நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட பகிரங்கமாக கருத்துக்களை வெளியிட அஞ்சும் ஓர் காலத்தில் நாம் வாழ்கின்றோம்!- அர்ஜூன
[ வியாழக்கிழமை, 01 சனவரி 2015, 12:57.30 AM GMT ]
அண்மையில் கலாவ பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பங்கேற்று உரையாற்றிய போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகவியலாளர்கள் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இன்று விளையாட்டுத்துறை கடுமையாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரச்சாரத்திற்கு கிரிக்கட் வீராகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த நிலைமை ஆரோக்கியமானதாகக் கருதப்பட முடியாது.
படையினரைக் கொண்டு இராணுவத் தளபதி மற்றும் ஜனாதிபதியோர் போரை முடிவுக்குக் கொண்டு வந்தனர்.
எனினும் நாட்டில் பேச்சு சுதந்திரம் ஊடக சுதந்திரம் இன்னமும் நிலைநாட்டப்படவில்லை.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட மிகவும் இரகசியமாகவே பேசுகின்றனர்
தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாக பிளவடைந்துள்ளது.
குற்றச் செயல்களில், ஊழல் மோசடிகளில் ஈடுபடும் ஒர் தரப்பினரும் அதற்கு எதிராக குரல் கொடுக்கும் தரப்பினரும் இவ்வாறு கட்சியில் இருக்கின்றார்கள்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மிகவும் நிதானமாக இம்முறை வாக்களிப்பில் பங்கேற்க வேண்டியது அவசியமானது.
நாட்டின் பல பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் தேர்தல் பிரச்சார பதாகைகள் பெனர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
தங்களது தொழில் போய்விடும் அல்லது திடீர் இடமாற்றம் வழங்கப்படும் என்ற அச்சம் காரணமாக பொலிஸார் சட்டவிரோத தேர்தல் பிரச்சாரங்களை அகற்றுவதில்லை என அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTVKbnw1.html
போர் வெற்றியானது குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கான அனுமதிப்பத்திரமல்ல!– தம்மிக்க பண்டார
[ வியாழக்கிழமை, 01 சனவரி 2015, 01:10.18 AM GMT ]
கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சமூக மாற்றமொன்று தேவை என முழுச் சமூகமே கோரும் தருணத்தில் நாம் இந்த மாற்றத்துடன் இணைந்து கொண்டுள்ளோம்.
சமூகத்திற்கு வலிக்கும் போது கலைஞர்களுக்கும் வலிக்கும். தொலைக்காட்சியில் அடிக்கடி தோன்றாவிட்டாலும் நாமும் சமூகத்திற்கு சேவையாற்றியுள்ளோம்.
1994ம் ஆண்டுக்கு முன்னதாக கலைஞர்களாகிய நாம் உதை வாங்கினோம். அதன் பின்னரான அரசாங்கமும் எம்மை தாக்கியது.
இளைஞர்கள் மாற்றமொன்றை எதிர்பார்ப்பது நாட்டுக்கு துரோகம் இழைப்பதற்காக அல்ல.
அரசாங்கத்தை விமர்சனம் செய்யும் தரப்பினர் மீது சேறு பூசுவது சரியானதல்ல.
நாட்டில் வாதப் பிரதிவாதங்கள் இருக்க வேண்டியது அவசியமானது.
வீதிகள் பாதைகள் கட்டடங்கள் அமைப்பதில் எவ்வித பிழையும் கிடையாது.
எனினும், இந்த பாதைகளில் குற்றவாளிகள் நடக்கின்றார்கள் என்றால் அது பிழை.
சீரிய ஒழுக்கத்துடன் கூடிய சமூகமொன்றை நாம் எதிர்பார்க்கின்றோம்.
போர் வெற்றியானது அனைத்து பிழைகளையும் மூடி மறைப்பதற்கான ஓர் அனுமதிப்பத்திரம் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTVKbnw2.html
Geen opmerkingen:
Een reactie posten