[ வெள்ளிக்கிழமை, 02 சனவரி 2015, 03:11.33 PM GMT ]
இரத்தினபுரி, பெல்மதுல்ல என்ற இடத்திலேயே இந்த தாக்குதல் சம்பவம் இன்று இரவு இடம்பெற்றுள்ளது.
பொதுவேட்பாளர் கூட்டத்தில் பங்கேற்கும் முன்னர் கூட்டத்தின் மீது கல்லெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து இரண்டு தரப்பினருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் தற்போது பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கூட்டத்தில் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவேட்பாளரின் கூட்டத்தின் மீது கல்லெறித்தாக்குதல்! மைத்திரிபாலவை பாதுகாவலர்கள் காப்பாற்றினர்
பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பிரசாரக்கூட்டம் மீது நடத்தப்பட்ட கல்லெறித் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.
இரத்தினபுரி, பெல்மதுல்லை என்ற இடத்திலேயே இந்த தாக்குதல் சம்பவம் இன்று இரவு இடம்பெற்றுள்ளது.
பொதுவேட்பாளர் கூட்டத்தில் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உரையாற்றிக் கொண்டிருக்கும்போதே கல்லெறித்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எனினும் கல்லெறித் தாக்குதலில் இருந்து அவரின் பாதுகாவலர்கள் மைத்திரிபாலவை காப்பாற்றினர்.
தாக்குதலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்துள்ள மைத்திரிபால, தம்மை பாதுகாவலர்கள் காப்பாற்றியபோதும் கூட்டத்தின் முன்பகுதியில் நின்ற பலர் காயமடைந்ததாக தெரிவித்துள்ளார்.
அவர்கள் வைத்தியாசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் மைத்திரிபால குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTWKbmx3.html
8ம் திகதி கட்டாயம் வாக்களியுங்கள்!– மக்களிடம் கோரும் கத்தோலிக்க ஆயர்கள்
[ வெள்ளிக்கிழமை, 02 சனவரி 2015, 02:22.57 PM GMT ]
வாக்கு என்பது ஜனநாயகத்தை செயற்படுத்தும் பிரதான ஆயுதம் என சம்மேளனம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அச்சம் மற்றும் அழுத்தங்கள் இன்றி தமது வாக்கை சுதந்திரமாக அளிக்கும் குடிமக்களின் உரிமையை பாதுகாக்குமாறு அரசியல்வாதிகள் மற்றும் தேர்தலுடன் சம்பந்தப்பட்ட சகல தரப்பினரிடமும் கோரிக்கை விடுக்கின்றோம்.
தேர்தல் தினத்திலும் தேர்தலுக்கு பின்னரான சூழ்நிலைகளும் வன்முறையற்றதாக இருக்க வேண்டும்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஒருவருக்கொருவர் சேறுபூசிக் கொள்ளாமல், அறிவு ரீதியான விவாதங்கள் மூலம் தமது கொள்கைகள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று சில தினங்களில் புனித பாப்பரசர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். ஜனாதிபதித் தேர்தல் காரணமாக அதற்கு அந்த விஜயத்திற்கு தடையேற்பட்டு விடக் கூடாது.
சகல வேட்பாளர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை அமைதியான முறையில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
வெற்றி பெறும் வேட்பாளர் யாராக இருந்தாலும் சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த அவர் புதிய மாற்றங்களை செய்ய வேண்டும் என கத்தோலிக்க ஆயர்களின் சம்மேளனம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyBTWKbmx1.html
Geen opmerkingen:
Een reactie posten