தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 24 januari 2015

வலி. வடக்கில் மீண்டும் இராணுவ குடியிருப்பு பலகை! மக்கள் அதிர்ச்சி

இலங்கை வங்கியில் பெற்ற கடன் தொகை 19,000 மில்லியனை செலுத்தாத பிரமுகர்கள்
[ சனிக்கிழமை, 24 சனவரி 2015, 07:43.44 AM GMT ]
இலங்கை வங்கியில் கடனாக பெற்ற ரூபாய் 193,757,482,076 இன்று வரை மீள் செலுத்தாது இருப்பதாக பாராளுமன்ற பொதுக்குழு தெரிவிக்கின்றது.
இந்த தொகைகளை கடனாக அரச வங்கியான இலங்கை வங்கியில் பெற்றுக் கொள்ள முன்னைய ஜனாதிபதியும் ,நிதி அமைச்சருமான மகிந்த ராஜபக்ஷவே அனுமதி அளித்துள்ளார்.
இந்த தொகையை பெற்ற 33,675 நபர்கள் ஒரு தவணையைக் கூட மீள் செலுத்தவில்லையென தெரியவருகின்றது.
http://www.tamilwin.com/show-RUmtyBRYKcip1.html
வலி. வடக்கில் மீண்டும் இராணுவ குடியிருப்பு பலகை! மக்கள் அதிர்ச்சி
[ சனிக்கிழமை, 24 சனவரி 2015, 07:58.58 AM GMT ]
யாழ் வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தின் வாயில் பகுதியில் மீண்டும் "இராணுவ குடியிருப்பு" என்று அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றது.
இதன் காரணமான மக்கள் அதிர்ச்சியில் உள்ளார்கள்.
இந்த விளம்பரப் பலகை முன்பும் போடப்பட்டு பின்னர் அகற்றப்பட்டு இருந்தது. எனினும் மீண்டும் அந்த வாயிலில் வளைவு அமைக்கப்பட்டு மீண்டும் விளம்பரபடுத்தப்பட்டிருக்கின்றது.
புதிதாக ஆட்சியினை கைப்பற்றியிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தலமையிலான அரசு வடமாகாணத்தில் படையினரினால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் தமிழ் மக்களுடைய நிலங்களை விடுவிப்பதாக வாக்குறுதி வழங்கியிருக்கும் நிலையில், வலி,வடக்கு மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மக்கள், மீண்டும் தங்கள் சொந்த நிலங்களுக்கு திரும்பும் ஆவலுடன் உள்ளனர்.
மேலும் புதிய அரசு மீள்குடியேற்றம் தொடர்பிலான முழுமையான தகவல்களை தமக்கு தருமாறு கோரியதற்கிணங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சேகரித்துவரும் மீள்குடியேற்றம் தொடர்பிலாக தகவல் சேகரிக்கும் நடவடிக்கைக்கும், மக்கள் ஆர்வத்துடன் தங்கள் தகவல்களை வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் இராணுவ குடியிருப்பு என்ற பெயர் பலகை பொறிக்கப்பட்டிருப்பது குறித்த பகுதி மக்களுக்கு மீண்டும் கிடைக்குமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.
http://www.tamilwin.com/show-RUmtyBRYKcip3.html

Geen opmerkingen:

Een reactie posten