தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 30 januari 2015

கிழக்கு மாகாணத்திற்கு முஸ்லிம் காங்கிரசை சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக நியமிக்கப்படுவார்: ரவூப் ஹக்கீம்



5ம் ஆண்டு புலமை பரிசில் வெட்டுப்புள்ளி வெளியானது
[ வெள்ளிக்கிழமை, 30 சனவரி 2015, 04:56.12 PM GMT ]
2014ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேற்றிற்கான வெட்டுப் புள்ளிகள் இன்று வெளியாகியுள்ளன.
இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பு ரோயல் கல்லூரி - 186
கொழும்பு ஆனந்தா கல்லூரி - 183
கண்டி தர்மராஜ கல்லூரி - 183
கொழும்பு விசாகா வித்தியாலயம் - 185
கண்டி மஹாமாய பெண்கள் பாடசாலை - 183
தமிழ் மொழி மூலமான பாடசாலைகளுக்கு உரிய வெட்டுப்புள்ளிகள் பின்வருமாறு,
 
 
 
 
http://www.tamilwin.com/show-RUmtyBQUKcfw4.html

கிழக்கு மாகாணத்திற்கு முஸ்லிம் காங்கிரசை சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக நியமிக்கப்படுவார்: ரவூப் ஹக்கீம்
[ வெள்ளிக்கிழமை, 30 சனவரி 2015, 04:47.46 PM GMT ]
கிழக்கு மாகாண சபைக்கான முதலமைச்சராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை சேர்ந்த ஒருவர் விரைவில் நியமனம் செய்யப்படவுள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
சம்மாந்துறையில் இன்று இடம்பெற்ற முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.கே.எம்.மன்சூர் நினைவு தினக் கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்த பிரகாரம் முதல் இரண்டரை வருடங்களுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும், அடுத்த இரண்டரை வருடங்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் முதலமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என்ற இணக்கப்பாடு உள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையில் ஸ்ரீலங்கா காங்கிரஸ் முதலமைச்சரைக் கொண்டதான கிழக்கு மாகாண சபைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சி அங்கத்தவர்களுக்கும் அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டு ஆட்சி அமைக்கப்படவுள்ளது.
இதேவேளை கிழக்கில் அமையவுள்ள மாகாண அரசுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒத்துழைப்பும் தேவை. இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனுடனும் நாம் பேசுவோம் எனவும் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyBQUKcfw3.html

Geen opmerkingen:

Een reactie posten