[ வியாழக்கிழமை, 01 சனவரி 2015, 11:35.27 PM GMT ]
இரத்தினபுரியில் மைத்திரியின் தேர்தல் பிரசாரத்துக்காக பெரிய மைதானம் ஒன்றை ஏற்பாடு செய்து கொடுத்த போதும் அது வேண்டாம் என்று கூறிவிட்டு வாடகை லொறிகள் தரித்து வைக்கப்படும் சிறிய இடத்தில் மேடையமைத்து பிரசாரம் செய்யவுள்ளனர்.
கூட்டம் குறைவாக இருப்பதால் சிறிய இடத்தில் பிரசாரத்தை நடத்தி மக்கள் தொகையை பெரிதாகக் காட்டும் முயற்சியில் எதிரணியினர் ஈடுபட்டுள்ளனர்.
இதே போன்றே ஹொரணை பகுதியில் முன்னாள் பிரதமரும், சிரேஷ்ட அமைச்சருமான ரத்னசிறி விக்கிரமநாயக்கா மைத்திரியுடன் மேடையேறப் போகிறார் என பிரசாரம் செய்தனர்.
களுத்துறையில் அமைச்சர் குமார வெல்கம மைத்திரியுடன் மேடையேறப் போவதாக பிரசாரம் செய்தனர். ஏன் இவ்வாறு இவர்கள் பிரசாரம் செய்யவேண்டும்?.
தமது அரசியல் வாங்குரோத்து நிலையை மறைப்பதற்கு பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களது இந்த போலிப் பிரசாரங்களை கிராமத்து மக்கள் நம்பத் தயார் இல்லை என்பதை இவர்கள் மறந்துவிட்டனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBTVKbmq6.html
மைத்திரிபாலவுடன் ஒப்பந்தம் கைச்சாத்திட அவசியமில்லை! மஹிந்தவின் ஊழல் கோப்புக்கள் எம்வசம் உண்டு!– விஜித ஹேரத்
[ வியாழக்கிழமை, 01 சனவரி 2015, 11:44.25 PM GMT ]
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வங்குரோத்து அடைந்துள்ள அரசாங்கம் பல்வேறு மாதிரியான நடிகர்களை இறக்குமதி செய்கின்றது.
ஒரு வேளை சல்மான் கான் மற்றுமொரு வேளை ஜக்லீன் மற்றுமொரு வேளை குமார் குணரட்னம் போன்ற நடிகர்களை அரசாங்கம் பிரச்சாரத்திற்காக இறக்குமதி செய்கின்றது.
ஜே.வி.பி கட்சி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எந்தவொரு தரப்புடனும் இரசிய உடன்படிக்கை கைச்சாத்திட்டதில்லை.
மைத்திரிபால சிறிசேனவுடன் இரகசிய உடன்படிக்கை கைச்சாத்திட வேண்டிய அவசியமும் கிடையாது.
ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட வேண்டுமாயின் அவை பகிரங்கமாகவே செய்யப்படும்.
அரசாங்கம் விழுந்துள்ள குழியிலிருந்து மீள்வதற்கு எந்தவொரு இழி செயலையும் செய்யத் தயங்குவதில்லை.
ஒவ்வொரு விதமான நபர்கள் இலங்கைக்கு விஜயம் செய்வதன் நோக்கம் எதற்காக என்பதனை மக்கள் அறிவார்கள்.
குமார் குணரட்னம் நாட்டை விட்டு எப்படிச் சென்றார் நாட்டுக்குள் எப்படி வந்தார் என்பதனை பார்த்தால் அவர் அரசாங்கத்தின் தேவைகளை பூர்த்தி செய்கின்றார் என்பது தெளிவாகும் என விஜித ஹேரத், ஜே.வி.பி தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்சவின் ஊழல் மோசடிகள் பற்றிய கோப்புக்கள் எம்வசம் உண்டு – விஜித ஹேரத்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஊழல் மோசடிகள் தொடர்பிலான கோப்புக்கள் தம்வசம் இருப்பதாதக ஜே.வி.பியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள் மேற்கொண்ட ஊழல் மோசடிகள் பற்றிய கோப்புக்கள் பல இருப்பதாக ஜனாதிபதி மேடைகளில் உரக்க பேசினாலும், ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட மோசடிகள் பற்றிய ஆவணங்கள் எம்மிடம் உண்டு.
தென் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட உள்ள நீர்த் திட்டமொன்றுக்கு 125 மில்லியன் அமெரிக்க டொலர் செலவாகும் என்ற போதிலும் போலியாக 270 மில்லியன் அமெரிக்க டொலர் செலவாகும் என அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது, இது தொடர்பான ஆவணங்கள் எம்மிடம் உண்டு.
இதற்கு மேலதிகமாக இஸ்ரேல் கட்டிட நிர்மாண நிறுவனம், நெதர்லாந்து வங்கிகள் போன்றவற்றுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் மற்றும் சீனவின் சைனா ஹார்பர் நிறுவனத்திற்கு விலைமனுக் கோரல், அடிப்படையின்றி வழங்கிய அபிவிருத்தி திட்டங்களின் ஊடாக செலவிடப்பட்ட 32 வீதமான பணம் சம்பாதித்தமை, கொழும்பு தெற்கு துறைமுகத் திட்டத்தின் ஊடாக ஈட்டப்பட்ட பணம் போன்ற தகவல்கள் ஜே.வி.பியிடம் உண்டு என்பதனை ஜனாதிபதி மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.
ஆளும் கட்சியிலிருந்து தாவும் அமைச்சர்களின் கோப்புக்களை வெளியிடப் போவதாக ஜனாதிபதி எச்சரிக்கை விடுக்கின்றார். எனினும், தம்வசம் உள்ள கோப்புக்கள் ஆவணங்கள் தேவையான நேரத்தில் அம்பலப்படுத்தப்படும் என விஜித ஹேரத் நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTVKbmq7.html
மைத்திரியின் இரு காரியாலயங்கள் மீது நேற்றிரவு தாக்குதல்! - ஐ.தே.கட்சியின் அமைப்பாளரின் வீட்டின் மீது தாக்குதல்
[ வெள்ளிக்கிழமை, 02 சனவரி 2015, 12:02.30 AM GMT ]
இத்தாக்குதலின் போது அங்கு வைக்கப்பட்டிருந்த பதாதைகள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் சிங்கள ஊடகமொன்று அறிவித்துள்ளது.
ஐ.தே.கட்சியின் அமைப்பாளரின் வீட்டின் மீது தாக்குதல்
ஐக்கிய தேசியக் கட்சியின் பெலியத்த தொகுதியின் அமைப்பாளர் விமல் ஜயசிறியின் வீட்டின் மீது நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பெலியத்த கஹாவத்த பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டுக்குள் பிரவேசித்த ஆயுததாரிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.
சுமார் 15 மோட்டார் சைக்கிள்களில் சென்ற இந்த ஆயுததாரிகள் அமைப்பாளரின் வீட்டில் இருந்த ஆவணங்கள் மற்றும் பொது வேட்பாளரின் படங்களுக்கு சேதம் ஏற்படுத்தியுள்ளனர்.
4 மோட்டார் சைக்கிள்கள், காரியாலய உபகரணங்களை சேதப்படுத்தியுள்ள ஆயுததாரிகள் துப்பாக்கி பிரயோகமும் மேற்கொண்டுள்ளனர்.
இந்த தாக்குதலில் விமல் ஜயசிறியின் மனைவியான பிரியங்கா கருணாதிலக்கவுக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் குறித்து பெலியத்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள பெலியத்த தேர்தல் தொகுதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சொந்த தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyBTWKbmrz.html
மைத்திரிபால சிறிசேனவை கைது செய்ய வேண்டும்!- பொதுபல சேனா
[ வியாழக்கிழமை, 01 சனவரி 2015, 11:53.20 PM GMT ]
நாட்டுக்கு எதிராக சூழ்ச்சித் திட்டம் தீட்டிய குற்றச்சாட்டின் அடிப்படையில் மைத்திரிபால சிறிசேனவை கைது செய்ய வேண்டுமென பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் கோரியுள்ளார்.
தேசிய சக்திகளின் கட்டுப்பாட்டு நிலையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகாவை வைத்து இந்த சூழ்ச்சித் திட்டத்தை மேற்கொள்ள முயற்சித்தனர். அது வெற்றியளிக்கவில்லை.
அதன் பின்னர் 2011ம் ஆண்டு முதல் பிரிவினைவாத இருள் சூழ்ந்த சக்திகள் பல்வேறு வழிகளில் நாட்டுக்கு எதிராக சூழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.
உள்ளேயும் வெளியேயும் சூழ்ச்சி செய்யப்பட்டுள்ளதாக மைத்திரிபால சிறிசேன சொல்கின்றார்.
அப்படியென்றால் மைத்திரிபால சிறிசேனவை கைது செய்ய வேண்டுமென கலகொடத்தே ஞானசார தேரர் அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTVKbmry.html
Geen opmerkingen:
Een reactie posten