தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 23 januari 2015

சவூதி மன்னரின் மறைவுக்கு ஜனாதிபதி மைத்திரி இரங்கல்

பொது மக்களின் மின் கட்டணத்தில் கோத்தபாயவின் தனியார் பல்கலைக்கழகம்
[ வெள்ளிக்கிழமை, 23 சனவரி 2015, 12:25.36 PM GMT ]
தேசிய சேமிப்பு வங்கியில் அதிக வட்டியில் 10 மில்லியன் கடனை பெறுமாறு இலங்கை மின்சார சபைக்கு அழுத்தம் கொடுத்து அதன் மூலம் கோத்தபாய ராஜபக்ஷ கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரி என்ற பெயரில் தனது தனியார் பல்கலைக்கழகத்தை ஆரம்பித்ததாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அந்த பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தையும் வைத்தியசாலையையும் ஆரம்பிக்க மின் கட்டணங்களை அதிகரித்து மக்களிடம் இருந்து பணத்தை அறவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
மருத்துவ பீடத்தின் வைத்தியசாலையை நிர்மாணிப்பதற்காக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் மின்சார சபைக்கு அழுத்தம் கொடுத்து தேசிய சேமிப்பு வங்கியில் அதிக வட்டியில் கடனை பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறு தனிப்பட்ட பண இலாபத்திற்காக மக்களிடம் கொள்ளையிடும் நடவடிக்கைகளை ராஜபக்ஷ குடும்பத்தினர் அனைத்து சகோதரர்களும் அரசாங்கத்தின் இறுதி வரை மேற்கொண்டதாகவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

மேல்மாகாண ஆளுநராகிறார் கே.சி.லோகேஸ்வரன்
[ வெள்ளிக்கிழமை, 23 சனவரி 2015, 12:49.23 PM GMT ]
இலங்கையின் மூன்று மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நியமனங்களை வழங்கியுள்ளார்.
மேல் மாகாணத்துக்கு முன்னாள் ராஜதந்திரியும் பொருளாதார நிபுணருமான கே.சி.லோகேஸ்வரன் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்மாகாணத்துக்கு முன்னாள் அமைச்சர் ஹேமகுமார நாணயக்கார நியமிக்கப்பட்டுள்ளார்.
வடமேல் மாகாணத்துக்கு முன்னாள் அமைச்சர் அமரா பியசீலி ரட்நாயக்க நியமனம் பெற்றுள்ளார் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.


சவூதி மன்னரின் மறைவுக்கு ஜனாதிபதி மைத்திரி இரங்கல்
[ வெள்ளிக்கிழமை, 23 சனவரி 2015, 01:33.19 PM GMT ]
சவூதி அரேபிய மன்னர் அப்துல் பின் அசீஸின் மறைவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
90 வயதையுடைய சவூதி அரேபிய மன்னர் உடல்நலக் குறைவு காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்தார்.
இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால இன்று காலை கொழும்பில் உள்ள சவூதி தூதரகத்துக்குச் சென்று குறிப்புப் புத்தகத்தில் கையெழுத்திட்டதுடன், அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியுடன் அமைச்சர் ரவூப் ஹக்கீமும் கலந்துகொண்டார்.
இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையில் 1974ம் ஆண்டிலிருந்து சிறந்த நட்புறவு தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyBRXKcjv4.html

Geen opmerkingen:

Een reactie posten