தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 27 januari 2015

என்னை கன்னத்தில் ஓங்கி அடித்த சாபமே மகிந்தவை வீட்டுக்கு அனுப்பியது: மேர்வின் !

"நான் கடவுளை நன்கு வணங்குபவன்". கொள்கை உடையவன். என் மீது கை வைத்த எவரும் சிறந்து வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. அன்று என்னை அலரிமாளிகைக்கு அழைத்து , அறைக்கு அழைத்துச் சென்று தாக்கிய பின்னர்தான் நான் நினைத்தேன் மஹிந்தவிற்கு வீடு செல்ல காலம் தொலைவில் இல்லை என்று. என்னை அடித்து இரண்டு பௌர்ணமிகள் முடிவதற்கு முன்னர் மஹிந்த இல்லாமல் போய்விட்டார். ஆனால் இந்த மேர்வின் அன்று இன்றும் ஒன்று தான் என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா எமது கொழும்பு செய்தியாளரிடம் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
தன்னை தாக்கிய சம்பவம் குறித்து மேர்வின் மேலும் விவரிக்கையில், 'உங்களுக்கு நினைவிருக்கும் நான் களனியில் விடுதி ஒன்றை இழுத்து மூடியவிதம். விடுதி உரிமையாளர்கள் இதுகுறித்து பசில் திருடனுக்கு அறிவித்துள்ளனர். பசில் அதுபற்றி ஜனாதிபதியிடம் ஒன்றுக்கு இரண்டாக தொலைபேசியில் போட்டுக் கொடுத்துள்ளார். திடீரென என்னை அலரி மாளிகைக்கு வரும்படி தொலைபேசி அழைப்பு வந்தது. நான் உடனே அங்கு சென்றேன். என்னை கண்டதும் கையை பிடித்து இழுத்துக் கொண்டு அறைக்குள் சென்றார். நான் எதும் இரகசியம் சொல்லவோ என நினைத்தேன். திடிரென என்னை தாக்க ஆரம்பித்து விட்டார். ஆனால் நான் ஒருபொழுதும் கைநீட்டவில்லை. பின் வெளியே வா என்று தோளில் கைபோட்டு அழைத்துச் சென்றார். நான் அதன்பின் அங்கு இருக்கவில்லை.
உடனே ஜீப்பில் ஏறினேன். என் நிலையை பார்த்து 'ஏன் சார் ?' என்று எனது பாதுகாப்பு தரப்பினர் கேட்டனர். அப்போது நான் அழுதேன். பின் நான் லுசிடாவிற்கு (மனைவி) அழைப்பெடுத்து நடந்ததை கூறி அழுதேன். அதனை பாதுகாப்பு பிரிவினர் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு பாதுகாப்பு அதிகாரி கூறினார் ' தற்போது போகும் நிலையை பார்த்தால் ஜனாதிபதிக்கு இறுதி காலம் நெருங்கிவிட்டது சார்' என்றார். நான் பொய் சொன்னால் அவரையே கேளுங்கள். இதோ உள்ளார் அவர்;' என்று மேர்வின் கூற எமது செய்தியாளர் அவரை பார்த்தபோது அவர் தலை அசைத்து உண்மை என்று கூறியதாக செய்தியாளர் குறிப்பிட்டார். கெட்ட கேட்டுக்கு இதுக்கு சாட்சியை வேறு வைத்துக்கொண்டு மேர்வின் சில்வா அலைந்து திரிகிறார். இதில் ஊடகவியலாளரை மரத்தில் கட்டிவைத்து அடித்து பெரிய தாதா போல எல்லாம் பிலிம் காட்டி இருக்கிறார் மேர்வின் சில்வா ...
இது குறித்து மேலும் விவரித்த மேர்வின் ' எனக்கு முன்னர் இவ்வாறு பலரை மஹிந்த தாக்கியுள்ளார். பஸ் கெமுனு, முன்னாள் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய, முன்னாள் புலனாய்வு பிரிவு தலைவர் வாகிஸ்ட போன்றோர் , அனைத்து பெயர் விபரங்களும் உள்ளது என்றார். மகிந்தவிடம் அடி வாங்கிய அனைவரது பெயர் பட்டியலும் மேர்வினிடம் உள்ளதாம். அதில் பாதிபேர் நிச்சயம் எதிர்கட்சிக்கு தாவி இருப்பார்கள் போல இருக்கே ?

Geen opmerkingen:

Een reactie posten