தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 28 januari 2015

அனுபவம் இல்லாத ஒருவரை அரசாங்கம் கல்வி அமைச்சராக நியமித்துள்ளது: தயாசிறி ஜயசேகர

அனுபவம் இல்லாத ஒருவரை அரசாங்கம் கல்வி அமைச்சராக நியமித்துள்ளது என வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
குருணாகல் பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் நேற்று இதனைத் தெரிவித்துள்ளார்.
அனுபவம் இல்லாதவர்கள் பதவியை பொறுப்பேற்றுக்கொண்டால் அவர்களுக்கு என்ன செய்வது என்பது புரியாது.
கல்வி அமைச்சில் இவ்வாறான பொம்மைகள் எவரும் பதவி வகிக்கவில்லை. சி.டபிள்யு. கண்ணங்கர லயனல் ஜயதிலக்க ஈரியாகொல்ல ரிசட் பத்திரண ரணில் விக்ரமசிங்க மற்றும் பந்துல குணவர்தன போன்றவர்கள் கல்வி அமைச்சர்களாக கடமையாற்றினர்.
தற்போது பதவி வகிப்பவர்கள் ஊடகங்களுக்கு எதனையாவது சொல்வதனையே செய்கின்றனர்.
குளியாப்பிட்டி சுபாரதி வித்தியாலத்தில் 90 மாணவர்களை அரசியல் அடிப்படையில் சேர்த்துக்கொண்டதாக கல்வி அமைச்சர் என்மீது குற்றம் சுமத்தியுள்ளார்.
நான் அவ்வாறு செய்ததனை நிரூபித்தால் நான் எனது முதலமைச்சர் பதவியை துறக்கத் தயார்.
அரசியலில் எப்போதும் நாம் பதவிகளை துறந்து செல்ல தயாராக இருக்க வேண்டும் என தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRcKcgu6.html

Geen opmerkingen:

Een reactie posten