நான் நல்ல பிசாசு யாழில் மஹிந்த…
வழமையான சுறுசுறுப்பு ஏதுமின்றி காணப்பட்ட மஹிந்தவின் முகம் அவரது தோல்வி பயத்தை வெளிப்படுத்துவதாக காணப்பட்டது. நீட்டி முழங்கி அவர் முன்னதாக பேசிக்கொண்டிருந்த டக்ளஸை இடையில் பேச்சை நிறுத்த தனது செயலாளர் ஊடக பணித்த மஹிந்த தனது உரையினை ஆற்றியிருந்தார்.
முன்னதாக அருகாக இருந்த சந்திரகுமாரினை டக்ளஸினது பேச்சை நிறுத்த மஹிந்த பணித்திருந்த போதும் அவர் சங்கடப்பட்டவாறிருந்தார்.
அண்மையில் இந்துக்கல்லூரியின் மாணவன் கணித பாட உயர்தரப்பரீட்சையில் முதலிடம் பெற்றமை தொடர்பில் தனது சாதனையாக இதனை பிரஸ்தாபித்த மஹிந்த வெறும் அபிவிருத்தி மட்டுமே பிரஸ்தாபித்துக்கொண்டார்.
இதேவேளை கொத்துக்குண்டுகளைப் போட்டு புலிகளை கொன்றது தானேயென என்று பொது எதிரணி வேட்பாளர் மைத்திரி தெரிவித்துள்ளார் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஆக மொத்தத்தில் கொத்துக்குண்டுகளை போட்டதை டக்ளஸ் ஒப்புக்கொண்டிருந்தார்.
http://www.jvpnews.com/srilanka/92502.html
மகிந்தவுடன் இணைந்தது கஜேந்திரன் அணி..??
பல பணக் கட்டுக்கள் பரிமாறப்பட்டுள்ளதாகவும் கூட்டமைப்பை உடைக்கும் பெறுப்பு செல்வராஜா கஜேந்திரனிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய அரசியல் விடயங்கள் பொ.கஜேந்திரன் மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளர் மணிவண்ணனிடம் வழங்கப்பட்டுள்ளதாவும் குறிப்பிட்டுள்ள எமது செய்தியாளர் வழமையான முறையில் இச் செய்தியின் மேலதிக செய்திகள் இணைக்கப்படும்.
இதே செல்வராஜா கஜேந்திரனின் அண்ணன் ஒருவர் கைது செய்யப்பட்டு 2009 காலப்பகுதியில் விடுதலை செய்வதில் டக்ளஸ் முதன்மை வகித்தவர் அந்த நன்றியால் இன்று வரை டக்ளசின் எந்த அடாவடித் தனத்திற்கும் எதிராக போராட வில்லை.
பொ.கஜேந்திரன் இவர் 2009 வெள்ளைக் கொடி விவகாரததில் நேரடி தொடர்புடையவர் இன்று வரை இவர் அது தொடர்பில் கதைப்பதில்லை இவர்களின் இன்றைய கடும் தீவிர அரசியலில் நிலைத்து நிற்க முடிகிறது என்றால் மேற் குறிப்பிட் செயல்களின் உதவியும், அதனை மையமாக வைத்தே அரசு இன்று இவர்களிடம் கதைப்பதாகவும் மேலும் செய்திக் குறிப்பில் சுட்டிக் காட்டியுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/92499.html
Geen opmerkingen:
Een reactie posten