[ வெள்ளிக்கிழமை, 02 சனவரி 2015, 08:14.39 AM GMT ]
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் தனக்கு பாதகமாக அமையும் என எதிர்வுகூறப்படுவதன் காரணமாக அதிகாரத்தில் தொடர்ந்தும் இருக்கும் இறுதி முயற்சியாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்த திட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக தி இண்டிபெண்டன் தெரிவித்துள்ளது.
தேர்தல் தினத்தில் வாக்களிக்கும் நிலைமைகளை கவனத்தில் கொண்டு இனவாத மோதல் ஒன்றை ஏற்படுத்தி தேர்தல் முடிவுகளை இடைநிறுத்த மகிந்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இவ்வாறான இன வன்முறை குழப்பம் ஏற்பட்டால் தேர்தல் முடிவுகளையும் வாக்கு எண்ணப்படுவதையும் பாதிக்கக் கூடிய பின்னணியை உருவாக்க முடியும் என திட்டமிட்டுள்ளோர் நம்புகின்றனர்.
நாட்டில் இன ரீதியான குழப்பம் ஏற்பட்டால் அவசரகால சட்டத்தை அமுல்படுத்தி தேர்தல் நடவடிக்கைகளை இடைநிறுத்த முடியும். இதனடிப்படையில் பல்வேறு காரணங்களை தெரிவித்து மீண்டும் தேர்தல் ஒன்று அறிவிக்கப்படும் வரை ஜனாதிபதி தனது பதவியை தக்கவைத்து கொள்ள முடியும்.
உலகில் பல்வேறு சர்வாதிகார நாடுகளில் தேர்தலில் சாதகமற்ற நிலைமை ஏற்படும் போது இப்படியான நடைமுறைகள் பின்பற்றபட்டுள்ளதுடன் ராஜபக்ஷவினரும் இந்த தந்திரத்தை பயன்படுத்த தீர்மானித்துள்ளனர்.
இந்த முயற்சி குறித்து தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்ய எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBTWKbmu6.html
ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 4 வருடங்களாக்குவேன்: மைத்திரிபால
[ வெள்ளிக்கிழமை, 02 சனவரி 2015, 08:17.02 AM GMT ]
கம்பஹா மாவட்டம் வெல்லவேரியில் நடந்த கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார். கம்பஹா மாவட்டத்தின் ஐ.தே.கட்சியின் தொடர்பாடல் படையணியின் உறுப்பினர் துஷார லியனகே, பிரதேச சபை உறுப்பினர் நிலந்த பெரேரா மற்றும் வர்த்தகர் பந்து லியனகே தலைமையில் இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அங்கு உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவிக்கையில்,
எங்கள் ஆட்சியின் முதலிடம் அப்பாவி மக்களின் பசியை போக்குவதே. இந்நாட்டின் இளைய தலைமுறையினர் இன்று மிக மோசமான நிலையில் உள்ளார்கள். புதிய தொழில்நுட்பத்துடன் முன்னோக்கி செல்லும் அணுகுமுறை இன்று இல்லை நாங்கள் அதற்கான வழியை ஆயத்தம் செய்து கொடுப்போம்.
சிலர் கூறுகிறார்கள் நான் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் யுத்தம் வரும் என்றும் இந்நாட்டில் அரசியல் நிச்சயமற்ற தன்மையாக காணப்படும் என்கிறார்கள்.
தற்போதைய அரசாங்கமே நிச்சியமற்ற தன்மையுடன் காணப்படுகின்றது. ஒரு குடும்பமே ஆட்சி செய்வதனாலே அரசாங்கம் நிச்சயமற்ற தன்மையுடன் காணப்படுகின்றது. நான் ஒரு காலமும் யுத்ததிற்கு இடமளிக்க மாட்டேன்.
மீண்டும் விடுதலை புலிகள் தலை தூக்க விடமாட்டேன். யுத்தம் நிறைவடையவிருந்த கடைசி இரண்டு வாரங்கள் இந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சராக கடமையிலிருந்தேன் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTWKbmu7.html
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கருத்து
[ வெள்ளிக்கிழமை, 02 சனவரி 2015, 08:26.54 AM GMT ]
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கருத்து வெளியிட்டுள்ளது.
தேர்தலின் நம்பகத் தன்மைக்கு அமைதியான சூழ்நிலை மிகவும் அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கைப் பிரஜைகள் வன்முறைகள் மற்றும் அச்சுறுத்தல்கள் இன்றி சுதந்திரமாக தங்களது தலைவர்களை தெரிவு செய்ய சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது.
இலங்கையின் ஜனநாயக மரபினை உறுதி செய்ய வேண்டிய கடப்பாடு அனைத்து தரப்பினரையும் சாரும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கை ஒன்றின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyBTWKbmvy.html
Geen opmerkingen:
Een reactie posten