தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 25 januari 2015

சட்டமா அதிபர்கள் மாநாட்டில் மைத்திரி மீது முட்டைவீச முயன்றாரா சீனர்?

கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடந்த சட்டமா அதிபர்கள் மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்கச் சென்ற போது, அங்கு பணியாற்றிய சீனர் ஒருவரிடம் இருந்து பாதுகாப்பு அதிகாரிகளால் முட்டை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த திங்கட்கிழமை, பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில், நடந்த மாநாட்டுக்கு மைத்திரிபால சிறிசேன சென்ற போது, கடுமையான பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
மாநாட்டு மண்டப வளாகத்தில் உள்ள பிரதான நுழைவாயிலில் சீனர் ஒருவர் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
அவரைச் சோதனையிட்ட போது, பாதுகாப்புச் சோதனைக் கருவி அபாய எச்சரிக்கை ஒலி எழுப்பியது.
அதையடுத்து பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையிட்ட போது, அவரிடம் இருந்து முட்டை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
அவர் அந்த முட்டையை அதிபர் மைத்திரிபால சிறிசேன மீது வீசுவதற்காக கொண்டு வந்திருக்கலாம் என்று பாதுகாப்பு அதிகாரிகள் சந்தேகம் கொண்டனர்.
அவரைச் சிங்களத்தில் விசாரித்த போது, சீன மொழியில் பதில் வந்தது.
தனது பதில் அவர்களுக்கு புரியவில்லை என்பதை தெரிந்து கொண்ட, சீனர் சைகை மொழியில் சாப்பிடுவதற்காகவே முட்டையைக் கொண்டு வந்ததாக விளங்கப்படுத்தினார்.
அதையடுத்து அந்த முட்டையை உடைந்து விழுங்க வைத்த பின்னரே, சீனரை விட்டு பாதுகாப்பு அதிகாரிகள் விலகிச் சென்றனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBRZKcixy.html

Geen opmerkingen:

Een reactie posten