தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 1 januari 2015

நாட்டை பிளவுபடுத்தும் நிபந்தனைகளினால் என்னை அடிமைப்படுத்த முடியாது: ஜனாதிபதி!

ஜனாதிபதி போரை முடிவுக்குக் கொண்டு வந்தாலும் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தவில்லை: அனுரகுமார திஸாநாயக்க
[ வியாழக்கிழமை, 01 சனவரி 2015, 02:32.04 AM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச போரை முடிவுக்குக் கொண்டு வந்த போதிலும் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தவில்லை என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாhநயக்க தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் மத்தியில் சந்தேகம் அதிகரித்துள்ளது. தமிழ் மக்கள் விலகியுள்ளதுடன் அவர்கள் மத்தியில் குரோதம் உருவாகியுள்ளது. ஈழப் புலி புலம்பெயர் தமிழர்கள் பற்றி ராஜபக்சவே பேசுகின்றார்.
தமிழ் மக்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர். மஹிந்த ராஜபக்சக்களுக்கு மீண்டும் ஒரு போர் உருவாக வேண்டும் என்ற நோக்கமே காணப்படுகின்றது. ஏகாதிபத்திய வெறியை இல்லாதொழிக்க வேண்டும்.
எதிர்வரும் 8ம் திகதி இந்த பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்த நாட்டை தற்போது ஜோதிடர்களே ஆட்சி செய்கின்றனர். அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோடிகளுக்கு விற்பனை செய்யப்படும் நிலைமை காணப்படுகின்றது.
 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தேர்தலில் வெற்றியீட்டினால் 2022ம் ஆண்டு வரையில் ஆட்சி செய்வார். ஒர் ஜனாதிபதி இவ்வளவு ஆண்டு காலம் ஆட்சி செய்ய வேண்டுமா இது என்ன கோமாளித்தனம் எந்தவொரு நாடும் அபிவிருத்தி அடையகின்றது என்றால் அது மக்களுக்கு உணரக் கூடிய வகையில் அமைய வேண்டும்.
இந்த நாடு பாரியளவில் கடன் சுமையில் சிக்கியுள்ளது என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சர்வாதிகார பயணத்தை நிறுத்துவோம் என்ற தொனிப்பொருளில் அண்மையில் பதுளையில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTVKbnw5.html
நாட்டை பிளவுபடுத்தும் நிபந்தனைகளினால் என்னை அடிமைப்படுத்த முடியாது: ஜனாதிபதி
[ வியாழக்கிழமை, 01 சனவரி 2015, 02:36.27 AM GMT ]
நாட்டை பிளவுபடுத்தும் நிபந்தனைகளினால் என்னை அடிமைப்படுத்த முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டை பிளவுபடுத்தக் கூடாது என்ற எனது கடுமையான நிலைப்பாட்டின் காரணமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் எனக்கு எதிராக செயற்படுகின்றன.
புலிகள் பயங்கரவாதத்தின் ஊடாக நாட்டை பிளவுபடுத்த முயற்சித்தனர். அதற்கு நான் இடமளிக்கவில்லை. நாட்டின் பௌதீக ஒருமைப்பாட்டையோ இறைமையையும் சிதைக்கும் எந்தவொரு விடயத்திற்கும் ஆதரளிக்கப் போவதில்லை.
வடக்குப் பிரச்சினைக்கு தீர்வு காண நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகித்து கூட்டாக இணைந்து தீர்வுத் திட்டமொன்றை எட்ட முடியும் என்ற நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேறும் திசையில் பயணிக்க முயற்சிக்கின்றது.
http://www.tamilwin.com/show-RUmtyBTVKbnw6.html

Geen opmerkingen:

Een reactie posten