இவர் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டிருந்தபோதும் போதுமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற முடியவில்லை. அதன் பின்னர் ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருந்தார்.
ஜனாதிபதி செயலகத்தினால் வாகனம் ஒன்றும் அலுவலகம் ஒன்றும் இவருக்கு வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நாட்டின் நல்லாட்சிக்காகவும், சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு கருதியும், மலையக அபிவிருத்தி தொடர்பான எதிர்பார்ப்புகளுடனும் தான் பொது எதிரணியில் இணைந்து கொண்டுள்ளதாக வீ. புத்திரசிகாமணி தெரிவித்துள்ளார்.
மஹிந்தவின் நாற்காலியில் மைத்திரியை வைக்க ஒன்றிணையவில்லை! சாபமான நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்க வேண்டும்: சோபித தேரர்
கொழும்பு பொது நூலகத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை கஷ்டப்பட்டு ஏற்படுத்திக்கொண்டு மகிந்த 18 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை மாத்திரமே கொண்டு வந்தார்.
தற்போது நடைமுறையில் இருப்பது தன்னிச்சையான ஜனாதிபதி பதவி. போரை முடிவுக்கு கொண்டு வர பங்களிப்பு செய்த சரத் பொன்சேகாவை இந்த ஜனாதிபதி பதவி காற்சட்டை அணிவித்து சிறைக்கு அனுப்பியது.
பொன்சேகாவை சிறையில் அடைத்தவர்கள் கே.பி. கருணா போன்றவர்களை சுத்தம் செய்து உப தலைவர் பதவிகளை கொடுத்து அரசாங்கத்துடன் இணைத்து கொண்டனர்.
சிங்கள, தமிழ், முஸ்லிம் என சகல இன மக்களும் ஐக்கியமாக வாழும் நாடே எமக்கு தேவை எனவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை இங்கு உரையாற்றிய முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, மக்களுக்கு எதிரான அபிவிருத்தியும் அரசியலுமே தற்போது நாட்டில் இருக்கின்றது என்றார்.
அவர் மேலும் கூறுகையில்,
2005 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மகிந்த சிந்தனை தேர்தல் விஞ்ஞாபனத்தில் எந்த இடத்திலும் போரை முடிவுக்கு கொண்டு வருவதாக வாக்குறுதி வழங்கவில்லை.
பிரபாகரனுடன் பேச்சுவார்த்தை நடத்தி, போர் நிறுத்த உடன்படிக்கையை பாதுகாப்பதாகவே அதில் கூறப்பட்டிருந்தது.
ஜாதிக ஹெல உறுமய மேற்கொண்ட நடவடிக்கைகளில் அடிப்படையிலேயே ஜனாதிபதியை போரை நோக்கி திருப்ப முடிந்தது. அத்துடன் அந்த போர் வெற்றியானது மகிந்த ராஜபக்ஷ தனித்து பெற்ற ஒன்றல்ல.
மகிந்த ராஜபக்ஷ அறிந்த ஐக்கியம் என்பது எதுவுமில்லை. மன்னார் கனிய எண்ணெய் வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து நாட்டிற்கு கிடைக்க வேண்டிய வருமானத்தை வளங்களையும் இல்லாமல் செய்தனர்.
மேலும் மகிந்த ராஜபக்ஷ மீண்டும் வெற்றிபெற்றால் புத்தளம் நிலக்கரி அனல் மின் நிலையத்தை சீனாவுக்கு விற்பனை செய்துவிடுவார்.
மத்தள விமான நிலையத்தின் மாதாந்த வருமானம் வெறும் 16 ஆயிரம் ரூபா மாத்திரமே இதற்காகவே மகிந்த ராஜபக்ஷ குடும்பத்தை வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
அதிவேக நெடுஞ்சாலைகளை நிர்மாணித்துள்ளதாக அரசாங்கம் கூறிய போதிலும் அதில் முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள்களில் செல்லும் சாதாரண மக்கள் செல்ல முடியாது. மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம், எத்தனோல், கசினோ வியாபாரிகளுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கம் எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTWKbmwy.html
Geen opmerkingen:
Een reactie posten