தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 23 januari 2015

போர்க்குற்றங்களை விசாரணை செய்ய இலங்கையில் புதிய சுயாதீன ஆணைக்குழு



புழுதியாறு ஏற்று நீர்ப்பாசனத்திட்டம் 32 மில்லியன் ரூபா செலவில் வடக்கு விவசாய அமைச்சால் நிர்மாணம்
[ வெள்ளிக்கிழமை, 23 சனவரி 2015, 01:57.21 PM GMT ]
கிளிநொச்சி மாவட்ட மாயவனூரில் புழுதியாறு ஏற்று நீர்ப்பாசனத்திட்டம் நிர்மாணிக்கப்பட்டு பயனாளிகளிடம் வடக்கு மாகாண முதல்வர் க.வி. விக்னேஸ்வரனால் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.
மாயவனூர் பகுதி மக்கள் குடிப்பதற்கும் விவசாயத்துக்கும் தாம் நீரின்றி அவலப்படுவதாக வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனுக்கு முறைப்பாடு செய்திருந்தனர்.
இதையடுத்து, விவசாய அமைச்சின் 2014ஆம் ஆண்டுக்குரிய மாகாணக் குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதியில் இருந்து 32 மில்லியன் ரூபா நீர்ப்பாசனத் திணைக்களத்துக்கு ஒதுகீடு செய்யப்பட்டு புழுதியாறு ஏற்று நீர்ப்பாசனத்திட்டம் உருவாக்கப்பட்டது.
கடந்த யூன் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தின் கட்டுமானப்பணிகள் தற்போது முடிவடைந்த நிலையில் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனால் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் விநியோகிக்கப்படும் நீரைப் பயன்படுத்தி 100 விவசாயிகள் தலா ஒரு ஏக்கர் வீதம் 100 ஏக்கர்களில் மேட்டுநிலப் பயிர்ச் செய்கையை மேற்கொள்ள முடியும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கேற்ப, 100 பயனாளிகளுக்கு விவசாயத் திணைக்களத்தால் பல்வேறு பயிர்களின் விதைகள் அடங்கிய பொதிகளும், பழமரக்கன்றுகளும் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.
அத்தோடு, நீண்டகாலம் கைவிடப்பட்டதால் பற்றைகளால் மூடப்பட்டிருக்கும் காணிகளைத் துப்பரவு செய்து பயிர்ச்செய்கையை மேற்கொள்ளுவதற்கு வசதியாக பயனாளிகள் அனைவருக்கும் நீர்வேலியில் உருவாக்கப்பட்ட தரமான கத்திகளும் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியில் நாடளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வடமாகாணக் கல்வி அமைச்சர் த. குருகுலராஜா, வடமாகாண சபை உறுப்பினர் ப. அரியரத்தினம், வடமாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார், வடமாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் சோ.சிவபாதம், மற்றும் திணைக்களங்களின் பிரதிப்பணிப்பாளர்கள், பொறியியலாளர்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.
இதுவரைகாலமும் புழுதிமண்டலமாகக் காட்சியளித்த மாயவனூரில் வாய்க்கால்களின் ஊடாக நீர் பொங்கிப் பாய்வதைக் காண்பதற்காக ஏராளமான மாயவனூர் மக்கள் மகிழ்ச்சிப் பொங்கக் கூடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyBRXKcjv5.html
போர்க்குற்றங்களை விசாரணை செய்ய இலங்கையில் புதிய சுயாதீன ஆணைக்குழு
[ வெள்ளிக்கிழமை, 23 சனவரி 2015, 01:07.02 PM GMT ]
இலங்கையின் உள்நாட்டு போரின்போது இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய புதிய சுயாதீன ஆணைக்குழு ஒன்று அமைக்கப்படவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த ஆணைக்குழு, முழுமையாக நிபுணர்களை கொண்டு நடத்தப்படும். அத்துடன் இந்தக்குழு மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முழுமையான விசாரணைகளை நடத்தும் என்றும் சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அனைத்து கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பாரிய அழுத்தத்துக்கு உள்ளாகியிருந்தார்.
அதேநேரம் ஐக்கிய நாடுகளின் விசாரணையாளர்களை நாட்டுக்குள் அனுமதிக்கவும் அவர் இணக்கம் வெளியிடவில்லை.
http://www.tamilwin.com/show-RUmtyBRXKcjv3.html

Geen opmerkingen:

Een reactie posten