[ வெள்ளிக்கிழமை, 23 சனவரி 2015, 02:08.38 PM GMT ]
குற்றப்புலனாய்வுத்துறையினர் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸிடம் இன்று மாலை வாக்குமூலத்தை பெற்றதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பில், மேல்மாகாணசபை உறுப்பினர் உதய கம்மன்பில, முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உட்பட்டவர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.
வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த விசாரணைகள் இடம்பெறுகின்றன.
இதேவேளை இந்தக்குற்றச்சாட்டின் பேரில் பிரதம நீதியரசர் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
எனினும் தமக்கு இராஜதந்திர பதவி ஒன்று வழங்கப்பட்டால் மாத்திரமே பதவியை விட்டு விலக முடியும் என்று மொஹான் பீரிஸ் கோரிக்கை விடுத்துள்மை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyBRXKcjv6.html
யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களின் பா.உறுப்பினர் சி.சிறீதரனின் வேண்டுகோளுக்கிணங்க இத்தாலி பலர்மோ தமிழ் தேசிய மாணவர் கூட்டமைப்பு கிளிநொச்சி மாவட்டத்தின் கனகாம்பிகை குளத்தின் மாணவர்களின் கல்வி வளர்ச்சி கருதி அப்பியாசக்கொப்பிகளை வழங்கியுள்ளது.
இத்தாலி பலர்மோ தமிழ்த் தேசிய மாணவர் கூட்டமைப்பு கனகாம்பிகைகுளம் கிராம மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் அன்பளிப்பு
[ வெள்ளிக்கிழமை, 23 சனவரி 2015, 02:20.28 PM GMT ]
இந்த நிகழ்வு கனகாம்பிகைகுளம் மாதர்கிராம அபிவிருத்தி சங்க தலைவர் சரிதாதேவி தலைமையில் நடைபெற்றது.
இதில் கரைச்சி பிரதேச சபையின் உபதவிசாளர் நகுலேஸ்வரன், கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்களான குமாரசிங்கம், சுகந்தன், பா.உறுப்பினர் சி.சிறீதரனின் செயலாளரும் கட்சியின் கிளிநொச்சி மாவட்டத்தின் உபதலைவருமான பொன்.காந்தன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டத்தின் இளைஞர் அணி தலைவர் சுரேன், கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் திருநாவுக்கரசு, மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் அமீனா உட்பட பெற்றார்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் பங்குபற்றி கருத்துத் தெரிவித்த கரைச்சி பிரதேச சபையின் உபதவிசாளர் நகுலேஸ்வரன்,
மாற்றத்திற்கான ஒரு சூழலை உருவாக்கி தற்பொழுது அதன் விளைவுகளை நோக்கி பயணித்திருக்கும் பொழுதில் எம்மக்களிடம் பல்வேறு எதிர்பார்ப்புக்கள் உண்டு.
இந்த எதிர்பார்ப்புக்கள் முழுமையாக நிறைவேறுமா அல்லது எமது பாதையில் இடர்பாடுகள் ஏற்படுமா என்ற கேள்விகளும் உண்டு.
ஆனாலும் நாம் பல்வேறு நிலைகளை கடந்த காலங்களில் கண்டுவந்தவர்கள் என்ற நிலையில் தீர்மானங்களை தெளிவாக எடுக்கின்ற ஆற்றல் எமது மக்களிடம் இப்பொழுது எழுந்திருக்கின்றது.
மேய்ப்பனற்ற மந்தைகள் போல்லலாமல் வரலாற்றை சிறந்த வழிகாட்டியாக கொண்டு எமது மக்கள் தெளிந்திருக்கின்றார்கள்.
இந்த தெளிவின் வெளிப்பாடுதான் கடந்த எட்டாம் திகதி தமிழர்களின் வாக்குகளாக மாறியது. அதனால் இனிவரும் தடைகளையும் எமது மக்கள் வெல்கிற தந்திருத்தை பெற்றிருப்பார்கள் என்பதே அநேகரின் கணிப்பாக இருக்கின்றது.
அதற்கு இனிவரும் காலங்களிலும் எமது இலட்சிய வேட்கையை சிதைப்பதற்கு போடப்படுகின்ற மாயவலைகளில் வீழ்ந்துவிடாமல் மாற்றுத்துக்காலத்தை எமக்கு சாதகமாக மாற்ற நாம் நாமாக இருக்கவேண்டியது அவசியம் என தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRXKcjwy.html
வெலிக்கடை சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த விசேட ஆணைக்குழு
[ வெள்ளிக்கிழமை, 23 சனவரி 2015, 02:20.16 PM GMT ]
கடந்த 2012ம் ஆண்டு நவம்பர் மாதம் 9ம் திகதி வெலிக்கடைச் சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தில் பெரும் எண்ணிக்கையிலான கைதிகள் கொல்லப்பட்டிருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆணைக்குழு ஒன்றை நிறுவியிருந்தார். எனினும் அந்த விசாரணைக் குழு, சம்பவம் தொடர்பில் சரியான விசாரணைகளை நடத்தவில்லை என மனித உரிமை அமைப்புக்களும் எதிர்க்கட்சிகளும் குற்றம் சுமத்தியிருந்தன.
இதன் அடிப்படையில் தற்போது புதிய விசாரணைக்குழுவொன்றை அரசாங்கம் நிறுவியுள்ளது.
உயர் நீதிமன்ற நீதவான் விமல் நம்புவசம் இந்த ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஓய்வு பெற்ற பிரதிப் பொலிஸ்மா அதிபர் அசோக விஜயதிலக்க, ஓய்வு பெற்ற நிர்வாக அதிகாரி சட்டத்தரணி கே.எஸ்.லியனகே ஆகியோர் இந்தக் குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.
சம்பவத்தில் 30 கைதிகள் வரையில் கொல்லப்பட்டதுடன், 40க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBRXKcjv7.html
Geen opmerkingen:
Een reactie posten