தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 2 januari 2015

மரத்தில் இருந்து இறங்கி வெற்றிலையை பிடித்தார் மு.காங்கிரஸ் உறுப்பினர்

மைத்திரிபால அணியில் மேலும் இருவர் இணைந்தனர்
[ வெள்ளிக்கிழமை, 02 சனவரி 2015, 12:33.16 PM GMT ]
ஜே.வி.பியின் மாத்தளை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இன்று பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்து பொது எதிரணியில் இணைந்து கொண்டார்.
ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சுஜாதா அழககோனே இவ்வாறு எதிரணியில் இணைந்து கொண்டார்.
அதேவேளை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமேல் மாகாண சபை உறுப்பினர் லக்ஷ்மன் வெதருவ என்பவரும் இன்று எதிரணியில் இணைந்து கொண்டார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் வீட்டில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதாக அறிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTWKbmw5.html
கிளிநொச்சி கச்சேரியில் சந்திரகுமார் குழுவினரால் பொருட்கள் அபகரிப்பு
[ வெள்ளிக்கிழமை, 02 சனவரி 2015, 12:47.23 PM GMT ]
கிளிநொச்சி கச்சேரியில் மக்களுக்காக சேமித்து வைக்கப்பட்ட பொருட்களை ஈ.பி.டி.பியின் பா.உறுப்பினர் சந்திரகுமார் மற்றும் அவரது குழுவினர் இன்று மாலை அபகரித்து சென்றுள்ளனர்.
கிளிநொச்சி பழைய கச்சேரியில் மக்களுக்காக சேமித்து வைக்கப்பட்ட பொருட்களே இவ்வாறு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ரூபவதியின் ஒத்துழைப்போடு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மகிந்தவின் தேர்தல் பரப்புரைக்காக சட்ட வரையறைகளுக்கு புறம்பாக இவை கொண்டு செல்லப்பட்டுள்ளன.
தமது சொந்த பணத்தையோ, கட்சிப் பணத்தையோ தேர்தல் பணிக்கு பயன்படுத்தாமல் மக்களுக்காக சேமித்து வைக்கப்பட்ட பொருட்களை சந்திரகுமாரும் அவரது குழுவினரும் கச்சேரியில் அபகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyBTWKbmw6.html
மகிந்தவின் தேர்தல் பிரச்சாரம்! மக்களுக்கு வாகனங்களிலிருந்து வீசப்பட்ட உணவுப் பொட்டலங்கள்
[ வெள்ளிக்கிழமை, 02 சனவரி 2015, 12:58.33 PM GMT ]
சமுர்த்தி நிவாரணம் தருவதாகவும் நீர் இறைக்கும் இயந்திரங்களை தருவதாகவும் கூறி, தனது பிரச்சாரத்திற்கு அழைத்து வரப்பட்ட மக்களுக்கு வாகனங்களிலிருந்து உணவுப் பொட்டலங்களை வீசி கேவலப்படுத்திய சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றது.
ஜனாதிபதி மஹிந்தவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்றைய தினம் யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றிருந்தது.
இதற்காக ஈ.பி.டி.பி மற்றும் அங்கஜன் தலமையிலான குழுவினால் இலங்கை போக்குவரத்துச் சபை பேரூந்துகளில் காலை 6 மணிக்கே ஏற்றிவரப்பட்ட மக்களுக்கு ஜனாதிபதி வரும்வரையில் அதாவது நண்பகல் 12.45 மணி வரையில் தண்ணீரோ உணவுப் பொதிகளோ வழங்கப்படவில்லை.
இந்நிலையில் துரையப்பா விளையாட்டரங்கிற்கு வெளியே லொறிகளில் கொண்டுவரப்பட்ட உணவுப் பொதிகளை முறையாக மக்களுக்கு வழங்காமல் வாகனங்களிலிருந்தவாறே மக்களை நோக்கி தூக்கி வீசினர்.
பசி கொடுமையினால் மக்கள் அதனை எடுக்க முண்டிக் கொண்ட நிலையில் பலர் மயக்கமுற்றும் வீழ்ந்தனர்.
சமுர்த்தி நிதி கொடுப்பதாகவும், நீர் இறைக்கும் இயந்திரம் கொடுப்பதாகவும் கூறி அழைத்து வந்துவிட்டு இவ்வளவு நேரம் வெய்யிலில் நிற்கவிட்டது போதாதென்று எம்மை இவ்வாறு கேவலப்படுத்துகிறார்கள் எனக்கூறி பல மக்கள் அந்த இடத்தை விட்டே அகன்று சென்றனர்.
ஆனாலும் தூர இடங்களிலிருந்து அழைத்துவரப்பட்ட மக்கள் செய்வதற்கு வேறு வழியில்லாமல் முண்டியடித்து எறியப்பட்ட உணவுப் பொருட்களை எடுத்து உண்டமையினை கண்டுகொள்ள முடிந்தது.
http://www.tamilwin.com/show-RUmtyBTWKbmw7.html
மஹிந்தவின் பிரச்சாரக் கூட்டத்தில் மயங்கி விழுந்த பெண் வைத்தியசாலையில்: அச்சுறுத்திய டக்ளஸ்
[ வெள்ளிக்கிழமை, 02 சனவரி 2015, 01:15.24 PM GMT ]
மஹிந்தவின் யாழ்.பிரச்சாரக் கூட்டத்தில் மயக்கமடைந்து வீழ்ந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருபவர் தொடர்பில் ஊடகங்களுக்கு எந்தவொரு தகவலும் தெரியக் கூடாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வைத்தியசாலை நிர்வாகத்தை அச்சுறுத்தியதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
இன்றைய தினம் யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பல பொய்களை கூறி சுமார் 450ற்கும் மேற்பட்ட பேருந்துகளில் மக்கள் கொண்டுவரப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் அவ்வாறு வந்த மக்களுக்கு தண்ணீர் மற்றும் உணவு வழங்கப்படாத நிலையில், அதிகரித்த சன நெரிசலில் 5மாத பிள்ளை மற்றும் இளம் பெண் ஆகியோர் மயங்கி வீழ்ந்த நிலையில், சன நெரிசலில் நசியுண்டதாக மக்கள் கண்கண்ட சாட்சியாக கூறுகின்றனர்.
இந்நிலையில் அவ்வாறு நசிபட்ட இளம் பெண் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுவதாகவும் தெரியவருகின்றது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் ஊடகங்கள் யாழ்.போதனா வைத்தியசாலையை முற்றுகையிட்ட நிலையில், அவ்வாறான சம்பவம் எதுவும் நடக்கவில்லை என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்தது.
இதனையடுத்து சிகிச்சை பெறுபவர் யார்? அவர் ஆணா? பெண்ணா? என்றாவது தெரியப்படுத்துங்கள் என ஊடகங்கள் கேட்டதற்கும் பதிலளிக்காத வைத்தியசாலை நிர்வாகம், அது குறித்து தகவல் ஊடகங்களுக்கு வழங்க வேண்டாம் என அமைச்சர் டக்ளஸ் தமக்கு கூறியிருப்பதாக தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmtyBTWKbmxy.html
மரத்தில் இருந்து இறங்கி வெற்றிலையை பிடித்தார் மு.காங்கிரஸ் உறுப்பினர்
[ வெள்ளிக்கிழமை, 02 சனவரி 2015, 01:53.33 PM GMT ]
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மத்திய மாகாண சபை உறுப்பினர் உவைஸ் ஹாஜியார், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து இன்று ஆளும் கட்சியின் பக்கம் இணைந்து கொண்டார்.
அரசாங்கத்தின் சகல சிறப்புரிமைகளை அனுபவித்து விட்டு இறுதி நேரத்தில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது என்று கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் எடுத்த தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் உவைஸ் ஹாஜியார் கூறியுள்ளார்.
நன்றி மறக்காதவர்களே உண்மையான முஸ்லிம்கள். இதன் அடிப்படையிலேயே தான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
நுவரெலியா பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் அப்துல் அசீஸ மற்றும் பூஜாப்பிட்டிய பிரதேச சபையின் சுயேட்சை உறுப்பினர் உவைஸ் ரசான் ஆகியோரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBTWKbmx0.html

Geen opmerkingen:

Een reactie posten