தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 2 januari 2015

நேற்று அரசதரப்பின் பரப்புரை மேடைகள் அனைத்திலும், திரு. பிரபாகரன் விவகாரமே!

ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் வீட்டின் மீது தாக்குதல்!

15 மோட்டார் சைக்கிள்களில் சென்ற ஆயுதம் தாங்கிய குழுவினர் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியதுடன் மைத்திரிபால சிறிசேனவின் புகைப்படம், ஆவணங்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.
தாக்குதலில் விமல் ஜயசிறியின் மனைவி பிரியங்கா கருணாதிலகவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது. நான்கு மோட்டார் சைக்கிள் மற்றும் கார் ஒன்றுக்கு சேதம் ஏற்படுத்திய குழு துப்பாக்கிச்சூடும் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் பெலியத்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
unp%20attack-1
unp%20attack-2
unp%20attack-3

http://www.jvpnews.com/srilanka/92473.html

சமுர்த்தி கொடுப்பனவு எனக் கூறி அழைத்து செல்லப்பட்ட மக்கள் வெயிலில் காய்ந்து கருவாடாகிப் போயினர்!

இன்றைய தினம் யாழ்ப்பாணம் வருகை தந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்று வரும் பரப்புரைக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
இந் நிலையில் மகிந்தவின் பரப்புரைக்கு வந்தால் சமுர்த்தி கொடுப்பனவு என்றவுடன் கைக்குழந்தைகளுடன் சமுர்த்திப் பயனாளிகளும் பொது மக்களும் கைக் குழந்தைகளுடன் வெயில் காய்ந்து கருவாடாகிப் போய் உட்கார்ந்துள்ளனர்.
இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கில் கலந்துக்கொள்ளும் பிரச்சார கூட்டத்திற்கு 450 இ.போ.ச பேரூந்துக்கள் மூலம் மக்கள் இக்கூட்டத்திற்று வரவழைக்கப்பட்டனர்.
பேரூந்துகளில் பெயர் பலகைகளுக்கு பதிலாக கிராம சேவகர் பிரிவுகளில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதோடு இந்த கூட்டத்தில் கலந்துக்கொள்ளும் சமூர்த்தி அங்கத்தவர்களுக்கு ரூபாய் 5000 கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக கூறி மக்களை அழைத்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
jaffna_makintha_212015_1
jaffna_makintha_212015_2
jaffna_makintha_212015_3
jaffna_makintha_212015_4
jaffna_makintha_212015_5
jaffna_makintha_212015_6
jaffna_makintha_212015_7
jaffna_makintha_212015_8
jaffna_makintha_212015_9
jaffna_makintha_212015_10
Untitled-13 copy
http://www.jvpnews.com/srilanka/92478.html

யாழில் மகிந்த ஒப்பாரி….

January 02, 201510:18 am

யார் என்ன சொன்னாலும் இரணைமடு நீரை யாழ்ப்பாணத்துக்கு கொண்டுவருவேன் என மகிந்த ராஜபக்ச உறுதியளித்தார். தேர்தல் பரப்புரைக்காக யாழ்ப்பாணம் வருகை தந்த ஜனாதிபதி துறையப்பா விளையாட்டரங்கில் இன்று முற்பகல் இடம்பெற்ற நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சுகாதாரமும்இ கல்வியும் தனியார் துறையின் ஊடாக செயற்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தனியார் துறை எனின் கல்லூரிகளுக்கு பணம் செலத்தியே எதிர்காலத்தில் மாணவர்கள் கற்க வேண்டிய சூழல் ஏற்படும்.
இதனால் அதிகளவான பணத்தை நாம் செலவழிக்க வேண்டும் எனது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் சரி தற்போதைய நடைமுறையிலும் இலவசக் கல்வியும்இ இலவச மருத்துவமும் சரி இலவசமாகவே மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. எனவே சுகாதாரத்திலும் சரி கல்வியிலும் சரி யாரையும் கைவைக்க விடமாட்டேன். கடந்த 3 வருட காலத்தில் பாதிப்படைந்திருந்த கல்வியை மீண்டும் வடக்கில் மீட்டெடுத்துள்ளோம்.
அண்மையில் வெளிவந்த க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளில் தேசிய ரீதியில் கணித பிரிவில் யாழ்.இந்துக் கல்லூரி மாணவன் முதலாம் இடத்தை பெற்றுள்ளமையை இதற்கு உதாரணமாக கூறமுடியும். வடமாகாண சபைக்கு போதுமான நிதி வழங்கப்பட்டுள்ள போதும் 50 வீதமான அபிவிருத்திக்குகூட மக்களுக்காக ஆளும் கட்சியான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு செலவழிக்கவில்லை.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிள்ளைகள் வெளிநாடுகளில் எங்கள் பிள்ளைகள் இந்நாட்டில் எனவே எதிர்காலம் பற்றி சிந்தித்து முடிவு எடுக்க வேண்டியது நீங்களே. நீங்கள் என்னை நம்பலாம் உங்களை நான் என்றும் பாதுகாப்பேன் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிச் செல்ல என்னுடன் இணையுங்கள் – என்றார்.jaffna-01jaffna-02

http://www.jvpnews.com/srilanka/92494.html

நேற்று அரசதரப்பின் பரப்புரை மேடைகள் அனைத்திலும், திரு. பிரபாகரன் விவகாரமே!

இதுகுறித்து, நேற்றுமுன்தினம் அரச தொலைக்காட்சி செவ்வி ஒன்றில், பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கடுமையாக விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.
தீவிரவாதியான பிரபாகரனை மரியாதையோடு, திரு.பிரபாகரன் என்று சந்திரிகா கூறியிருப்பதாகவும், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை, சாதாரணமாக, மகிந்த ராஜபக்ச என்றே குறிப்பிட்டதாகவும், அவர் விசனத்தை வெளியிட்டிருந்தார்.
இந்தநிலையில், நேற்று அரசதரப்பின் பரப்புரை மேடைகள் அனைத்திலும், திரு. பிரபாகரன் விவகாரமே, முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தொடக்கம், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும், திரு.பிரபாகரன் விவகாரத்தை வைத்து, சந்திரிகா குமாரதுங்கவையும், எதிரணியினரையும், கடுமையாகத் தாக்கி விமர்சனங்களைச் செய்தனர்.
கண்டியில் நேற்று நடந்த பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, சந்திரிகாவின் இந்த உரைக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.
தன்னை மரியாதையோடு அழைக்காமல் வெறுமனே மகிந்த ராஜபக்ச என்று குறிப்பிட்டதாகவும், ஆனால் புலிகளின் தலைவர் பிரபாகரனை மரியாதையாக, திரு.பிரபாகரன் என்று கூறியதாகவும், அவர் விசனத்தை வெளியிட்டார்.
அதேவேளை, கொழும்பில் சிறிலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பிலும், அமைச்சர் டலஸ் அழகப்பெரும இந்த விவகாரம் குறித்து, சந்திரிகாவை கடுமையாக விமர்சித்தார்.
சந்திரிகாவின் யாழ்ப்பாண உரை ஒட்டுமொத்த நாட்டையுமே அவமானப்படுத்தி விட்டதாக அவர் கூறினார்.
“போரின் 75 சதவீதத்தை முடித்து வைத்தது தானே என்று கூறித் திரியும் சந்திரிகா, தீவிரவாத தலைவரை, திரு.பிரபாகரன் என்று, மரியாதையாக அழைத்திருக்கிறார்.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை சர்வாதிகாரி என்று கூறிவிட்டு, தீவிரவாத தலைவரை திரு.பிரபாகரன் என்று மரியாதை கொடுத்திருக்கிறார்.” என்றும் அவர் விசனம் வெளியிட்டார்.
கடந்த 30ம் நாள், யாழ்ப்பாணத்தில் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து நடத்திய பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய போதே, சந்திரிகா குமாரதுங்க, தாம் விடுதலைப் புலிகளின் தலைவர் திரு.பிரபாகரனுடன் பேச்சு நடத்த முயன்றதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/92469.html

Geen opmerkingen:

Een reactie posten