தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 2 januari 2015

உங்களுக்கு நன்றாகத் தெரிந்த பிசாசை ஆதரியுங்கள்!- யாழில் ஜனாதிபதி!

மகிந்தவை ஆதரிப்பது சல்மான்கானின் தனிப்பட்ட உரிமை! யாரும் கேள்வி எழுப்ப முடியாது: ஜெக்லின் பெர்ணான்டஸ்
[ வெள்ளிக்கிழமை, 02 சனவரி 2015, 08:40.25 AM GMT ]
நடிகர் சல்மான்கான் தனி நபர் என்ற வகையில் நிலைப்பாடும், நம்பிக்கையும் இருப்பதாகவும் இதனால், இலங்கையின் இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை ஆதரிக்க அவர் தீர்மானித்தால், அது குறித்து கேள்வி எழுப்ப எவருக்கும் உரிமை கிடையாது என இலங்கை வம்சாவளியான இந்தி நடிகை ஜெக்லின் பெர்ணான்டஸ் தெரிவித்துள்ளார்.
சல்மான்கானின் அண்மைய இலங்கை விஜயம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
இது குறித்து கருத்து வெளியிடும் போதே ஜெக்லின் பெர்ணான்டஸ் இதனை கூறியுள்ளார்.
சல்மான்கான் எனது அழைப்பின் பேரிலேயே இலங்கைக்கு விஜயம் செய்தார்.
அத்துடன் சல்மான்கான் பல்வேறு உதவி திட்டங்களை மேற்கொண்டு வருகிறார். இலங்கையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்க அவரை பயன்படுத்துவதே எனது நோக்கமாக இருந்தது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவையும் அவரது புதல்வர் நாமல் ராஜபக்ஷவையும் தனிப்பட்ட ரீதியில் அறிந்த சல்மான்கான் ஜனாதிபதியின் தேர்தல் மேடையில் ஏறியதை நான் தவறாக எண்ணவில்லை.
அவரது விஜயத்தின் உண்மையான நோக்கத்தை அறியாது வதந்திகளை பரப்புவோர் மீது தவறு உள்ளது.
நானும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தேர்தல் மேடையில் ஏறுகிறேன். அது எனது தனிப்பட்ட நிலைப்பாடு.
இலங்கையின் அரசியலில் பங்களிப்பு செய்யும் நோக்கம் எமக்கு கிடையாது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டும் என்பதே எமது முக்கியமான நோக்கம் என ஜெக்லின் பெர்ணான்டஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTWKbmvz.html
இந்துக் கடவுள்களை அசிங்கப்படுத்திய மகிந்த! குப்பையில் வீசப்பட்ட தெய்வங்கள்
[ வெள்ளிக்கிழமை, 02 சனவரி 2015, 08:55.27 AM GMT ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தன் தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தும் அட்டைகளில் இந்துக்களின் தெய்வங்களின் படங்களை பொறித்து வெற்றிலை சின்னத்தை இட்டு, இந்து சமயத்தையும் இந்து மக்களையும் மிகவும் மேசமான முறையில் அவமதித்துள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரச்சார அட்டைகளில் இந்துக்களின் தெய்வங்களான பிள்ளையார், கிருஸ்ண பரமாத்மா ஆகியோரின் படங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
பௌத்த மதத்தின் தெய்வமான புத்தபெருமானை மகிந்த பயன்படுத்த முடியுமா? முடியாது.
அப்படி பயன்படுத்தி இருந்தால் பௌத்த மக்கள் மகிந்தவின் மீது போர்க்கொடி தூக்கியிருப்பார்கள். ஆனால் தமிழர்களும் தமிழர்களின் தெய்வங்களும் இழிவாக படுவதாலேயே இத்தகைய வேலையை மகிந்த ராஜபக்ச சர்வாதிகாரப் போக்குடன் செய்துள்ளார் என இந்துமத பெரியார்கள் தெரிவிக்கின்றனர்.
வெளிப்படையாக மகிந்தவுக்கு எதிராக, இந்த செயலுக்கு எதிராக குரல் கொடுக்க முடியாத நிலையில் இந்து மத குருமார்கள் மனம்குமுறி நிற்கின்றனர்.
மகிந்தவின் மீதுள்ள வெறுப்பினால் மகிந்தவால் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தப்படும் பிரச்சார அட்டைகளில் பொறிக்கப்பட்டுள்ள தெய்வங்களும் குப்பைக் கூடைகளுக்குள்ளும் கிழிந்த நிலையிலும் பரிதாபமாக கிடக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyBTWKbmv0.html
பிரதியமைச்சர் லலித்தும் எதிரணி தாவத் திட்டம்
[ வெள்ளிக்கிழமை, 02 சனவரி 2015, 09:28.12 AM GMT ]
பிரதி சுகாதார அமைச்சரும், கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான லலித் திசாநாயக்கா, பொது எதிரணிக்கு தாவும் ஆயத்தங்களை மேற்கொண்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆளும் ஐக்கிய முன்னணி பாராளுமன்ற உறுப்பினரான இவர், ஐ.தே.கவின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்காவுக்கு சுகாதார அமைச்சர் பதவி கொடுத்ததில் கட்சித் தலைமையோடு அதிருப்தியுற்றிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது
http://www.tamilwin.com/show-RUmtyBTWKbmv1.html
அமைச்சர்களின் மனைவிமாரின் தொலைபேசி அழைப்பை ஒட்டுக் கேட்கும் மஹிந்த!-அசாத் சாலி!
[ வெள்ளிக்கிழமை, 02 சனவரி 2015, 09:36.28 AM GMT ]
கடந்த காலங்களில் தன்னுடன் யார் போட்டியிடப் போவது என்று தெரியாத நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 60 அமைச்சர்களின் மனைவிமார்களின் அழைப்புக்களை ஒட்டுக்கேட்டு கொண்டு இருந்தார் என அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
ரணிலிடம் நீங்கள் தானே போட்டி போடப் போகின்றீர்கள் என்று பல தடவை கேட்ட மஹிந்த நினைக்காத அளவுக்கு சுனாமி போன்று மைத்திரி வருவார் என்பதை நினைத்துக் கூட பார்க்கவில்லை.
மஹிந்த அதிக நேரம் இந்த அமைசர்களின் மனைவிமார்களின் தொலைபேசியை ஒட்டுக் கேட்டதால் ஒரு வேளை காது செவிடாகி இருந்திருக்கும்.
அதனால் தான் மைத்திரியின் தொலைபேசியை ஒட்டுக்கேட்க முடியவில்லை. இதுதான் நடந்த விடயம் எனத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTWKbmv2.html

சுதந்திரக் கட்சியை சந்திரிகா கைப்பற்றிவிடுவார்: 8ம் திகதி நள்ளிரவு நாடாளுமன்றத்தைக் கலைக்க திட்டம்
[ வெள்ளிக்கிழமை, 02 சனவரி 2015, 09:43.41 AM GMT ]
எதிர்வரும் 8ம் திகதி நள்ளிரவில் நாடாளுமன்றத்தைக் கலைத்து விடுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முடிவுசெய்துள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
நடைபெறவுள்ள தேர்தலில் தமக்கு தோல்வி ஏற்பட்டால் சுதந்திரக் கட்சியை சந்திரிகா கைப்பற்றிவிடுவார் என்று கட்சி வட்டாரங்களுக்குள் எழுந்த சந்தேகத்தை அடுத்து தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்னர் நாடாளுமன்றத்தை கலைத்துவிட கட்சியின் உயர் பீடத்தினர் ஆலோசித்து வருகின்றனர் என்று தெரியவருகிறது.
http://www.tamilwin.com/show-RUmtyBTWKbmv3.html
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீலன் அறக்கட்டளை நிதியம் உதவி!
[ வெள்ளிக்கிழமை, 02 சனவரி 2015, 09:50.46 AM GMT ]
சர்வதேச நாடுகள் எமது உறவுகளுக்காக பல உதவிகளை செய்ய முன்வந்த போது, நாட்டின் அராஜக அரசாங்கத்தினை நடத்திவரும் இந்த அரசு எமது மக்களுக்கு எந்த அபிவிருத்திகளையும் செய்ய விடாமல் தடுத்த வரலாறுதான் இருந்து கொண்டு இருக்கின்றது என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.
கடந்த ஒரு வாரகாலத்திற்கு முன் கிழக்கு மாகாணத்திலே ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் சிக்கித் தவித்த அம்பாறை மாவட்ட மக்களுக்காக வேண்டி புலம்பெயர்ந்து வாழும் நீலன் அறக்கட்டளை நிதியமானது மூன்று இலட்சம் ரூபாய் நிதியினை உடனடி நிவாரன தேவையாக அனுப்பி வைத்ததன் பொருட்டு இந்நிகழ்வானது இடம்பெற்றது.
இந்நிகழ்வானது நேற்று மாலை சேனைக்குடியிருப்பு கிராமத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன், செயலாளர் பா.புவிராஜ், கல்முனை மாநகரசபை உறுப்பினர் எஸ்.ஜெயக்குமார், காரைதீவு பிரதேசசபையின் உறுப்பினர் பாஸ்கரன் மற்றும் முதியோர் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய கிழக்கு மாகாணசபை உறுப்பினர், புலத்தில் இருந்து கொண்டு இந்த நாட்டிலே வாழும் எமது உறவுகளுக்காகவேண்டி பல அமைப்புக்கள் பலவகையான உதவிக்கரங்களை நீட்டி வருகின்றது. அதில் ஒரு கட்டமே நீலன் அறக்கட்டளை நிதியத்தின் இந்த நிவாரண உதவியுமாகும்.
இந்த மாவட்டத்தினை பொறுத்தவரையில் வாழ்வாதார உதவிகளை பல அமைப்புக்கள் தொடர்ந்து செய்து கொண்டு வருகின்றது எமது மக்கள் இந்த நாட்டிலே ஏற்பட்ட போர்ச்சூழல் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டு வாழ்வாதார உதவிகள் எதுவுமின்றி தத்தளித்துக்கொண்டிருக்கின்றார்கள்.
இவ்வாறு தத்தளித்துக்கொண்டு இருப்பவர்களுக்கு புலம்பெயர் உறவுகள் பல உதவிகளை செய்து வருகின்றார்கள். எதிர்காலத்திலும் அவ்வாறான உதவிகளை செய்வார்கள். இந்த நாட்டிலே 66 வருடங்களாக தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டுக்கொண்டுதான் வருகின்றார்கள் அவர்களுக்கான எந்த நிரந்தரத்தீர்வும் இதுவரைக்கும் கிடைக்கவில்லை.
அதனை பெற்றுக்கொடுப்பதற்கு சர்வதேசம் முன்வருகின்றபோது அதனை தடுத்து நிறுத்துவதில் இந்த அரசாங்கம் முன்னின்று செயற்பட்டு வருகின்றது. எதனையும் தமிழர்களுக்காக வழங்க இந்த அரசாங்கம் தயாராக இல்லை.
போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வந்து விட்டோம் என்று கூறும் இந்த அரசாங்கம் மக்களுக்காக என்ன நல்ல வேலைத்திட்டங்களை முன்வைத்திருக்கின்றது. போராட்டம் முடிவிற்கு கொண்டு வந்த பின்னர்தான் தமிழர்களது பூர்வீக நிலங்கள் பறிபோய்க்கொண்டிருக்கின்றது.
ஆனால் போராட்ட காலத்தில் அவ்வாறு எந்தவிதமான நில ஆக்கிரமிப்பும் இடம்பெறவில்லை. இவ்வாறான பல பிரச்சினைகளை இன்று சர்வதேச மட்டத்திற்கு கொண்டு சென்று அதற்கான தீர்வைத்தேடும் கட்சி என்றால் அது த.தே.கூட்டமைப்பினை தவிரவேறு வேறு எந்தக்கட்சியும் இல்லை என்று கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTWKbmv4.html
உங்களுக்கு நன்றாகத் தெரிந்த பிசாசை ஆதரியுங்கள்!- யாழில் ஜனாதிபதி
[ வெள்ளிக்கிழமை, 02 சனவரி 2015, 09:54.19 AM GMT ]
பொது எதிரணி வேட்பாளர் மைத்திபால சிறிசேனவை உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும். அவர் ஒரு தடவைகூட இந்தப் பகுதிக்கு வரவில்லை. ஆனால் நான் எனது இளவயதிலிருந்தே உங்களைத் தெரிந்து வைத்திருக்கிறேன். உங்கள் இடத்துக்கு வந்து சென்றிருக்கிறேன். எனவே தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசை ஆதரியுங்கள் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச தெரிவித்தார்.
1970ம் ஆண்டு நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது யாழ்ப்பாணம் வந்தேன். அதாவது 11 தடவைகள் நான் யாழ்ப்பாணம் வந்திருக்கிறேன். உங்களுக்கு என்னை நன்றாகத் தெரியும்.  எனவே தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசை ஆதரியுங்கள். - இவ்வாறு தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ.
யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்தாவது:-
இன்று நான் உங்கள் முன் பேசுவதையிட்டு மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். நான் சில நாள்களுக்கு முன்னர் யாழ்தேவி மூலம் யாழ்ப்பாணம் வந்தேன். இன்று யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறை வரை யாழ்தேவி சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கு ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். இன்னும் எனது ஊருக்கு ரயில் சேவை இல்லை. ஆனால் வடபகுதிக்கு அந்த சேவையை நான் ஆரம்பித்துவைத்திருக்கிறேன். உங்களுக்கு இன்று சுதந்திரம் கிடைத்திருக்கிறது. பெரும் அபிவிருத்தியை நாம் முன்னெடுத்திருக்கிறோம்.
பிரதான வீதிகள் புகையிரதப் பாதைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. கல்விக்கு ஊக்குவிப்பு வழங்குகின்றோம். இந்த நாட்டில் அகில இலங்கை ரீதியில் உங்கள் பிரதேச மாணவன் உயர்கல்வியில் கணிதத் துறையில் அதிக புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்திருக்கிறான். அந்த மாணவன் முழு இலங்கையிலும் முதன்மையானவனாக உள்ளான்.
ஆனால் இன்று பொதுஎதிரணியினர் கல்வித்துறையை தனியார்மயப்படுத்த முற்படுகின்றனர். அப்படியானால் வறுமைப்பட்ட மக்கள் கல்விகற்க முடியாத அபாய நிலையே உருவாகும். குறிப்பாக பல்கைலைக்கழங்கள், தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு பணஅறவீடு செய்யப்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எமது தலைமையின் கீழ் ஒருபோதும் கல்வி மற்றும் சுகாதாரம் தனியார் மயப்படுத்தப்படமாட்டாது. நான் எனது தேர்தல் விஞ்ஞானபத்தில் வடக்குக்கு ஒன்று தெற்குக்கு ஒன்று என்று எதையும் குறிப்பிடவில்லை. எல்லாமக்களையும் சமமாக மதித்து அபிவிருத்தியை மேற்கொள்வதற்காகவே தேர்தல் விஞ்ஞாபனம் முன்வைத்துள்ளேன்.
வடபகுதியில் உள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார், மாகாண சபை உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் ஆகியோர் உங்களுடைய பிரச்சினைகள் பற்றி என்னுடன் கலந்துரையாடுகின்றனர். அவர்கள் உங்களுக்காகக் குரல் கொடுக்கும் சிறந்த தலைவர்களாக உள்ளனர்.
எனவே நீங்கள் அவர்களை நம்புங்கள். இனப்பிரச்சினைகளுக்கு இரு தரப்பினரும் பேசி முடிவைத் தீர்மானிக்க முடியும் பேச்சுவார்த்தைக் குழுவை நான் அமைத்த போது அதற்குத் நாம் வரமாட்டோம் என்று சிலர் இருக்கின்றனர். இதற்கு நான் என்ன செய்ய முடியும்.
வடக்கு மாகாண சபைக்கு நான் ஒதுக்கிய நிதியில் 50 வீதம் கூட செலவிடப்படவில்லை. பணத்தை செலவிடாது எப்படி அபிவிருத்தியைச் செய்யமுடியும்? இதைப்பற்றி மக்களாகிய நீங்கள் சிந்திக்கவேண்டும். பல்வேறு எதிர்ப்புக்களுக்கு மத்தியில் இந்த மாகாண சபைத் தேர்தலை நான் நடத்தினேன்.
நான் ஜனநாயகத்தின் பால் வைத்திருந்த நம்பிக்கையால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வடமாகாண சபையில் வெற்றிபெறும் என்று தெரிந்துகொண்டு தேர்தலை நடத்தினேன். அவர்கள் வெற்றிபெற்றார்கள். ஆனால் அவர்களால் எதுவுமே செய்யமுடியவில்லை.
செலவிடுவதற்கு பணம் வழங்கப்பட்ட போதும் அதைச் செலவிடத் தெரியாமல் அபிவிருத்திக்குப் பயன்படுத்தத் தெரியாமல் திண்டாடுகின்றனர்.
உங்களது தேவைக்காக கிளிநொச்சியிலிருந்து இரணைமடு தண்ணீரை முயற்சிகள் எடுக்கப்பட்டன. அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனுமதிக்கவில்லை. எனவே உங்களது தேவைகருதி அந்தத் தண்ணீரை நான் கட்டாயம் பெற்றுத் தருவேன். - என்றார்.
தொடர்ந்து ஜனாதிபதி தமிழில் உரையாற்றினார். முன்னதாக பாலாலியில் இருந்து யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்குக்கு அருகில் ஹெலியில் வந்திறங்கிய ஜனாதிபதி மங்கல வாத்தியம் மற்றும் பாடசாலை மாணவர்களின் வரவேற்பு நடனத்துடன் மேடைக்கு அழைத்து வரப்பட்டார்.
இன்றைய நிகழ்வில் பல ஆயிரக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டார்கள்.
http://www.tamilwin.com/show-RUmtyBTWKbmv5.html

Geen opmerkingen:

Een reactie posten