தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 27 januari 2015

பிரபல நடிகர் ஜக்சன் அந்தனி வீட்டிலிருந்து இலக்கத்தகடற்ற வாகனம் மீட்பு

உயர்தரத்தில் கற்கையைத் தொடர கணித பாட சித்தி கட்டாயம்
[ செவ்வாய்க்கிழமை, 27 சனவரி 2015, 02:29.10 AM GMT ]
உயர் தரத்தில் கற்கை நெறியைத் தொடர்பவர்களுக்கு க.பொ.த. சாதாரணப் பரீட்சையில் கணிதப் பாடம் கட்டாயமானது என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடம் உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு கடந்த அரசாங்கத்தினால் அறிமுகம் செய்த, இரண்டு வருடங்களுக்கு கணிதப் பாடம்  கட்டாயமில்லை என்ற விதி செல்லுபடியற்றதாகும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
க.பொ.த உயர்தரத்தில் கலை மற்றும் வர்த்தகப் பிரிவில் கல்வியைத் தொடர உள்ளவர்களே கட்டாயம் கணித பாடத்தில் சித்தியடைய வேண்டும்.
இலங்கை அகதிகள் மீளக்குடியமர ஐக்கிய நாடுகள் உதவி
[ செவ்வாய்க்கிழமை, 27 சனவரி 2015, 02:53.06 AM GMT ]
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் நாடு திரும்பி மீளக்குடியமர ஐக்கிய நாடுகள் சபையும் ஐரோப்பிய ஒன்றியமும் உதவவுள்ளன.
இதனை இலங்கையின் மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.
மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம் சுவாமிநாதன்,ஐக்கிய நாடுகளின் அகதிகள் சபையின் பிரதிநிதி குலாம் அபாஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் லிபூஸ் சௌக்பூவா ஆகியோரை சந்தித்த போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கனவே வடக்கு கிழக்கில் 23ஆயிரம் வீடுகளை அமைத்துள்ளது. அத்துடன் 14 மில்லியன் யூரோக்களையும் இந்ததிட்டத்துக்காக ஐரோப்பிய ஒன்றியம் ஒதுக்கியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyBRbKchv2.html

எக்னெலிகொடவை கண்டு பிடிக்க புதிய அரசாங்கம் அக்கறை காட்டவில்லை: சந்தியா
[ செவ்வாய்க்கிழமை, 27 சனவரி 2015, 03:48.44 AM GMT ]
லங்கா ஈ நியூஸ் ஊடகத்தின் கேலிச்சத்திர கலைஞரும் ஊடகவியலாளருமான பிரகீத் எக்னெலிகொடவை கண்டு பிடிக்க புதிய அரசாங்கம் உரிய அக்கறை காட்டவில்லை என அவரது மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பேச உள்ளளேன்.
2010ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு இரண்டு தினங்கள் முன்னால் எக்னெலிகொட காணாமல் போயிருந்தார்.
கடந்த 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 24ம் திகதி காணாமல் போன எக்னெலிகொட ஐந்து வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் இன்னமும் கண்டு பிடிக்கப்படவில்லை.
பிரகீத் எக்னெலிகொட தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த புதிய அசராங்கமும் அந்த விடயத்தை மறந்து செயற்பட்டு வருகின்றனர்.
உயிரிழந்த பல ஊடகவியலாளர்களின் மரணங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப் போவதாக அறிவித்த அரசாங்கம் எக்னெலிகொடவின் பெயர் பற்றி எதனையும் குறிப்பிடவில்லை.
பிரகீத் எக்னெலிகொட காணாமல் போய் ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் தாமும் பிள்ளைகளும் கடுமையான நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றோம்.
கடந்த 23ம் திகதி பிரகீத் எக்னெலிகொட தொடர்பில் கொழும்பு கோட்டே புகையிரத நிலையத்திற்கு எதிரில் நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்விலும் பலர் பங்கேற்கவில்லை என அவர் கொழும்பு ஊடகங்களுக்கு அளித்த நேர் காணலில் குற்றம் சுமத்தியுள்ளார்.
பிரபல நடிகர் ஜக்சன் அந்தனி வீட்டிலிருந்து இலக்கத்தகடற்ற வாகனம் மீட்பு
[ செவ்வாய்க்கிழமை, 27 சனவரி 2015, 04:04.58 AM GMT ]
பிரபல சிங்கள நடிகர், இயக்குனர் கலைஞர் ஜக்சன் அந்தனி வீட்டிலிருந்து இலக்கத் தகடற்ற வாகனமொன்று மீட்கப்பட்டுள்ளது.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு சொந்தமான வாகனங்களை ஜக்சன் அந்தனி மறைத்து வைத்திருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து அவரது வீடு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
கடவத்தை பஹல கரகமுன வனிகசூரியவத்தவில் அமைந்துள்ள வீட்டை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.
இதன் போது மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் வாகனமொன்று மீட்கப்பட்டுள்ளது.
இந்த வாகனம் இலக்கத் தகடற்ற நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பெறுமதி மிக்க ஜீப் ரக வாகனமொன்றே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
வாகன உற்பத்தி நிறுவனம் தனது கணவருக்கு இந்த வாகனத்தை பரிசாக வழங்கியுள்ளதாக ஜக்சன் அந்தனியின் மனைவி பொலிஸாருக்கு வாக்கு மூலம் அளித்துள்ளார்.
எனினும் இந்த வாகனம் தொடர்பிலான எந்தவொரு ஆவணமும் வீட்டில் இருக்கவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மிக நெருங்கிய சகாக்களில் ஒருவரான ஜக்சன் அந்தனி ஊடகங்களில் பேரினவாத கொள்கைகளை முன்னெடுத்து பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களில் முன்னணி வகிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் கடுமையாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிற்கு ஆதரவாக களத்தில் இறங்கி பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyBRbKchv7.html

Geen opmerkingen:

Een reactie posten