[ வியாழக்கிழமை, 01 சனவரி 2015, 09:12.54 AM GMT ]
உயர்கல்வி பிரதியமைச்சர் நந்தமித்ர ஏக்கநாயக்க, பொது எதிரணிக்கு ஆதரவளிக்கும் முகமாக தற்போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவுடன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார்.
சந்திரிகா மற்றும் அரஜூன ரணதுங்க ஆகியோருடன் பிரதியமைச்சர் ஊடக மாநாடொன்றில் கலந்து கொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அரசுக்கு தற்பொழுது வந்தது மத்திய மாகாண சுனாமி!
மத்திய மாகாணத்தின் முக்கியஸ்தரான உயர்கல்வி பிரதியமைச்சர் நந்தமித்ர ஏக்கநாயக்கா இணைந்தார் மைத்திரியுடன்.
இது பற்றி தெரியவருவதாவது சற்றுமுன் நந்த மித்ர ஏக்கநாயக்கா எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரியின் ஊடக சந்திப்பில் கலந்து கருத்து தெரிவிக்கையில் யாரின் அழைப்பு இன்றி நான் உண்மையான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதிநிதியாக தற்போதைய மகிந்த அரசில் இருந்து விலகி உண்மையான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைந்து விட்டதாக தெரிவித்தார்.
பிரதியமைச்சர் நந்திமித்ர ஏக்கநாயக்க மைத்திரிபாலவுக்கு ஆதரவு
பிரதி உயர்கல்வி அமைச்சர் நந்திமித்ர ஏக்கநாயக்க ஜனாதிபதி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு தமது ஆதரவை வெளியிட்டுள்ளார்
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க வீட்டில் இடம்பெற்ற நிகழ்வின்போதே நந்திமித்ர ஏக்கநாயக்க தமது ஆதரவை வெளியி;ட்டு;ள்ளார்
ஏற்கனவே பல தடவைகளாக நந்திமித்ரவின் கூறப்பட்டமை குறிப்பிடத்தக்கது
இதேவேளை, இன்று மேலும் நான்கு பேர் மைத்திரிபாலவுக்கு ஆதரவை வெளியிடுவர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன
எனினும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை
http://www.tamilwin.com/show-RUmtyBTVKbmo5.html
ஆளும்தரப்பு உறுப்பினர்கள் மூவர் மைத்திரியின் வீட்டில்: பள்ளிவாசலுக்கு சென்றவர் அவசரமாக வீடு திரும்பினார்
[ வியாழக்கிழமை, 01 சனவரி 2015, 09:31.01 AM GMT ]
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கொழும்பு பெரிய பள்ளிவாசலில் முஸ்லிம்களைச் சந்திக்கவிருந்த நிகழ்வு அவசரமாக பிற்போடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆளும்தரப்பு உறுப்பினர்கள் மூன்று பேர் மைத்திரிபாலவை சந்திக்க கொழும்பு பெளத்தலோகா மாவத்தையில் உள்ள அவரது வீடுக்கு வந்திருப்பதாகவும், அவர்களுடனான கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் கலந்துரையாடலைத் தொடர்ந்து குறித்த குருநாகல், கண்டி பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் மைத்திரி அணியில் இணைந்து கொள்ளக் கூடிய வாய்ப்பு இருப்பதாகவும், இன்னும் சில மணி நேரங்களில் இது குறித்து அறிவிக்கப்படலாம் எனவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த ஆளும் தரப்பு உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் பின்னர் வெளியிடப்படும்.
http://www.tamilwin.com/show-RUmtyBTVKbmo6.html
2014 ம் ஆண்டு கடந்து வந்த பாதை
[ வியாழக்கிழமை, 01 சனவரி 2015, 09:32.13 AM GMT ]
2014 ஆம் ஆண்டில் நாம் அரசியல், சமூகம் சம்பந்தமான பல்வேறு விடயங்களை கடந்து வந்தோம். வரலாற்று பதிவுகளை ஏற்படுத்திய 2014 ஆம் ஆண்டின் காலச்சுவடுகள் மீண்டும் உங்கள் பார்வையில்
http://www.tamilwin.com/show-RUmtyBTVKbmo7.html
Geen opmerkingen:
Een reactie posten