[ ஞாயிற்றுக்கிழமை, 25 சனவரி 2015, 10:36.18 AM GMT ]
கடந்த வௌ்ளிக்கிழமை ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான புல்லட் புரூப் சொகுசு கார்கள் உட்பட 53 வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியிருந்தனர்.
இந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலில் வீரதுங்க இது குறித்து கருத்து வெளியிடுகையில்,
அந்தப் பகுதியில் இருந்த வாகனங்கள் அதி உயர் பாதுகாப்புடையவை என்பதால் சந்தைகளில் விற்கவோ அல்லது ஏலத்தில் விடவோ அனுமதிக்கப்படவில்லை என லலித் வீரதுங்க சுட்டிக்காட்டினார்.
குறித்த வாகனங்களை நிறுத்தி வைப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக ஒப்பந்த அடிப்படையில் அவற்றை குறித்த இடத்தில் நிறுத்தி வைத்திருந்ததாகவும், அந்த அனைத்து வாகனங்களிலும் பதிவுகள் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRZKciw4.html
வடமராட்சி கடலில் கரையொதுங்கிய மர்மப்பொருள்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 சனவரி 2015, 09:42.26 AM GMT ]
இதனை அவதானித்த பலர் பதற்றத்துடனும் பரபரப்புடனும் காணப்பட்டனர்.
இதனையடுத்த அப்பகுதியில் பொதுமக்கள் கூடி அதனை வேடிக்கை பார்ததனர்.
அத்துடன் இதுகுறித்து பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து, அங்கு வந்த அவர்கள் அந்தப் பொருளை பார்வையிட்டு சென்றனர்.
குறித்த பொருள் சர்வதேச கடல் எல்லைகளை அடையாளமிடுவதற்காகப் பயன்படுத்தப்படும் மிதவையென தெரிவிக்கப்படுகிறது.
மலையகத்தில் தொழிற்சங்க பேதமின்றி அனைத்து மக்களுக்கும் சேவை செய்வேன்: பி.திகாம்பரம்
[ ஞாயிற்றுக்கிழமை, 25 சனவரி 2015, 09:45.38 AM GMT ]
குறிப்பாக ஹற்றன், டிக்கோயா, நோர்வூட், மஸ்கெலியா, சாமிமலை, பொகவந்தலாவை, புளியாவத்தை ஆகிய நகரங்களில் வரவேற்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதன்போது அட்டன் நகரில் பாற்சோறு செய்து அமைச்சா் பி.திகாம்பரத்தை அமோக வரவேற்புடன் வரவழைத்து பாற்சோறு உண்டு மகிழ்ந்தனர்.
அத்தோடு அமைச்சா் பி.திகாம்பரத்திற்காக டிக்கோயா வனராஜா ஆலயத்திலும் விசேட பூஜைகளும் நடைபெற்றன. இதன்போது இராஜாங்க கல்வி அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணனும் கலந்து கொண்டார்.
இங்கு தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பி.திகாம்பரம் கருத்து தெரிவிக்கையில்,
மலையகத்தில் தொழிற்சங்க பேதமின்றி அனைத்து மக்களுக்கு தனது சேவைகளை செய்வேன்.
அத்தோடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 100 நாள் வேலை திட்டத்தின் எனது முதற்கட்ட வேலையாக மலையகத்தில் மலையக மக்களுக்கு தனி வீடுகள் அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுத்திருக்கின்றேன்.
மீரியபெத்தயிலேயே எனது முதற்கட்ட பணிகள் ஆரம்பமாகும் என இதன்போது அவா் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRZKciw1.html
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்துக: சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி
[ ஞாயிற்றுக்கிழமை, 25 சனவரி 2015, 09:59.59 AM GMT ]
1979 ஜுலை 19ம் திகதி ஒரே நாளில் பொது மக்கள் விவாதத்திற்கான வாய்ப்பின்றி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்ட பயங்கரவாத தடுப்புச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்த்தின் கீழும் பல வருடங்களாக பல சிறைச்சாலைகளில் அடைத்தும் தடுப்பு முகாமிலும் தடுத்தும் வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் எதிர்பார்ப்பு போது மன்னிப்பேயாகும்.
என தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவரும் சட்டத்துறை செயலாளருமான சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா விடுத்தள்ள அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்.
அனுராதபுரம், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, நீர்கொழும்பு, திருகோணமலை, மொனராகலை, தும்பரை-கண்டி, பதுளை, வெலிக்கடை, மகர, கொழும்பு விளக்கமறியல் வெலிகடை பெண்கள் பிரிவு, களுத்தறை பெண்கள் பிரிவு, பொலன்னறுவ, ஆகிய பல சிறைச்சாலைகளில் அடைத்தும் முன்னாள் ஜனாதிபதியின் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் பூசா (Boosa) தடுப்பு முகாமிலும் தடுத்தும் வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் எதிர்பார்ப்பு போது மன்னிப்பேயாகும்.
அரசியல் கைதிகளின் விடுதலையில் சட்டரீதியான நிலைப்பாட்டையும் அதனைப் பற்றிய சட்டத் தெளிவுமின்றி சில அரசியல்வாதிகள், தண்டனை பெற்ற அரசியல் கைதிகளுக்கு குறிப்பிட்ட காலம் புனர்வாழ்வுப் பயிற்சி அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட வேண்டும் .
வழக்குக்களை எதிர்கொள்பவர்களுக்கு பிணை வழங்கப்பட வேண்டும். என்பனவே இந்த நீண்டகால பிரச்சினையை நிரந்தரமாகத் தீர்த்து வைக்கக் கூடிய வழிமுறையாகுமென பத்திரிக்கைகளில் அறிக்கைகளையும் தொலைக்காட்சிகளில் நேர்காணல்களையும் நடாத்துவது புதிய அரசில் சட்டரீதியாக ஜனாதிபதியினால் வழங்கப்படகூடிய பொது மன்னிப்பை ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் அரசியல் கைதிகளில் விடுதலையைப் பாதிப்பதுமட்டுமின்றி கேள்விக்குரியதுமாக்கிவிடும்.
அரசியல் கைதிகள் புனர்வாழ்வையோ அல்லது பிணையையோ எதிர்பார்க்கவில்லை. பொது மன்னிப்பையே எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
இந்தத் தமிழ் அரசியல் கைதிகளில் பல கைதிகள் ஐந்திலிருந்து பத்தொன்பது வருடங்கள் விளக்கமறியல் கைதிகளாக உள்ளவர்கள், 21 வருடங்களாக தண்டனைக் கைதிகளாக உள்ளவர்கள், 20 முதல் -200 வருட தண்டனையை மேன்முறையீடு செய்துள்ளவர்கள், ஆயுட்கால சிறைத்தண்டனை முதல் மரண தண்டனையினை மேன்முறையீடு செய்துள்ளவர்கள், 01முதல் -10 வருட சிறைத்தண்டனையை அனுபவித்து வருபவர்கள்,
மேலும் மேல் நீதிமன்றில் குற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை முடிவில் குற்றவாளியாகக் காணப்பட்டு மரண தண்டனை, ஆயுட்கால தண்டனை, 1-50 வருட சிறைத் தண்டனை பெற்று இந்தத் தண்டனைகளுக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ள அரசியல் கைதிகளுக்கும் குற்றத்தை ஏற்றுக்கொண்டு தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கும் அரசியல் கைதிகளுக்கும் புனர்வாழ்வு அளிப்பதற்கு சட்டத்தில் இடம் இல்லை.
ஆனால் ஜனாதிபதி அரசியலமைப்பில் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பாவித்து அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கமுடியும்.
சட்டமா அதிபரினால் மேல் நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்கினாலும் தொடர்ச்சியாக விசாரணைகளை வருடக் கணக்கில் காலவரையின்றி நடைபெறும் இந்த விசாரணையில் பல அரசியல் கைதிகள் தண்டணை அனுபவிக்க நேரிடலாம்.
அவசரகால ஒழுங்குவிதி மற்றும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ்,
(1) சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளிலும் தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டள்ள அரசியல் கைதிகள்
(2) சட்டமா அதிபரினால் மேல் நீதிமன்றங்களில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசியல் கைதிகள் மற்றும்
(3) குற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை முடிவில் குற்றவாளியாகக் காணப்பட்டு தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கும் அரசியல் கைதிகளுமாக
சிறைச்சாலைகளில் அடைத்தும் தடுப்பு முகாம்களில் தடுத்தும் வைக்கப்பட்டுள்ள 500 வரையிலான அனைத்து தமிழ் அரசியல் கைதிகளுக்கும்
1989ம் ஆண்டு கிளர்ச்சியில் ஈடுபட்ட மக்கள் விடுதலை முன்னணியினருக்கு இரண்டு வருடங்களில் 1991ம் ஆண்டு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது போல் தங்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே கைதிகளின் கோரிக்கையாகும்.
http://www.tamilwin.com/show-RUmtyBRZKciw2.html
ஆயுதக் குழுக்கள் நிராயுதபாணிகளாக்கப்பட வேண்டும்: ஜனாதிபதியிடம் நிராஜ் டேவிட் மற்றும் ராமசாமி துரைரத்தினம் கோரிக்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 25 சனவரி 2015, 10:02.53 AM GMT ]
சுவிட்ஸர்லாந்தில் புகலிடம் பெற்றுள்ள ஊடகவியலாளர்கள் நிராஜ் டேவிட் மற்றும் ராமசாமி துரைரத்தினம் ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.
குறித்த பிரதேசங்களில் செயற்படும் ஆயுத குழுக்களின் ஆயுதங்களை களைவதன் மூலம் அந்த பிரதேசங்களில் ஊடகங்கள் சுதந்திரமாக செயற்படும் சூழலை ஏற்படுத்த முடியும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.
புதிய அரசாங்கம் பதவியேற்ற உடனேயே நாட்டில் இருந்து வெளியேறிய ஊடகவியலாளர்களை நாடு திரும்புமாறு விடுத்த அழைப்பை ஏற்றுக்கொள்வதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBRZKciw3.html
Geen opmerkingen:
Een reactie posten