தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 1 januari 2015

கூட்டமைப்பின் ஆட்டம் ஆரம்பம் திண்டாடும் EPDP அரசு….

இலங்கையில் பேஸ்புக் தொடர்பில் 2250 முறைப்பாடுகள்!

முறைப்பாடுகளின் பின் பல போலி கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் கடந்த வருடத்தில் இணையம் தொடர்பில் 70 முறைப்பாடுகள் பதிவானதாக அவர் கூறினார்.
மின்னஞ்சல் மூலம் நிதி மோசடி செய்வது தொடர்பில் அதிக முறைப்பாடுகள் கிடைத்ததாக ரொஷான் சந்திரகுப்த குறிப்பிட்டார்.
http://www.jvpnews.com/srilanka/92401.html

மகிந்த ராஜபக்ச இறுதிக்கட்ட யுத்தத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்!

இதனால் இரண்டவது மட்டத்திலிருக்கும் சர்வாதிகாரிகளின் ஆதரவாளர்கள் வெறுப்படைய ஆரம்பிக்கின்றனர். இவர்களைப் பயன்படுத்தி கீழணிகளை அணிதிரட்டி ஆட்சிக் கவிழ்ப்பையும் ஆட்சி மாற்றத்தையும் ஏற்படுத்துவதென்பது இலகுவான செயல். துனிசியா, எகிப்து, லிபியா, யெமன் போன்ற நாடுகளில் கிளர்சிகளை ஏற்படுத்தி ஆட்சியதிகாரத்தில் பங்கெடுத்த இரண்டாவது அணியை கிளர்ச்சிக்குத் தலைமையேற்கச் செய்து ஆட்சியதிகாரத்தில் அமர்த்திய செயலை அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய நாடுகள் மேற்கொண்டன.
ஜனாதிபதித் தேர்தலை அறிவிக்கும்வரை ராஜபக்சவிற்கு எதிரிகள் இல்லை என்ற நிலையே காணப்பட்டது.
சில நாட்களுக்கு உள்ளாகவே ராஜபக்ச ஆட்சியில் பங்கெடுத்த இரண்டாவது அணி அவரின் எதிர்த்தரப்பாக மாறியது.
ஏகாதிபத்தியங்களின் இப் புதிய அணுகுமுறைக்கு சில முறைமைகள் காணப்படுகின்றன.
-முதலில் இனப்படுகொலை போன்ற தீவிர குற்றச் செயல்களை நடத்துவதற்கு ஒருவரைத் தெரிந்தெடுப்பது.
-இரண்டாவதாக அவர் சர்வாதிகாரியாகவும் பாசிஸ்டாகவும் வளர அனுமதிப்பது.
-மூன்றாவதாக எதிரணிகளையும் ஜனநாயக சக்திகளையும் பயன்படுத்தி குறித்த சர்வாதிகாரிக்கு எதிரான மக்கள் கருத்தை ஏற்படுத்துவது.
-நான்காவதாக கிளர்ச்சி அல்லது ஆட்சி மாற்றைத்திற்கு தகுந்த சந்தர்ப்பம் ஏற்படும் போது எதிரணிகளுக்கு ஆட்சியில்
பங்கெடுத்த இரண்டாவது மட்டத்தின் ஊடாகத் தலைமை வழங்குவது.
இறுதியாக சர்வாதிகாரியைத் தண்டித்து தனக்கு ஆதராவான புதிய அடியாளை ஆட்சியிலமர்த்திக் கொள்ளையைத் தொடர்வது.
இந்த இடைக்கட்டத்தில் இடதுசாரிகள், ஜனநாயக வாதிகள் போன்ற பலர் வழி தெரியாமல் திகைப்பார்கள். இடைவெளியை நிரப்புவதற்காக பாதிப்பற்ற வகையில் ஏகாதிபத்தியங்களே சோசல்ஸ்டுக்களையும், ஜனநாயகவாதிகளையும் களமிறக்கும்.
இலங்கைத் தேர்தல் களத்தில் இடம்பெறும் மாற்றங்களையும், நிர்வாக, அதிகார மட்டங்களில் தோன்றும் மாறுதல்களையும் உற்றுக் கவனித்தால் மைத்திரிபாலவை ஆட்சியில் அமர்த்துவதற்கான திட்டம் ஏகபோக அரசுகளால் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளமை வெளித்தெரியும்.
இந்த நிலைமைகளை அவதானித்து வாக்குப் பொறுக்கிகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்டும் வேலைத்திட்டத்தை முன்வைப்பதே புரட்சிகர சக்திகளின் கடமை.
எது எவ்வாறாயினும் வன்னியில் இறுதி யுத்ததை நடத்திய மகிந்த குடும்பம் தன்னைச் சுற்றி என்ன
நடக்கிறது என்பதையே அறிய முடியாத ஆபத்தான சூழலில் தொடர்பறுந்து காணப்படுகிறது. இன்று தன்னைக் காப்பாற்றிக்கொள்ள மகிந்த இறுதிக்கட்ட யுத்தத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்.
http://www.jvpnews.com/srilanka/92404.html

கூட்டமைப்பின் ஆட்டம் ஆரம்பம் திண்டாடும் EPDP அரசு….

இதனிடையே யாழில் இடம்பெறும் மகிந்த ராஜபக்சவின் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்கும் சமுர்த்திப் பயனாளிகளுக்கே 2 ஆயிரத்து 500 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தேர்தல் திணைக்களத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. நாளை மகிந்த பங்கேற்கும் கூட்டங்களில் பெருந்திரளான மக்கள் பங்கேற்க வேண்டும் என அவர் சார்ந்த கட்சியினருக்கு கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து அக்கட்சியினர் சமுர்த்தி உத்தியோகத்தர்களுடன் சேர்ந்து சமுர்த்திப் பயனாளிகளை சந்திக்கின்றனர். இதன்போது அவர்கள், மகிந்தவின் கூட்டங்களில் பயனாளிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றும் அவ்வாறு பங்கேற்றாலே வீட்டின் சிறு திருத்த வேலைகளுக்காக வழங்கப்படும் 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவின், முதல் கட்டக் கொடுப்பனவான 2 ஆயிரத்து 500 ரூபா வழங்கப்படும் என்றும் வற்புறுத்தி வருகின்றனர்.
அத்துடன் பரப்புரைக் கூட்டங்களில் பங்கேற்பதற்காக வாகன வசதிகளும் செய்யப்பட்டுள்ளன என்றும் கூறிவருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை தீவக பகுதிகளிலுள்ள மக்களுக்கு மகிந்த ராஜபக்சவின் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்றால் அமைச்சர் டக்ளஸின் தொலைக்காட்சியான டிடி தொலைக்காட்சியின் அலைவரிசை இணைப்பு இலவசமாக வழங்கப்படும் எனவே அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/92407.html

Geen opmerkingen:

Een reactie posten