தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 30 januari 2015

சிவராமை கொன்றவர் விடுதலை…

இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை

முறையான ஒரு மதிப்பீட்டை தொடர்ந்து 5இலட்சம் ரூபாய் செலுத்தி இரட்டை பிரஜாவுரிமையை பெறமுடியும் என்றும் அவர் கூறினார். இலங்கையில் 10மில்லியன் டொலர் முதலீடு செய்யக்கூடிய, இலங்கையில் வதிவிட அந்தஸ்தை பெறவிரும்புவோருக்கும் அதற்கான வழிவகைகள் செய்யப்படும்.
இரட்டை பிரஜாவுரிமையை பெறுவதற்காக விண்ணப்பிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சின் அங்கிகாரத்தை பெறவேண்டும்.
இவர்களுக்கான விஸா கட்டணம் 2.5மில்லியன் ரூபாவாகும். இதனை 5 வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பித்துகொள்ளவேண்டும்.
http://www.jvpnews.com/srilanka/95888.html


சிவராமை கொன்றவர் விடுதலை…

சிவராமின் கொலைகளை ஆதாரத்துடன் மிகவும் கட்சிதமாக நகர்த்திய கொலைகாறர்கள் தடயங்களையும் அகற்றி விடுதலையாகியுள்ளனர். தேசியம் பேசும் உணர்வாளர்களின் அடுத்த நடவடிக்கை என்ன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று கூறி அதனை உருவாக்கிய உத்தமனை அழித்த நய வஞ்சக கூட்டத்தையும் இணைத்தா கூட்டமைப்பு பணிக்கிறது. அத்துடன் இவர்களா தமிழர்களுக்கு தீர்வு வழங்குவது, உண்மை உறங்காது சிவராமை கொலை செய்த இந்தக் கயவனையும் வைத்து தமிழ் மக்களின் தலைமை முடிவுகளை எடுக்குமாக இருந்தால் அது சிவராமின் கணவில் மண் தூவும் செயலுக்கு ஒப்பானது…
இன்று ஒற்றுமை எனலாம் சமத்துவம் எனலாம் எம் தமிழ் இனத்தை சிங்களம் அழித்தது, அதை நாம் அனுமதிக்க முடியாது. ஆனால் தமிழ் இன பெண்கள் மற்றும் பலரின் வாழ்க்கை அழியக் காரணமாக இருந்த எத்தனை கொலைக் கும்பல் இன்று தமிழர்களின் கட்சியில், சிங்களப் பேரினவாதி என முழக்கமிடும் எத்தனை நபர்கள் அவர்களுடன் இணைந்து தமிழ் மகனையும், மகளையும் அழித்தனர் இந்த இரட்டை வேடம் எதற்காக?
சிவராமை சுட்டவர் விடுதலையால் பல வெற்றி விழாக்கலாம் தமிழ் புதல்வனை இழந்த மக்கள் துக்கத்தில் அழித்தவன் மகிழ்ச்சியில்… விடுதலை தொடர்பான தீர்ப்பு….?
இத்தீர்ப்பில் “சிவராமின் கொலை தொடர்பாக நடைபெற்ற தீவிர விசாரணையின் பின் பீற்றர் எனும் ஸ்ரீஸ்கந்தராஜா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு எதுவித சாட்சிகளோ ஆதாரங்களோ இல்லாதபடியால் அவரை இவ்வழக்கில் இருந்து விடுவித்து இவ்வழக்கை இவ் நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது” என்று கொழும்பு மேல்நீதிமன்றம் 29.01.2015 தீர்ப்பு வழங்கி உள்ளது.
http://www.jvpnews.com/srilanka/95835.html

Geen opmerkingen:

Een reactie posten