தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 27 januari 2015

பிரதம நீதியரசர் பதவியில் இருந்து விலகும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம்: சட்டத்தரணிகள் சங்கம்

வடமேல் மாகாண மீன்பிடி அமைச்சர் நிஷாந்த கைது!
[ செவ்வாய்க்கிழமை, 27 சனவரி 2015, 08:25.12 AM GMT ]
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தமை மற்றும் ஐ.தே.கட்சி அலுவலகத்திற்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் வடமேல் மாகாண மீன்பிடி அமைச்சர் சனத் நிஷாந்த கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆனமடுவ  ஐ.தே.க வின் ஆதரவாளருக்கே இவர் அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சந்தேக நபரான அமைச்சர் இன்று ஆனமடுவ பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
 சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyBRbKcgoy.html
போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட வேண்டும்: பொதுபல சேனா
[ செவ்வாய்க்கிழமை, 27 சனவரி 2015, 08:38.23 AM GMT ]
இலங்கைக்கு போதைப்பொருள் கொண்டு வரும் நபர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட வேண்டுமென பொதுபல சேனா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
எவ்வளவு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும், எவ்வளவு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டாலும் பொதுபல சேனா சொல்ல வேண்டிய கசப்பான உண்மையை சொல்ல அஞ்சாது என அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே தெரிவித்துள்ளார்.
பொதுபல சேனா போதைப்பொருள் மற்றும் ஊழல் மோசடிகள் குறித்து பேசியது தேர்தல்களை இலக்கு வைத்து அல்ல.
2013ம் ஆண்டு போதைப்பொருள் நகரமான கொலன்னாவையில் நாம் மாநாடு ஒன்றை நடத்தியிருந்தோம்.
போதைப்பொருளினால் ஏற்படக்கூடிய அழிவுகள் குறித்து பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலருக்கும் தெளிவுபடுத்தல்கள் மேற்கொள்ளப்பட உள்ளது.
பௌத்த விஹாரைகளை மையமாகக் கொண்டு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
ஜனாதிபதி தேர்தலில் உறுதியளிக்கப்பட்டது போன்று போதைப்பொருள் கடத்தல்கள் விநியோகத்தை கட்டுப்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் பொதுபல சேனா இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyBRbKcgo0.html
ராஜித்த சேனாரத்ன சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளராகும் அறிகுறி!
[ செவ்வாய்க்கிழமை, 27 சனவரி 2015, 08:37.57 AM GMT ]
சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்குமாறு அக்கட்சியின் தலைவர்கள் சிலர் கவனம் செலுத்தி வருகின்றனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்கிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் குழு இத்தீர்மானத்தை முன்வைத்துள்ளதாக தெரியவருகின்றது.
எதிர்வரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmtyBRbKcgoz.html
பிரதம நீதியரசர் பதவியில் இருந்து விலகும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம்: சட்டத்தரணிகள் சங்கம்
[ செவ்வாய்க்கிழமை, 27 சனவரி 2015, 10:06.57 AM GMT ]
பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் பதவியை இராஜினாமா செய்யும் வரை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்தள்ளது.
அதற்கமைய நாளை காலை 09.00 மணிக்கு ஆரம்பமாகும் இப்போராட்டம் புதுக்கடை நீதிமன்ற கட்டிட வளாகத்தின் முன்னர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
நீதியரசர் தொடர்பாக முன்னெடுக்கப்பட வேண்டிய முடிவு தொடர்பாக கலந்துரையாடுவதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நேற்று கொழும்பில் ஒன்றுகூடினார்கள். அங்கு எடுக்கப்பட்ட முடிவினை இன்று வெளியிடுவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் செயளாலர் அஜித் பத்திரன தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதி தேர்தல் முடிவினை அறிவிக்கும் நாள் இரவு அலரி மாளிகையில் அரசாங்கத்திற்கு எதிராக செய்யவிருந்த சூழ்ச்சி தொடர்பாக ரகசிய பொலிஸார் பிரதம நீதியரசரிடம் வாக்க மூலம் பெற்றக்கொண்டுள்ளனர்.
குறித்த சூழ்ச்சிக்கும் நீதியரசருக்கும் இடையில் உள்ள தொடர்பு என்ன? குறித்த நேரத்தில் பிரதம நீதியரசர் அலரி மாளிகையில் இருந்தமையினால் மன உலைச்சலுக்குள்ளாகியதாக நீதிச்சேவை மாநாடு அறிக்கை ஒன்றினை விடுத்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBRbKcgo2.html

Geen opmerkingen:

Een reactie posten