தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 25 januari 2015

பலிக்­கடா ஆக்­கப்­ப­டு­வாரா கோத்­தபாய?

ஜனா­தி­பதித் தேர்­தலில் மஹிந்த ராஜபக்ச தோல்வி கண்­ட­தை­ய­டுத்து, கடந்த ஆட்­சியின் கோர­மு­கங்கள் படிப்­ப­டி­யாக அனைத்துத் தரப்­பி­ன­ராலும் வெளிக்­கொ­ண­ரப்­பட்டு வரு­கின்­றன.
படு­கொ­லை­களில் தொடங்கி, ஊழல்கள், மோச­டிகள் என்று சட்­டத்­துக்கு முர­ணான எல்லா கைங்­க­ரி­யங்­க­ளிலும், முன்­னைய ஆட்சி கைதேர்ந்­தி­ருந்­தது என்­பது இப்­போது மெல்ல மெல்ல வெளிச்­ச­மாகி வரு­கி­றது.
கடைசி வரை மஹிந்த ராஜபக்சவைத் துதி­பாடிக் கொண்­டி­ருந்­த­வர்கள் மட்­டு­மன்றி, அவ­ரையே கட­வு­ளா­கவும், கட­வு­ளுக்கு அடுத்­த­தா­கவும் நினைத்துக் கொண்­ட­வர்­களும் கூட, இப்­போது தமது நிலையை மறு­ப­ரி­சீ­லனை செய்யத் தொடங்­கி­யுள்­ளனர்.
ஏனென்றால், கடந்த ஆட்­சியின் கோர­முகம் அத்­த­கை­யது.
தமிழ் மக்­க­ளுக்கு மட்டும் தான், முன்­னைய ஆட்சி அநீ­தியை இழைத்­தது என்­பது தவ­றான கருத்து. முன்­னைய ஆட்­சியை நிலை­நி­றுத்திக் கொள்­வ­தற்குத் தடை­யாக இருந்­த­வர்கள் எவ­ரா­யி­ருந்­தாலும், இன, மத,மொழி வேறு­பா­டு­க­ளின்றி துடைத்­தெ­றி­யப்­பட்­டனர். ஊட­க­வி­ய­லா­ளர்கள், அர­சி­யல்­வா­திகள் கூட படு­கொ­லை­களில் இருந்து தப்­பிக்க முடி­ய­வில்லை.
விடு­தலைப் புலிகள் என்ற போர்­வையில் பல கொலைகள் நடத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும், இப்­போது சந்­தே­கங்கள் எழுப்­பப்­ப­டு­கின்­றன. இவை குறித்து விசா­ர­ணைகள் நடத்­தப்­ப­ட­வுள்­ள­தா­கவும் புதிய அர­சாங்கம் கூறு­கி­றது. இத்­த­கைய நிலையில், மீண்டும் ராஜபக்ச யுகம் ஒன்று உரு­வா­காமல் தடுப்­பதன் அவ­சியம் குறித்து இப்­போது பர­வ­லாகப் பேசப்­ப­டு­கி­றது.
இது தனியே உள்­நாட்டு முயற்­சி­யாக மட்­டு­மன்றி, ஒரு சர்­வ­தேச முயற்­சி­யா­கவும் அமைய வேண்டும் என்ற கருத்து, காணப்­ப­டு­கி­றது.
இப்­போதும் கூட மஹிந்த ராஜபக்ச நல்­லவர்தான், அவரைச் சுற்­றி­யி­ருந்த குடும்­பத்­தினர் தான் எல்­லா­வற்­றையும் கெடுத்து விட்­டனர் என்ற கருத்து அவ­ரது முன்­னைய, இப்­போ­தைய சகாக்கள் பல­ரி­டமும் உள்­ளது.
ஜனா­தி­பதித் தேர்­த­லுக்கு முன்னர், அவ­ரது பக்­கத்தில் இருந்து கொண்டே முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா இந்தக் கருத்தைக் கூறி­யி­ருந்தார்.
இப்­போது வாசு­தேவ நாண­யக்­கார கூட அவரை நல்­லவர் என்றுதான் கூறு­கிறார்.
ஆனால், மஹிந்த ராஜபக்சவை இன்­னமும் நல்­லவர் என்று நம்­பு­கின்­ற­வர்கள் கூட, அவ­ரது சகோ­த­ரர்கள் மற்றும் குடும்­பத்­தினர் நல்­ல­வர்­க­ளாக இருந்­தனர் என்று சான்று கொடுக்கத் தயா­ராக இல்லை.
மஹிந்­தவின் ஒன்­பது ஆண்டு ஆட்­சிக்­கா­லத்தில், அவ­ரது குடும்­பத்­தி­னரே எல்­லா­மா­கவும் இருந்­தனர். முடி­வு­களை எடுப்­பதும் அவர்­களே, அதி­கா­ரங்­களைப் பயன்­ப­டுத்­து­வதும் அவர்­களே, வர­வு-­– செ­லவுத் திட்­டத்தை பெரும்­பாலும் பங்கு போட்டுக் கொள்­வ­துவும் அவர்­களே, என்று எல்­லா­வற்­றை­யுமே அவர்­களே தீர்­மா­னித்­தனர்.
இதனால் தான் மஹிந்த ராஜபக்சவை சுற்­றி­யி­ருந்த அவ­ரது குடும்­பத்­தி­னரே அவ­ரது பல­மாகத் திகழ்ந்­தனர்.
மஹிந்­த­ ரா­ஜபக்சவுக்கும் கோத்­தபாய ராஜபக்சவுக்கும் இடையில் இருந்த நெருக்­க­மான உறவு தான் போரை முடி­வுக்குக் கொண்டு வர உத­வி­யது என்று, தந்­தையின் தோல்­விக்குப் பின்னர் நாமல் ராஜபக்ச குறிப்­பிட்­டி­ருந்தார்.
அதனால் தான், 2006ம் ஆண்­டி­லேயே கோத்­தபாய ராஜபக்சவுக்கு புலிகள் குறி­வைத்து தாக்­கி­யி­ருந்­தனர் போலும்.
மஹிந்த ராஜபக்சவைப் பல­வீ­னப்­ப­டுத்­து­வ­தற்கு அவ­ரது சகோ­த­ரர்­களை அவ­ரிடம் இருந்து பிரிக்க வேண்டும் என்ற கருத்தே காணப்­பட்­டது.
ஆனாலும், ஜனா­தி­பதித் தேர்­தலில் அவர்கள் எல்­லோரும் அருகில் இருந்த போதிலும், மஹிந்த ராஜபக்சவின் தோல்­வியை தடுக்க முடி­ய­வில்லை.
அவர்­களின் கண் முன்­பா­கவே அலரி மாளி­கையில் இருந்து வெளி­யேறும் நிலை ஏற்­பட்­டது. இப்­போது, மஹிந்த ராஜபக்ச அடி­பட்ட புலி­யாக பதுங்கிக் கிடந்­தாலும், அவரால் இனி எழவே முடி­யாது என்று ஒரு போதும் கூற முடி­யாது.
நாட்டின் அதி­கா­ரத்­திலும் அவர் இல்லை, கட்­சியின் அதி­கா­ரத்­திலும் அவர் இல்லை- பிறகு எப்­படி அவரால் மீண்­டெழ முடியும் என்று ஒரு­போதும் கருதிவிட முடி­யாது.
மஹிந்த ராஜபக்சவின் வீழ்ச்­சியால் பல­வீ­னப்­பட்டுப் போயுள்ள சிங்­கள இன­வாத சக்­தி­களும் சரி, முற்­போக்கு சக்­தி­களும் சரி அவரை வைத்து தாம் மீண்டும் எழுந்து நிற்­கவே முயற்­சிக்­கின்­றன.
மஹிந்த ராஜபக்சவை முன்­னி­லைப்­ப­டுத்தி, புதிய அர­சியல் கட்சி ஒன்றை உரு­வாக்கப் போவ­தான செய்­தி­க­ளையும் ஊட­கங்­களில் கவ­னிக்க முடி­கி­றது.
மஹிந்த ராஜபக்சவை மீண்டும் அர­சி­ய­லுக்கு வர அனு­ம­திக்கக் கூடாது என்ற கருத்தைக் கொண்­டுள்­ள­வர்­க­ளுக்கு ஈடாக, அவரை மீண்டும் அர­சி­ய­லுக்குள் கொண்டு வரு­வதில் ஆர்வம் கொண்­டுள்­ள­வர்­களும் இருக்­கி­றார்கள்.
எனவே, மஹிந்த ராஜபக்சவின் இப்­போ­தைய வீழ்ச்­சியை நிரந்­த­ர­மா­ன­தாக எவரும் அவ்­வ­ளவு இல­கு­வாக தப்­புக்­க­ணக்குப் போட்டு விடக்­கூ­டாது.
இன்­னொரு விட­யமும் உள்­ளது, மஹிந்த ராஜபக்சவும் அவ­ரது ஆத­ர­வா­ளர்­களும் எந்­த­ளவு அழுத்­தங்­க­ளுக்கு உள்­ளாக்­கப்­ப­டு­கி­றார்­களோ, அதுவும், அவர்­களை வீறுடன் எழுந்­தி­ருக்கச் செய்து விடக் கூடும்.
கண்­டியில் வைத்து தனது வீடு சோத­னை­யி­டப்­பட்­டது குறித்து அவர் வெளி­யிட்ட கருத்து, அத்­த­கைய வாய்ப்­பு­களை நிரா­க­ரிக்க இட­ம­ளிக்­க­வில்லை.
எனவே, இப்­போ­தைய அர­சாங்கம் மட்­டு­மல்ல, இப்­போ­தைய மாற்­றத்­துக்குத் துணை நின்ற சக்­திகள் அனைத்­துமே, மஹிந்த ராஜபக்சவின் மீள்­வ­ரு­கையை கன­வாக நினைத்துக் கொள்ள முடி­யாது.
ஆனால், அது எத்­த­கைய ஆபத்தை விளை­விக்கும் என்­பதை அனு­மா­னிப்­பது எவ­ராலும் கடி­ன­மான காரி­ய­மல்ல. அத்­த­கைய மீள்­வ­ரு­கையை சர்­வ­தேச சமூ­கமும் விரும்­பாது என்­பதை, பெரும்­பா­லான நாடு­களின் கருத்­து­களில் இருந்து புரிந்­து­கொள்ள முடி­கி­றது. இப்­போ­தைய அர­சாங்­கத்தைப் பல­வீ­னப்­ப­டுத்­தாமல், பாது­காப்­பது மேற்­கு­ல­கி­னதும், இந்­தி­யா­வி­னதும் அக்­க­றைக்­கு­ரிய விட­ய­மா­கவே உள்­ளது.
இதனால், அமெ­ரிக்கா உள்­ளிட்ட மேற்­கு­லக நாடு­களின் அடுத்­த­கட்ட நகர்­வுகள் சற்று மாறு­பட்­ட­தாக இருக்­கலாம் என்றே தெரி­கி­றது.
அமெ­ரிக்க இரா­ஜ­தந்­தி­ரிகள், பேரா­சி­ரி­யர்கள் சிலர் வெளி­யிட்­டி­ருக்கும் கருத்­துகள், தற்­போ­தைய அர­சாங்கம் பல­வீ­னப்­ப­டுத்­தப்­ப­டாமல் பாது­காக்­கப்­பட வேண்டும் என்­பதை வலி­யு­றுத்­து­வ­தாக அமைந்­துள்­ளது.
அதற்குக் காரணம், இலங்­கையில் கடந்த ஒரு தசாப்த காலத்தில், ஏற்­பட்­டுள்ள மோச­மான மனித உரி­மைகள் நிலை, உள்­ளிட்ட சீர­ழி­வு­களில் இருந்து, முன்­னேற்றம் காண இந்த அர­சாங்கம் பத­வியில் நீடிக்க வேண்டும் என்ற கருத்து அவர்­க­ளிடம் காணப்­ப­டு­கி­றது.
ஜன­நா­யகம், நல்­லாட்சி என்­ப­ன­வற்றை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு இப்­போ­தைய அர­சாங்­கத்தை தம்மால் (மேற்­கு­ல­கினால்) வளைக்க முடியும் என்று அவர்கள் கரு­து­கி­றார்கள்.
எனவே எப்­ப­டி­யா­வது, மஹிந்த ராஜபக்ச மீண்டும் இலங்கை அர­சி­யலில் தலை­யெ­டுக்­காத வகையில், அவர்கள் தமது நகர்­வு­களை முன் கொண்டு செல்லக் கூடும்.
இந்தக் கட்­டத்தில், இலங்­கையின் இப்­போ­தைய அர­சாங்­கத்­துக்கும், அமெ­ரிக்கா தலை­மை­யி­லான மேற்­கு­ல­கிற்கும், முரண்­நிலை வரக்­கூ­டிய ஒரே விடயம், ஐ.நா. மனித உரி­மைகள் பேரவை நடத்தும் விசா­ர­ணை­யாகத் தான் இருக்க முடியும்.
இந்த விசா­ர­ணைக்கு இலங்கை அர­சாங்­கத்­தினால் ஒத்­து­ழைக்­கவும் முடி­யாது, அடுத்த கட்­டத்தில், குற்­ற­வா­ளிகள் என்று முன்­னி­லைப்­ப­டுத்­தப்­ப­டு­வோரை சர்­வ­தேச நீதி­மன்­றத்தில் பாரப்­ப­டுத்­தவும் முடி­யாது.
ஏனென்றால், இது இலங்­கையில் பெரும் கொந்­த­ளிப்பை ஏற்­ப­டுத்தும், இப்­போ­தைய அர­சாங்­கத்தின் கூட்­டா­ளிகள் கூட அதனை ஏற்­க­மாட்­டார்கள்.
ஏற்­க­னவே யாரையும் சர்­வ­தேச விசா­ர­ணைக்கு ஒப்­ப­டைக்­க­மாட்டோம் என்று வாக்­கு­றுதி கொடுத்துத் தான் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆட்­சிக்கு வந்தார்.
மஹிந்த ராஜபக்ச அலரி மாளி­கையில் இருந்து வெளி­யேறும் போது கூட, ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் அத்­த­கைய வாக்­கு­று­தியை பெற்றுக் கொண்டு தான் அமை­தி­யாக வெளி­யேறிச் சென்­றி­ருந்தார்.
எனவே, சர்­வ­தேச விசா­ர­ணைக்கு மஹிந்த ராஜபக்சவையோ அவ­ரது குடும்­பத்­தி­ன­ரையோ அர­சாங்­கத்­தினால் கைய­ளிக்க முடி­யாது.
அதே­வேளை, அமெ­ரிக்­கா­வி­னாலும், ஏற்­க­னவே தொடங்­கப்­பட்டு விட்ட விசா­ர­ணையை இடை­நி­றுத்­தவோ அல்­லது அப்­ப­டியே தூக்கிக் குப்பைக் கூடைக்குள் போடவோ முடி­யாது.
மஹிந்த ராஜபக்சவை எப்­போதும் மிரட்­டு­கின்ற ஒரு ஆயு­த­மாக அதுவே அமெ­ரிக்­கா­வுக்குப் பயன்­படப் போகி­றது.
எனவே, ஐ.நா. விசா­ரணை அறிக்­கையை அவ்­வ­ளவு சுல­பத்தில் அமெ­ரிக்கா கைவிடும் என்று எதிர்­பார்க்க முடி­யாது.
அதே­வேளை, ஐ.நா. விசா­ரணை, இலங்­கையின் புதிய அர­சாங்­கத்தைப் பல­வீ­னப்­ப­டுத்­து­வ­தையும், இலங்கை அர­சுக்கும் தனக்கும் இடை­யி­லான உறவைச் சீர்­கு­லைப்­ப­தையும் அமெ­ரிக்கா அனு­ம­திக்­காது.
இதனால் தான், 1992ஆம் ஆண்டு தொடக்கம் 1995ஆம் ஆண்டு வரை இலங்­கைக்­கான அமெ­ரிக்கத் தூது­வ­ராகப் பணி­யாற்­றிய ரெரெ­சிற்றா கியூரி ஸ்காபர் அம்­மையார், இலங்­கைக்கு எதி­ராக ஐ.நா. மனித உரி­மைகள் பேரவைத் தீர்­மா­னங்கள் நிறை­வேற்­று­வதை சில ஆண்­டு­க­ளுக்கு ஒத்­தி­வைக்க வேண்டும் என்று கூறி­யி­ருக்­கிறார்.
அதற்குக் காரணம், புதிய அர­சாங்­கத்தை சீர்­கு­லைப்­ப­தற்கு இட­ம­ளிக்கக் கூடாது என்ற ஒரே காரணம் தான்.
அது­போ­லவே, அமெ­ரிக்க சட்டப் பேரா­சி­ரி­ய­ரான, ரியன் கோட்­மனும் , இதனை வலி­யு­றுத்­தி­யி­ருக்­கிறார்.
அதா­வது, இலங்கை அர­சாங்­கத்­தையும் பாது­காத்து, அதே­நேரம், போர்க்­குற்­றங்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­யையும் மேற்­கொண்டு, எவ்­வாறு இலங்­கைக்கு உதவ முடியும் என்று அவர் நியூயோர்க் டைம்ஸ் நாளி­தழில் கட்­டுரை ஒன்றை எழு­தி­யி­ருக்­கிறார்.
அமெ­ரிக்க குடி­யு­ரிமை பெற்­ற­வ­ரான கோத்­த­பாய ராஜபக்ச, போர்க்­குற்ற விசா­ரணை நடத்த நட­வ­டிக்கை எடுப்­பது அவ­ரது யோச­னை­யாக உள்­ளது.
1996ஆம் ஆண்டில் அமெ­ரிக்க போர்க்­குற்ற சட்­டங்­களின் படி, அமெ­ரிக்க பிரஜை ஒருவர் போர்க்­குற்­றங்­க­ளினால் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தாலும், அமெ­ரிக்கப் பிரஜை ஒரு­வ­ரினால் போர்க்­குற்றம் இழைக்­கப்­பட்­டி­ருந்­தாலும் அதற்­கெ­தி­ராக, அமெ­ரிக்க நீதி­மன்­றத்தில் வழக்குத் தொடுக்க முடியும்.
அதற்­க­மைய, அமெ­ரிக்க குடி­யு­ரிமை கொண்ட கோத்­தபாய ராஜபக்ச மீது அமெ­ரிக்கா வழக்குத் தொடுக்­கலாம்.
அமெ­ரிக்கப் பிரஜை என்ற வகையில், அவர் மீதான நட­வ­டிக்­கையை யாருமே, இலங்கை மீதான அத்­து­மீ­ற­லா­கவும் கருத முடி­யாது.
இலங்கை அர­சாங்கம் கோத்­தபாய ராஜபக்ச மீது நட­வ­டிக்கை எடுக்­காது.
அதனால் அமெ­ரிக்கா அந்த நட­வ­டிக்­கையை மேற்­கொள்­வதன் மூலம், போர்க்­குற்­றங்­க­ளுக்கு எதி­ரான ஒரு நட­வ­டிக்­கை­யா­கவும் காண்­பிக்க முடியும்.
அதே­வேளை இலங்­கையின் புதிய அர­சாங்­கத்­தையும் காப்­பாற்றிக் கொள்­ளவும் முடியும் என்­பதே பேரா­சி­ரியர் ரியன் கோட்­மனின் கருத்­தாக உள்­ளது.
அவற்றை விட, இன்­னொரு பக்கத்தில், மஹிந்த ராஜபக்ச மீண்டும் எழுந்து நிற்பதையும் அதன் மூலம் தடுத்து நிறுத்த முடியும்.
முன்னர் அவருக்குப் பலத்தைக் கொடுத்தவர்களை அவரிடம் இருந்து பிரித்தெடுக்கும் தந்திரமே இது.
இதனை நகங்கள் பிடுங்கப்பட்ட சிங்கத்துடனோ, பற்கள் பிடுங்கப்பட்ட பாம்புடனோ ஒப்பிடலாம்.
அதாவது எது அவருக்குப் பலத்தைக் கொடுக்கிறதோ அதனை இல்லாமல் செய்து விடுவது.
கோத்தபாய ராஜபக்ச இன்னமும் வெளிநாடு செல்லாமல் இருப்பதற்குக் காரணம், அமெரிக்காவின் இந்த நகர்வு குறித்த அச்சம் தான்.
அவர் இலங்கைக்குள் இருக்கும் வரை தான் பாதுகாப்பு. வெளியே சென்றால், எந்த வேளையிலும் சிக்கிக் கொள்ள நேரலாம்.
மஹிந்த ராஜபக்ச கடைசிநேரத்தில், அலரி மாளிகையை விட்டு வெளியேறிய போது கோத்தபாய ராஜபக்சவின் பாதுகாப்புக் குறித்தே அதிகம் கவலைப்பட்டதாக அவருக்கு அருகில் கடந்த 9ம் திகதி அதிகாலை 2.30 மணி தொடக்கம், 6.30 மணி வரை இருந்தவரான உதய கம்மன்பில கூறியிருக்கிறார்.
அவர் கோத்தபாயவின் பாதுகாப்புக் குறித்து அச்சம் கொண்டிருந்ததற்கு ஒரு காரணம் அமெரிக்கா என்றால், இரண்டாவது காரணம், தனது பலம் பறிக்கப்பட்டு விடும் என்பதேயாகும்.
ஹரிகரன்
http://www.tamilwin.com/show-RUmtyBRZKcixz.html

Geen opmerkingen:

Een reactie posten