தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 23 januari 2015

ஊடகவியலாளர்களின் கடத்தல், கொலை தொடர்பாக வித்யாதரனிடம் விசாரணை?

வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படவிருந்த மோட்டார் சைக்கிள்கள் மீட்பு
[ வெள்ளிக்கிழமை, 23 சனவரி 2015, 11:47.10 AM GMT ]
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படும் மோட்டார் சைக்கிள்கள் சில புத்தளம் நகர சபையின் களஞ்சிய சாலையில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
புத்தளம் நகரசபையின் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் உறுப்பினர் உதில ரத்நாயக்க காவற்துறையில் முன்வைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டுள்ளன.
இவ்வாறு 58 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதேநேரம் வரக்காபொல அலவிவத்தையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த டிபென்டர் வாகனம் ஒன்றும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்பு!
[ வெள்ளிக்கிழமை, 23 சனவரி 2015, 12:18.28 PM GMT ]
வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் சிலவற்றை இன்று மீட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கற்குளம் பகுதியில் அமைந்துள்ள வீட்டு வளவினுள் தென்னங்கன்று நடுவதற்காக குழி வெட்டியபோது, அக்குழியினுள் பரல் ஒன்று காணப்பட்டுள்ளது.
அங்கு மேலும் தோண்டியபோது அதற்குள் ஆயுதங்கள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கைப்பட்டதை அடுத்து பொலிஸார் அந்த பரலில் இருந்த வெடிபொருள்களை மீட்டனர்.
ஆர்.பி.ஜி.எறிகணைகள் - 2, பரா வெளிச்சக்குண்டுகள் - 2, எம்.பி.எம்.ஜி. ரவைகள் 67 என்பன உட்பட சில வெடிபொருள்கள் மீட்கப்பட்டன.
இப்பகுதியில் மேலும் ஆயுதங்கள் இருக்கலாம் எனக் கருதி அப்பகுதியை அகழ்வதற்கான நடவடிக்கைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
ஊடகவியலாளர்களின் கடத்தல், கொலை தொடர்பாக வித்யாதரனிடம் விசாரணை?
[ வெள்ளிக்கிழமை, 23 சனவரி 2015, 12:02.54 PM GMT ]
கடந்த காலங்களில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஊடக துறையை சேர்ந்தவர்களின் கடத்தல், கொலை போன்ற செயல்களில் ஈடுபட்ட வெள்ளை வான் சம்பந்தமாக வெள்ளை வானில்கடத்தப்பட்டு நீதிமன்றின் மூலம் விடுதலையான மூத்த ஊடகவியலாளர் என்.வித்யாதரனிடம் இருந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நம்பதகுந்த வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.
இது தொடர்பாக ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவித்த வித்யாதரன்,
முக்கிய அமைச்சர் ஒருவர் இது சம்பந்தமாக வினவினார். 2009ம் ஆண்டு பெப்ரவரி மாதம் வெள்ளைவானில் கடத்தப்பட்டு இக்கடத்தல் தொடர்பில் மேலிடத்து அழுத்தம் அதிகரிப்புக் காரணமாக குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டு,
வெள்ளை வானில் கடத்தப்பட்டு உயிருடன் திரும்பியவர் என்ற அடிப்படையில் விபரங்களை பெற வேண்டும் என்று அந்த முக்கிய அமைச்சர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க எனது அனுபவத்தை வழங்க தயாராக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
வெள்ளை வான் கடத்தலில் முக்கிய நபர்கள் யார், யார் என்ற விசாரணையை ஆரம்பிக்கும் முகமாகவே வித்தியாதரனிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைக்கு பின் வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வித்தியாதரன் பேட்டி ஒன்றை வழங்கியிருந்தார்.
அதில் தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்திருந்தார். கடத்தலின் பின்னணி ஆராயப்பட வேண்டும் என்பதோடு வீட்டில் இருந்து வெளியில் சென்று மீண்டும் வீடுவருவோமா என்ற அச்சத்துடன் இருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.
அந்த பேட்டியின் பின்னர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவை பேட்டி எடுக்க வெளிநாட்டு ஊடகவியலாளர் அவரின் அலுவலக வாசல் சென்றபோது வித்தியாதரன் கடத்தப்பட்டார்.
இது தொடர்பாக கோத்தபாயவிடம் ஊடகவியலாளர் வினாவிய போது வித்தியாதரனை புலிகளுடன் சம்பந்தப்படுத்தி திட்டி தீர்த்தார். அவரை தீவிரவாதி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் இவரின் கடத்தல் தொடர்பாக மகிந்த ராஜபக்ஷவிற்கு ஏற்பட்ட அழுத்தம் காரணமாக பல மணிநேரத்தின் பின் வித்தியாதரன் கைது செய்யப்பட்டதாக கூறி குற்றத் தடுப்பு பொலிசாரிடம் கையளிக்கப்பட்டார். அப்போது இந்த பகுதிக்கு பொறுப்பாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுர சேனநாயக்கா செயற்பட்டார்.
இப்பொழுது இவர் பிரதி பொலிஸ் மா அதிபர் தரத்தில் உள்ளார். இவருக்கு இப்பொழுது சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyBRXKcjvz.html

Geen opmerkingen:

Een reactie posten