தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 2 januari 2015

பரபரப்புடன் யாழில் மஹிந்த! உசார் நிலையில் மாவை

ஜனவரி 08ஐ குழப்ப 2000 இராணுவம் வடக்கில்….

எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார். தாம் யாழ்ப்பாணம் சென்றிருந்த போது, இவ்வாறான விடயத்தை அவதானித்ததாகவும் அவர் கூறியுள்ளார். இராணுவத்தை பயன்படுத்தி அரசாங்கம் வாக்களிப்பை குழப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
பொலனறுவை, அனுராதபுரம் போன்ற மாவட்டங்களிலும் அதிக அளவான இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/92427.html

அப்பா சந்திரிக்காவுடன்.. மகன் மகிந்தவுடன்…

இதே வேளை இன்று பொலோன்னறுவை மாவட்டத்தில் பிரதேச சபை உறுப்பினர்கள் 19 பேர் பொது வேட்பாளர் மைத்திரிபாலவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளனர்.இதன்படி ஹிங்குரன் கொட பிரதேச சபைத்
தலைவர்,தமங்கடுவை பிரதேச சபைத் தலைவர்,திபுலாகலை பிரதேச சபை உப தலைவர்,லங்காபுர பிரதேச சபை உப தலைவர், ஹிகுரங்கொட சேவையாளர்கள் மற்றும் லங்காபுர, வெலிகந்த, திபுலாகலைப் பிரதேச சபை உறுப்பினர்கள் தமது ஆதரவை பொது வேட்பாளருக்கு வளங்குவதாக தெரிவித்துள்ளனர்.nantha-chandrika-01
http://www.jvpnews.com/srilanka/92430.html

மகிந்தவா?? மைத்திரியா?? இயக்குநர் வ.கௌதமன்….

இன்று தேர்தல் களத்திலுள்ள அனைத்து சிங்களத் தலைமைகளும் தமிழின அழிப்பின் பங்காளிகளும் இன அழிப்பை நேரடியாக நெறிப்படுத்தி வழிப்படுத்தியவர்களே.
தமிழினம் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டதை, இசைப்பிரியா உள்ளிட்ட எமது பல சகோதரிகள் சிங்களப் படைகளால் சீரழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதை ,ஆயிரக்கணக்கான எங்கள் உறவுகள் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதை, பல ஆயிரம் தமிழ் பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டதை, போர் வெற்றியென்று கூறி அந்த வெற்றிக்கு தாங்களே காரணமென சிங்கள மக்களிடம் வாக்கு கேட்டு நிற்கும் அதே சிங்கள இனவாதிகள் தான் இன்று தமிழ் மக்கள் முன் அனைத்தையும் மறந்து, மறைத்து தங்களை இந்த தேர்தலில் வெற்றி பெறவையுங்கள் என வாசல் தேடி வந்துள்ளனர்.
யாரிவர்கள் ?எறிகணைக் குண்டுகளால் எம்மவர்களை கொன்றவர்கள்.
வீதி வீதியாக் வந்து நின்று கொன்றவனை விருந்தாளியாக்கச் சொல்கின்றனரா?
சிங்கள தேசத்தின் வேசங்களையும் மோசங்களையும் கற்றுக்கொள்ள இன்னும் எத்தனை காலம் தேவை இவர்களுக்கு.
சிங்கள தேசத்தில் நடந்த எந்த தலைமை மாற்றமும் எந்தக் காலத்திலும் தமிழ் மக்களுக்கு தீர்வை பெற்றுக் கொடுத்ததில்லை. மாறாக அழிவுகளையே அதிகப்படுத்தியுள்ளன. எனவே மாற்றம் வேண்டி மைத்திரி பாலவை ஆதரிப்பதாக சொல்லப்படுவது அர்தமற்றது.
அத்துடன் இன்று சிங்களப் பேரினவாதிகள் அனைவரும் ஒருபெரும் சக்தியாக ஒரேஅணியில் திரண்டுள்ளனர். இது மிகவும் ஆபத்தானது. எதிர் காலத்தில் தழிழீழ விடுதலைப் போரட்டத்திற்கு பெரும் அச்சுறுத்தலையும் பின்னடைவையும் ஏற்படுத்தக் கூடியது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்த அறிவிப்பானது பேயிட மிருந்து பிடுங்கி பிசாசிடம் கொடுப்பதற்கு ஒப்பானதாகும்.
எந்த சிங்கள தலைமைகள் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் மக்களுக்கான உரிமைகளை வழங்கப் போதில்லை. இன அழிப்பையும் சிங்கள மயமாக்கலையும்நிறுத்தப் போவதில்லை.
பல ஆண்டுகளாக சிறைகளிலே வாடும் உறவுகளை விடுவிக்கப்போவதில்லை என்பதே உண்மை.
பல ஒப்பந்தங்களையே கிழித்தெறிந்து இனவழிப்பைச் செய்த சிங்கள அரசுகள் வாய்மொழி உத்தரவாதங்களை (உள் ஒப்பந்தங்களை) எவ்வாறு கடைப்பிடிக்கும் என்பதும் பெரும் கேள்விக்குரியதே.
நடைபெறப்போவது சிங்களதேசத்திற்கான தேர்தல்.
தமிழர்களை அழிக்கவும் அடக்கு முறைக்குள் வைத்திருக்கவும் யார் சிறந்தவரென சிங்கள மக்கள் தமக்கான தலைமையை தேர்ந்தெடுக்கும் தேர்தல்.
எமது மக்களை எனது தமிழீழ தேசியத்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்கள் அறிவுசார்ந்த மனிதர்களாகவே வளர்த்துவைத்துள்ளார். வாக்களிப்பதா வேண்டாமா என்பதை அவர்களே முடிவுசெய்யட்டும்.
எதிர்க்கத் துணிந்தால் தமிழ் மீளும் எதற்கும் துணிந்தால் தமிழ் ஆளும்
-நன்றி-
அன்புடன்
வ.கௌதமன்
http://www.jvpnews.com/srilanka/92435.html

பரபரப்புடன் யாழில் மஹிந்த! உசார் நிலையில் மாவை

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின், அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபை உறுப்பினர் வைரமுத்து தியாகராசா, யாழ் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் திருமதி நிரஞ்சன் கிருசாந்தி, பருத்தித்துறை நகரசபை உறுப்பினர் நடராஜா நிரஞ்சன், வவுனியா தெற்கு பிரதேச சபை உறுப்பினர்கள் கதிரேசு சுபாஸ்கரன், இராசையா ராஜசேகரம், பாக்கிய நாதன் பார்த்தீபன் ஆகியோர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தாவியுள்ளனர்.
இவ்வாறு கட்சி தாவுவது தொடர்பில் கருத்து தெரிவித்த மாவை சேனாதிராசா, ‘கட்சி தாவியவர்கள், கட்சியின் கொள்கைக்கு மாறாக செயற்பட்டு, கட்சி மாறியுள்ளனர். இவர்களுக்குரிய விசாரணைகளை மேற்கொள்வதற்கான கடிதங்கள் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.விசாரணைகள் முடிவடைந்த கூட்டமைப்பின் கட்டுப்பாடுகளை மீறி நடக்கும், உறுப்பினர்களின் பதவிகள் பறிக்கப்படும்’ எனவும் தெரிவித்தார்.
http://www.jvpnews.com/srilanka/92438.html

Geen opmerkingen:

Een reactie posten