில் தமிழக தொலைக்காட்சிகளுக்கு இருந்த தடையை தற்போதைய அரசு நீக்கியது !

[ Jan 31, 2015 05:06:53 PM | வாசித்தோர் : 8540 ]
மஹிந்த அரசினால் தடைவிதிக்கப்பட்ட தமிழக தொலைக்காட்சி அலைவரிசைகள் மீண்டும் இலங்கையில் இயங்கத்தொடங்கியுள்ளது. இறுதி யுத்த அவலங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பான செய்திகளை அம்பலப்படுத்தி வந்திருந்த தமிழக தொலைக்காட்சி அலைவரிசைகள் ஒளிபரப்படுத்துவதை இலங்கை அரசு தடுத்து வைத்திருந்தது.
இத்தகைய தொலைகாட்சிகள் செய்மதி ஊடக இயக்கப்படுகின்றமையினால் அதனை பயன்படுத்தியும் உள்ளுர் முகவர்களை முடக்கியும் வட-கிழக்கு பகுதிகளில் மக்கள் தமிழக தொலைக்காட்சிகளினை பார்க்கவிடாது தடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையினில் தற்போது தடைகள் நீக்கப்பட்டுள்ளதையடுத்து புதிய தலைமுறை மற்றும் மக்கள் தொலைக்காட்சி போன்றவை பார்வையிட இருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
http://www.athirvu.com/newsdetail/2143.html

Geen opmerkingen:

Een reactie posten