[ சனிக்கிழமை, 24 சனவரி 2015, 08:09.40 AM GMT ]
இதன் கீழ் எதிர்வரும் 28ஆம் திகதி பிற்பகல் 12.00மணிக்கு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெறவுள்ளதாக மண்முனை தென்மேற்கு(பட்டிப்பளை)தமிழரசுக்கட்சி கிளையின் தலைவர் சி.புஸ்பலிங்கம் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் “கொக்கட்டிச்சோலை படுகொலையின் 28ஆவது ஆண்டு வணக்க நிகழ்வும் சமகால அரசியல்”கருத்தரங்கும் என்னும் தலைப்பில் விசேட நிகழ்வு நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அன்றைய தினம் பிற்பகல் 2.00மணியளவில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் தமிழரசுக்கட்சியின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.
சிறப்பு அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.சுமந்திரன், பொன்.செல்வராஜா, சீ.யோகேஸ்வரன் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தலைவர் சி.புஸ்பலிங்கம் தெரிவித்தார்.
1987 ஜனவரி 28ஆம் திகதி கொக்கட்டிச்சோலை இரால் பண்ணையில் வேலையில் ஈடுபட்டிருந்த நூற்றுக்கு மேற்பட்டவர்கள் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர்.
இந்த கொலை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் ஜோசப்பரராஜசிங்கம் ஐ.நா.வின் கவனத்துக்கு கொண்டு சென்றதை தொடர்ந்து இக்கொலை பிரபல்யம் அடைந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyBRYKcip5.html
ஐக்கிய இலங்கைக்குள் தீர்வைப் பெறவேண்டிய முக்கிய நேரமிது: சி.பாஸ்க்கரா
[ சனிக்கிழமை, 24 சனவரி 2015, 08:22.06 AM GMT ]
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய சாதகமான சூழலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் உரையில் தெரிவித்த சிங்கள மக்களின் ஆதரவுடன் அரசியல் தீர்வை முன்னெடுக்க முயல்வதான செய்தியும் சிறுபான்மையினரை மதிக்கும் முக்கிய செயற்பாடாக மேல்மாகாண ஆளுனராக கே.சி லோகேஸ்வரன் நியமிப்பும் அரசின் நல்லெண்ணத்திற்கான மேலதிக செயற்பாடுகள்.
இக்காலத்தில் சிறுபான்மை தமிழ் அரசியல் தலைவர்கள் ஒற்றுமையாகவும் துரிதமாகவும் சாதுரியமாகவும் விட்டுக்கொடுப்புடனும் செயற்பட்டு ஐக்கிய இலங்கைக்குள் தீர்வைப் பெற வேண்டிய முக்கிய நேரமிது.
ஒருவர் பதவில் இருக்கும் பொழுது அந்தப் பதவியைக் நிரந்தரமாகக் கருதிக்கொண்டு மிகவும் மோசகரமான துஷ்பிரயோகங்களையும் சொந்த நாட்டு மக்களையே ஈவிரக்கமற்ற கொலை கடத்தல்களையும் சொத்து குவிப்புகளையும் செய்து அதே பதவியில் மீண்டும் இருக்கலாம் என்ற நினைப்பில் இருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்தவுக்கு வரலாற்று பாடமான எதுவும் நிரந்தரம் இல்லை என்பது மிகவும் பொருத்தமானது.
இலங்கை வரலாற்றிலே எதுவும் நிரந்தரம் இல்லை என்பது பல வரலாற்று உதாரணங்களைக் கொண்டுள்ளது.
1998ம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த ஜயவர்த்தன அவர்களுக்குப் பின் பிரேமதாஸ ஜனாதிபதியாவார் என்றால் அக்காலத்தில் யாரும் நம்புவதற்கு தயாரில்லாத சூழ்நிலையில் அன்றைய ஜாம்பவானாக இருந்த காமினி திசாநாயக்காவை பின்தள்ளி ஜனாதிபதி பிரேமதாஸ ஜனாதிபதியானார்.
இலங்கையில் இந்திய படை இருந்த காலமான 1987 ஜுலை தொடக்கம் மார்ச் 1990 வரையான காலப்பகுதிக்கு முன் ஒரு மாதத்திற்கு முன் ஒருவர் இந்தியப்படை வரும் என்றோ கூறியிருந்தாலோ அதே இந்தியப்படை படை இலங்கையில் விடுதலைப்புலிகளுடன் போரிடும் என்றோ மீண்டும் அதே படை திரும்பும் என்றோ நிகழ்வு நடைபெற்ற ஒரு மாதத்திற்கு முன் ஒருவர் கூறினால் யாரும் நம்புவதற்கு தயாராக இல்லை. ஆனால் அவை நடைபெற்று முடிந்தன.
ஜனாதிபதியாக பிரேமதாஸ இருந்த 1993ம் ஆண்டு காலத்தில் அன்றைய பிரதமரான டிங்கிரி பண்டா விஜயதுங்க ஜனாதிபதி ஆவார் என்று யாரும் கூறியிருந்தால் அதையும் நம்புவதற்கு தயாரில்லாத காலத்தில் ஜனாதிபதி பிரேமதாஸவின் தீடீர் மரணத்தால் ஜனாதிபதியானார் டிங்கிரி பண்டா விஜயதுங்க.
1994ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர் காமினி திசாநாயக்காவின் திடீர் மரணத்தால் ஜனாதிபதியானார் சந்திரிக்கா அம்மையார். இவைகள் வரலாற்று பதிவுகள்.
இவை எல்லாவற்றுக்கும் அப்பால் விடுதலைப் புலிகளுக்கெதிரான போரில் 2009ம் ஆண்டு விடுதலைப்புலிகள் அழிவார்கள் என்று சொல்லியிருந்தாலோ ஜெனரலாக இருந்த சரத் பொன்சேனா 2010ல் சிறையிலிருப்பாரென்று சொல்லியிருந்தாலோ நம்புவதற்கில்லாமலே இருந்தது.
இதே சிறையிலிருந்த ஜெனரலுக்கு சகல பதவிகளும் கிடைக்கும் என்றோ மேல் மாகாண ஆளுனராக ஒரு தமிழர் நியமிக்கப்படுவார் என்றோ சில மாதங்களுக்கு முன் கூறியிருந்தால் இதுவும் நம்ப முடியாததாகவே இருந்திருக்கும். ஆனால் நடந்தேறியது.
இது இலங்கை வரலாற்றில் எதுவும் நிரந்தரம் இல்லை என்ற சொல்லிற்கான ஆதாரங்கள் இக்கால கட்டத்தில் சிறுபான்மை கட்சிகள் ஒன்று சேர்ந்து தமிழ் மக்களின் விமோசனத்திற்கும் இனப்பிரச்சினை தீர்வுக்கு ஆவன செய்ய வேண்டிய இறுதி நேரமிது என்றார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRYKcip7.html
Geen opmerkingen:
Een reactie posten