தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 24 januari 2015

புலம்பெயர்ந்த தமிழ் ஊடகவியலாளர்கள் எவ்வாறு நாடு திரும்புவது: சிவராம் ஞாபகார்த்த மன்றத்தின் இணைப்பாளர் சண்.தவராஜா கேள்வி

வெலே சுதாவிடமிருந்து மேலும் சில வாக்குமூலங்கள்
[ சனிக்கிழமை, 24 சனவரி 2015, 05:32.55 AM GMT ]
பாரிய ஹெரோயின் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த வெலே சுதா என அழைக்கப்படும் வசந்த குமாரவுக்கும் கொழும்பு மாவட்ட இளம் பாராளுமன்ற உறுப்பினருடன் இருந்த உறவு தொடர்பாக மேலும் பல ரசகியங்கள் பொலிஸார் விசாரனையில் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெலே சுதா என அழைக்கப்படும் வசந்த குமாரவினால் பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு அனுப்பபடும் ஹெரோயின் போதைப் பொருள் கொழும்பில் இருந்து வெளியேற்றப்படுவது இந்த இளம் பாராளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்பிலேயே என தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் இருவரும் பல சந்தர்ப்பங்களில் கொல்லுப்பிட்டியவில் அமைந்திருக்கும் வணிக வளாகம் ஒன்றில் சந்தித்து ஹெரோயின் போதைப் பொருள் வியாபாரம் தொடர்பாக கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் அச்சந்தர்பங்களில் இருவருக்கும் இடையில் பெரிய அளவிலான பணம் கொடுக்கல் வாங்கல்கள் இடம் பெற்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
வெலே சுதா என அழைக்கப்படும் வசந்த குமாரவிற்கும் முன்னாள் பொலிஸ் அதிகாரிக்கும் இடையில் இருந்த உறவு தொடர்பினால் தற்பொழுது வரை பல உண்மைகள் வெளிவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெலே சுதாவிற்கு கிடைத்த பணத்தில் குறிப்பிடப்பட்ட முன்னாள் பொலிஸ் அதிகாரிக்கு களனி பிரதேசத்தில் நிலம் ஒன்று பணத்திற்கு பெற்றுக்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்பொழுது குறித்த பொலிஸ் அதிகாரி நாட்டை விட்டு வெளியேறி உள்ளார் மேலும் அபுதாபியில் அவரால் வெளிநாட்டு பணம் மாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்தள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyBRYKcio6.html
இலங்கை விமான சேவைகள் தலைவராக அஜித் டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார்
[ சனிக்கிழமை, 24 சனவரி 2015, 06:27.39 AM GMT ]
இலங்கை விமான சேவைகளின் புதிய தலைவராக அஜித் டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
அஜித் டயஸ் தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் மற்றும் ஆடைத் தொழிலில் பல வருடம் அனுபவம் வாய்ந்தவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் இந்தப் பதவியில் நிசாந்த விக்ரமசிங்க கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொலிஸாரை மிரட்டிய 13 பேர் கைது!
[ சனிக்கிழமை, 24 சனவரி 2015, 06:42.50 AM GMT ]
ஜனாதிபதி தேர்தலின் போது கொழும்பு கொட்டஹென பிரதேசத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சட்டத்திற்கு புறம்பான சுவரொட்டியை அகற்றிய பொலிஸாரின் நெற்றியில் துப்பாக்கியை வைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் சம்பவத்தில் 13 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் 10 பேரை கைது செய்வதற்கு தேடிக்கொண்டிருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸாரின் கீழ் இயங்கும் இந்த விசேட விசாரணை குழுவிற்கு பொலிஸ் அதிகாரி மெவன் சில்வா பொறுப்பாக உள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ஆலோசகர் பாரத லக்ஷ்மனின் வாகன சாரதியும், துமிந்த சில்வாவிற்கு வாகன சாரதியாக செயற்பட்டவரும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொலன்னாவ உமஹிலி மைதானத்தில் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரச்சார மேடையை தாக்கிய சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு தொடர்பு உள்ளதாக பொலிஸார் விசாரணையை மேற்கொள்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBRYKcipz.html
புலம்பெயர்ந்த தமிழ் ஊடகவியலாளர்கள் எவ்வாறு நாடு திரும்புவது: சிவராம் ஞாபகார்த்த மன்றத்தின் இணைப்பாளர் சண்.தவராஜா கேள்வி
[ சனிக்கிழமை, 24 சனவரி 2015, 08:05.39 AM GMT ]
பல ஊடகவியலாளர்களின் கொலைகளுக்கு காரணமாக இருந்தவர்கள் இன்னும் சமூகத்தில் சுதந்திரமாக நடமாடிவரும் நிலையில், புலம் பெயர்ந்த தமிழ் ஊடகவியலாளர்கள் எவ்வாறு நாடு திரும்புவது? என்று சுவிட்ஸர்லாந்தை தளமாகக் கொண்டியங்கும் சிவராம் ஞாபகார்த்த மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
புதிய அரசாங்கம், புலம்பெயர் ஊடகவியலாளர்களை இலங்கைக்கு திரும்புமாறு விடுத்துள்ள கோரிக்கைக்குப் பதிலழிக்கும் வகையில், சிவராம் ஞாபகார்த்த மன்றத்தின் இணைப்பாளர் சண் தவராஜா வெள்ளிக்கிழமை (23) விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 'நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலையடுத்து இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. சகல இன மக்களும் அனுபவித்து வந்த கொடுமைகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு, ஊழலற்ற புதிய அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இவ்வேளையில், நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், அரசாங்க அதிருப்தியாளர்கள் ஆகியோரை, மீண்டும் நாட்டுக்குத் திரும்புமாறு புதிய அரசாங்கத்தின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று ஒரு சில சிங்கள ஊடகவியலாளர்கள் நாடு திரும்பியுள்ளதாக அறிகிறோம். இன்னும் சிலர் எதிர்வரும் நாட்களில் நாடு திரும்பவுள்ளதாக அறிகின்றோம். சிங்கள ஊடகவியலாளர்களை பொறுத்தவரை, அவர்கள் முன்னைய அரசாங்கங்களதும் அரச படைகளதும் அதிருப்திக்கு மாத்திரமே ஆளாகி இருந்தனர்.
ஆனால், தமிழ் ஊடகவியலாளர்கள் இதற்கும் அப்பால் தமிழ் இராணுவக் குழுக்களின் அச்சுறுத்தல்களுக்கும் முகம் கொடுக்க வேண்டி இருந்தது. எனவே, தமிழ் ஊடகவியலாளர்கள் நாடு திரும்பும் விடயத்தில் இப்போது முடிவு எடுக்க முடியாத சூழலே உள்ளது.
கடந்த காலங்களில் இலங்கையில் அநேக ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள். இன்று ஊடக சுதந்திரம் பற்றிப் பேசும் அநேகர், இவ்வாறு கொல்லப்பட்ட சிங்கள ஊடகவியலாளர்களைப் பற்றியே அதிகம் பேசுகிறார்கள். படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களான நிமலராஜன், ஜி. நடேசன் மற்றும் டி.சிவராம் போன்றவர்களைப் பற்றிப் பேசுவது குறைவு.
இத்தகையோரை கொலை செய்தவர்கள் இன்னமும் சமூகத்தில் சுதந்திரமாக உலாவரும் நிலையில், புலம் பெயர்ந்த தமிழ் ஊடகவியலாளர்கள் எவ்வாறு நாடு திரும்புவது? எனவே, புலம்பெயர் தமிழ் ஊடகவியலாளர்களை இலங்கைக்கு மீள அழைத்துக் கொள்வதில் புதிய அரசாங்கம் உண்மையாகவே அக்கறை கொண்டிருக்குமானால், கடந்த கால ஆட்சிகளின் போது, கொல்லப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்களின் கொலைகள் தொடர்பாகவும் ஊடக நிறுவனங்கள் தாக்கப்பட்டமை தொடர்பாகவும் நீதியான விசாரணைகளை நடாத்தி குற்றவாளிகளைத் தண்டிக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இதன் மூலம் மாத்திரமே, இலங்கையில் சட்டத்தின் ஆட்சி நிலவுகின்றது என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதுடன், புலம்பெயர்ந்த ஊடகவிலாளர்களும் நம்பிக்கையோடு நாடு திரும்ப முன்வருவார்கள் என்ற செய்தியை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
http://www.tamilwin.com/show-RUmtyBRYKcip4.html

Geen opmerkingen:

Een reactie posten