தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 2 januari 2015

யாழில் அரசின் ஆசாமியால் சிறுமி பலாத்காரம்….

யாழில் இருந்து செயற்பட்டுவரும் அரச ஆதரவு தொலைக்காட்சியிலிருந்து நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஒருவர் இடைநிறுத்தப்பட்டுள்ளார். பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் நேற்றிரவு முதல் அவர் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண செய்திகள் தெரிவிக்கின்றன.

அரசியல்களம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளினை நடத்தி வந்திருந்த அவர் வவுனியாவை சேர்ந்தவரென்றும் தன்னால் யாழ்.நகரில் நடத்தப்பட்டு வரும் விளம்பர வானொலி சேவைக்கு அறிவிப்பாளர்களாக யுவதிகளை சேர்ப்பதாக கூறியே பத்திற்கும் அதிகமான சிறுமிகளது வாழ்வை சீரழித்ததாகவும் புகார் செய்யப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்டவர்களது முறைப்பாட்டினையடுத்து அவரை நிர்வாகம் இடைநிறுத்தியுள்ளது.
முன்னதாக யாழ்.மாநகரசபை கலைக்கப்படுவதற்கு மூன்று நாட்களே இருக்கையில் அப்போதைய ஈபிடிபி முதல்வர் யோகேஸ்வரி பற்குணத்துடன் தொடர்பு கொண்டு முறையற்ற விதத்தில் அந்த விளம்பர வானொலிக்கு அனுமதியினை பெற்றுக்கொண்டுவிட்டதாக தற்போதைய மாநகர விசேட ஆணையாளர் பிரணவநாதன் தெரிவித்தார். மாநகரசபைக்கு சொந்தமான நவீன சந்தை கட்டடமொன்றிலேயே அவர் தனது அலுவலகத்தை நடத்தியும் வருகின்றார்.
தமிழ் தேசிய விடுதலைப்போராட்டத்தின் மீதும் செயற்பாட்டாளர்கள் மீதும் சேறு பூசும் நடவடிக்கைகளினில் இவர் மும்முரமாக ஈடுபட்டு வந்தவராவார். தன்னால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் தொடர்பில் அவர்களது குடும்பங்கள் நியாயம் கேட்டு வந்த போது அப்போதைய யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி உதயபேரேரவை கொண்டு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகின்றது.
இவர் சிறுமிகளை மிரட்டி பாலியல் துஸ்பிரயோகம் செய்தவற்றை அருகாகவுள்ள வர்த்தகர்கள் சிலர் ஒளிப்படம் பிடித்து ஊடகங்களிற்கு அனுப்பியுள்ளனர்.
ஏற்கனவே இவர் இங்கு வவுனியாவில் பணியாற்றிய காலத்திலும் இதே போன்று பாலியல் துஸ்பிரயோக நடவடிக்கைகளினில் ஈடுபட்டு எச்சரிக்கப்பட்டதாகவும் அதனையடுத்து இந்தியா தப்பித்து சென்றிருந்த அவர் பின்னர் யாழ்ப்பாணம் திரும்பி இத்தகைய முறைகேடுகளினில் ஈடுபட்டு வருவதாகவும் தெரியவருகின்றது.
http://www.jvpnews.com/srilanka/92451.html

Geen opmerkingen:

Een reactie posten