தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 2 januari 2015

வாக்குச்சீட்டுகளுக்கு இணையான வாக்குச்சீட்டுகள் பிரச்சார கூட்டங்களில் விநியோகம்?

ஜனாதிபதி தேர்தலின் போது பயன்படுத்தப்படவுள்ள வாக்குச்சீட்டுகளுக்கு இணையான வாக்குச்சீட்டுகள் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆனையாளரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹொட்டியாராச்சி முறைப்பாடு செய்துள்ளார்.
பலாங்கொடை பிரதேசத்தில் பிரதேச சபை ஒன்றின் தலைவரினால் இவ்வாறு வாக்குச்சீட்டுகள் ஆதரவாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைப்புக்கு தகவல் கிடைத்துள்ளது.
இது குறித்து தேர்தல் ஆணையாளர் மற்றும் இரத்தினபுரி பிரதித் தேர்தல்கள் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTWKbmwz.html

Geen opmerkingen:

Een reactie posten