தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 1 januari 2015

ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பின் முடிவுக்கு யாழ் வணிகர் கழகம் ஆதரவு

மானஸ்தன்  எவனாவது ஆதரிக்கின்றானா என்று பாருங்கள்,பணம் பண்ணும் வணிகன்,உலகத் தமிழர் பேரவை(தமிழா பேசுறாங்க?) தமிழரை விலை பேசும் அமைப்புகள் என்பனவே கூஒத்தமைப்பைன் முடிவை ஆதரிக்கின்றன!இதில் சிங்கள மக்க வாக்கு மட்டுமே ஜனாதிபதியை தீர்மானிக்க இவங்கள் எதற்கு இத்தனை சதிராட்டம் போடுறாங்க!படிக்க முடியாத அறிவாளிகளை எமாற்ற மட்டும்தான்!

பயங்கரவாதத்தை ஏற்படுத்த வேண்டிய தேவையில் அரசாங்கம்: அத்துரலிய ரத்ன தேரர்
[ வியாழக்கிழமை, 01 சனவரி 2015, 02:40.08 PM GMT ]
சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே பேதத்தை ஏற்படுத்தி பயங்கரவாதமொன்றை ஏற்படுத்த வேண்டிய தேவையில் அரசாங்கம் உள்ளதாக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அரசாங்கம் தனது கள்ளத் தனமான செயற்பாடுகளை மூடி மறைப்பதற்கு அடிப்படை வாதத்தை தூண்டிவிடுகிறது.
புதிய அரசாங்கத்தில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களை எந்த பேதங்களுமின்றி வடக்கில் குடியேற்றவுள்ளதாகவும், தற்போதைய அரசாங்கத்துக்கு வடக்கில் சிங்கள மக்களைக் குடியேற்றுவதற்கு முடியாமல் போனதாகவும் தேரர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTVKbmp7.html
மகிந்த நாளை யாழிற்கு விஜயம்: கூட்டமைப்பினரை வளைத்துப்போட பல கோடி பேரம் பேசும் அரசு?
[ வியாழக்கிழமை, 01 சனவரி 2015, 03:06.20 PM GMT ]
ஐனாதிபதி மகிந்த ராஐபக்ஷ நாளை யாழிற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களையும் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இழுத்துப் போடுவதற்கு பல கோடிகளில் அரசு பேரம் பேசி வருவதாகத் தெரிய வருகிறது.
ஆயினும் கோடிகளுக்கும் சொகுசு வாகனங்களுக்கும் தாம் ஒரு போதும் விலை போகப் போவதில்லை என்றும் வாக்களித்த தமிழ் மக்களுக்குத் துரோகம் செய்யாது மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு தொடர்ந்தும் தமது போராட்ட பயணம் தொடருமென்றும் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் 8 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து  இன்று வரை தென்னிலங்கையில் கட்சித் தாவல்கள் மற்றும் வெளியேற்றங்கள் என்பன தொடர்ந்தும் நடைபெற்றே வருகின்றன.
இதில் இரண்டு பிரதான கட்சிகளான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிகளில் குறிப்பிட்ட சில உறுப்பினர்கள் தத்தமது கட்சிகளை விட்டு வேறு கட்சிகளிற்கு மாறியுள்ளனர்.
இத்தகைய கட்சித் தாவல்களின் போது பல கோடி ரூபாய்கள் பேரம் பேசப்பட்டு அதற்கமையவே கட்சி தாவல்கள் மற்றும் கட்சி வெளியேற்றங்கள் என்னபன இடம்பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அதே போன்று தற்போது வடக்கிலும் கட்சிச் தாவல்கள் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன.
இதில் குறிப்பாக பிரதான இரண்டு வேட்பாளர்களில் ஒருவரான மைத்திரிபால  சிறிசேனாவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிப்பதாக அறிவித்திருக்கும் நிலையில் எப்படியாயினும் எவ்வளவு கொடத்தும் அரசு சார்ந்த பக்கம் கூட்டமைப்பினரை அனைத்துக் கொள்வதிலேயே அதீதி அக்கறையை அரசாங்கம் செலுத்தியிருக்கின்றது.
இதற்கமைய கூட்டமைப்பினரின் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் மற்றும் தவிசாளர்கள் ஆகியோருடன் மாகாண சபை உறுப்பினர்களையும் ஐனாதிபதி வேட்பாளர் மகிந்த ராஜபக்ச தரப்பினர்கள் இழுத்துப்  போடுவதற்கும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.
இதற்கமைய கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்களையும் பல கோடிகளில் பேரம் பேசி அனுகியதாகவும் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் இதனை கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்கள் சிலர் மறுத்துள்ளனர்.
அத்தோடு இவ்வாறு கோடிகளுக்கு விலை போகிறவர்கள் நாங்கள் அல்லர். எம்மை நம்பி வாக்களித் மக்களுக்கு துரோகம் செய்ய மாட்டோம். மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதில் கொள்ளை கோட்பாட்டுடன் உறுதியாகவே இருப்போம்.
அரசின் கோடிகளுக்கும் சொகுசு வாகனங்களுக்கும் ஒருபோதும் விலைபோகப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இதே வேளையில் நாளையதினம் யாழிற்கு ஐனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வரகை தந்த தேர்தல் பிரச்சாரப் பனிகளில் ஈடுபடவுள்ள நிலையில் ஐனாதிபதி கலந்து கொள்ளும் நிகழ்வு மேடைகளில் கூட்டமைப்பு உறுப்பினர்களும் தனக்கு ஆதரவு என்பதனைக் காட்டுவதற்காகவே பல கோடிகளில் இப்பேரம் பேச்சு நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிய வருகின்றது.
இந்நிலையில் கூட்டமைப்பின் பருத்தித்துறை பிரதேச மற்றும் நகர சபையின் உறுப்பினர்கள் அரச பக்கம் கட்சி தாவியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதே போன்று ஏற்கனவே வவுனியாவிலும் கூட்டமைப்பின் பிரதேச சபை உறுப்பினர்கள் சிலரும் ஐனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு தெரிவித்து அரசுடன் இணைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyBTVKbmqy.html
மகிந்தவின் நாளைய பிரசாரக் கூட்டங்களுக்கு மக்களை அழைத்து வர 450 இ.போ.ச. பஸ்கள் யாழ். வருகை
[ வியாழக்கிழமை, 01 சனவரி 2015, 03:16.08 PM GMT ]
ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்காக நாளைய தினம் யாழ்.குடாநாட்டுக்கு ஜனாதிபதி வருகைதரவுள்ள நிலையில் ஜனாதிபதி கலந்து கொள்ளும் நிகழ்வுக்கு மக்களை அழைத்து வருவதற்காக இலங்கை போக்குவரத்துச் சபையின் 450 பேருந்துகள் யாழ்.குடாநாட்டுக்கு கொண்டுவரப்பட்டிருக்கின்றன.
நாளைய தினம் யாழ்.குடாநாட்டுக்கு வருகை தரும் ஜனாதிபதி யாழ்.துரையப்பா விளையாட்டரங்களில் நடைபெறவுள்ள பிரச்சாரக் கூட்டத்திலும் கலந்து கொள்ளவுள்ளார்.
இந்நிலையில் குறித்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மக்களை குடாநாட்டின் பல பகுதிகளிலிருந்தும் அழைத்து வருவதற்காக, குறித்த பேருந்துகள் யாழ்.குடாநாட்டுக்கு கொண்டுவரப்பட்டிருக்கின்றன.
அனுராதபுரம், கிளிநொச்சி, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் நடைபெற்ற ஜனாதிபதியின் பிரச்சாரக் கூட்டங்களுக்கு மிக முறைகேடான முறையில் அரசாங்க சொத்துக்களான பேருந்துகள் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் தேர்தல் கண்காணிப்பு, அமைப்புக்கள் பல சுட்டிக்காட்டியிருந்த நிலையில், தற்போது யாழ்.குடாநாட்டிலும் பிரச்சாரத்திற்காக அரச சொத்தான போக்குவரத்துப் பேருந்துக ளை பாவிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றமை இங்கே குறிப்பிடத்தக்கது.
இதேவேளை சமுர்த்தி திட்டத்தின் கீழ் 'செழிப்பான வீடு;' என்னும் செயற்றிட்டம் கடந்த பல மாதங்களுக்கு முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.  இந்நிலையில் குறித்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10ஆயிரம் ரூபா வழங்கப்படும்,
இந்நிலையில் மேற்படி திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்தாமல் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் நடைமுறைப்படுத்தி அதன் மூலம் யாழ்.குடாநாட்டில் ஈ.பி.டி.பியினர் தேர்தல் பிரச்சாரத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக இன்றைய தினம் யாழ்.குடாநாட்டில் பல சமுர்த்தி வங்கிகளில் பணம் பெறச்சென்ற மக்களுக்கு 2500 ரூபா நிதியினை மட்டும் வழங்கிவிட்டு மீதம் உள்ள 7500ரூபா நிதியை நாளைய தினம் ஜனாதிபதியின் கூட்டத்தில் பெறுமாறு ஈ.பி.டி.பியினால் கூறப்பட்டுள்ளமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyBTVKbmqz.html
புதிய ஆண்டில் தமிழர் தேசம் விடியலுக்கான காலடிகளை முன்னோக்கி வைக்கும்! பிரதமர் வி.உருத்ரகுமாரன்
[ வியாழக்கிழமை, 01 சனவரி 2015, 03:25.36 PM GMT ]
தனது அரசியல் விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் ஈழத் தமிழர் தேசம் இப்புதிய ஆண்டில் விடியலுக்கான காலடிகளை முன்னோக்கி வைக்கும் என்பதே எமது நம்பிக்கை என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் விடுத்துள்ள புத்தாண்டுச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஈழத்தமிழர்களின் நீதிக்கான போராட்டத்தில் 2014ம் ஆண்டில் எட்டப்பட்ட விடயங்கள், சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தல் விவகாரத்தில் தமிழர் தாயகத் தலைவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஆறு விவகாரங்கள், மற்றும் 2015ம் ஆண்டுக்கான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெரும் செயற்திட்டம் என பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக பிரதமர் வி.உருத்திரகுமாரனது புத்தாண்டுச் செய்தி அமைந்துள்ளது.
அறிக்கையின் முழுவடிவம்:-
மலரும் புதிய ஆண்டு தமிழ் மக்களுக்கு நன்மைகளைத் தரும் ஆண்டாக அமையும் என்ற நம்பிக்கையுடன் உலகத் தமிழ் மக்கள் அனைவருக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் எனது புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தை மாதம் தமிழர்கள் மத்தியில் நம்பிக்கையையும் புத்துணர்வையும் தரும் மாதமாகும். தைத் திருநாள் பொங்கல் விழாவுடன் தை பிறந்தால் வழி பிறக்கும் என்று தை மாதத்தை வரவேற்பது தமிழர் பண்பாட்டுடன் நன்கு இணைந்து போயுள்ள வாழ்வியல் நம்பிக்கையாகும். இந்த நம்பிக்கையுடன் நாம் புத்தாண்டை வரவேற்றுக் கொள்வோமாக!
தனது அரசியல் விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் ஈழத் தமிழர் தேசம் இப் புதிய ஆண்டில் விடியலுக்கான காலடிகளை முன்னோக்கி வைக்கும் என்பதே எமது நம்பிக்கை.
2014 ல் எமது முன்னோக்கிய காலடி
கடந்து சென்ற 2014ம் ஆண்டு தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஒரு காலடி முன்னோக்கி நகர்த்தியுள்ளது. சிங்களத்தின் இனஅழிப்புக்கு எதிரான தமிழ் மக்களின் நீதி கோரும் போராட்டம் கூடுதலாக அனைத்துலக மயப்படுத்தப்பட்டுள்ளது.
தேசங்களிடையே ஏற்படும் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு பிரிந்து சென்று தனிநாடு ஒன்றை உருவாக்குவதனை அரசியல் தீர்வாக முன்வைப்பதும், அக் கோரிக்கையினை அரசியல் ரீதியாக, ஜனநாயக வழியில் மக்கள் வாக்கெடுப்பின் ஊடாகக் கையாண்டு தீர்வினைக் காண முயல்வதும் செழுமை மிகு அரசியல் பண்பாடாக கடந்த ஆண்டில் பிரித்தானியாவில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
தமிழீழ தேசமும் தனது சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலும் சிங்களத்தின் இனஅழிப்பில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கான பரிகார நீதி என்ற வகையிலும் தமிழீழம் என்ற தனிநாட்டை அமைப்பதனை தேசியப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வாக வரித்துக் கொள்வதும், அதற்காக ஜனநாயக அடிப்படையிலான மக்கள் வாக்கெடுப்பைக் கோருவதும் தார்மீக ரீதியில் வலுப் பெற்றுள்ளது.
இத் தார்மீக அடிப்படையினை வலுவாகக் கொண்டு தமிழீழத் தனியரசினை அமைப்பதற்கான எமது மக்களின் ஜனநாயக உரிமையினை வென்றெடுப்பதற்குத் தேவையான அரசியல் பொறிமுறையினை நாம் வளர்த்தெடுக்க வேண்டும்.
இதற்காக Yes to Referendum எனும் பொது வாக்கெடுப்பினை வலியுறுத்தும் புதிய அரசியல் இயக்கத்தினை 2015ம் ஆண்டிலிருந்து முன்னெடுக்க நாம் திட்டமிட்டுள்ளோம். இந்த Yes to Referendum இயக்கம் உலகெங்கும் உள்ள தமிழர் அமைப்புகளையும் நீதிக்காகக் குரல் தரக்கூடிய அனைத்துலக சிவில் சமூக அமைப்புக்களையும் இணைத்தவாறு முன்னெடுக்கப்படும்.
இவ் Yes to Referendum என்ற அரசியல் இயக்கத்துடன் இணைந்து கொள்ளுமாறு அனைத்துத் தமிழர் அமைப்புகளுக்கும் நாம் இத் தருணத்தில் தோழமையுடன் வேண்டுகோள் விடுக்கிறோம்.
சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தல்
2015ம் ஆண்டில் சிங்கள தேசத்தின் ஆட்சித் தலைவரைத் தேர்ந்தேடுப்பதற்கான தேர்தல் ஜனவரி 8ம் திகதி நடைபெறுகிறது. ஈழத் தமிழர் தேசம் சிங்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் இத் தேர்தல் தமிழர் தாயகப் பகுதிகளிலும் நடைபெறுகிறது.
பிரதான வேட்பாளர்கள் இருவரில் எவர் வெற்றி பெறினும் சிறிலங்கா இனவாத அரசின் தலைவர்களாகவே இருப்பார்கள். இருவரில் எவர் தெரிவானாலும் தமிழ் மக்களுக்கு விளையும் நன்மைகளை விடத் தீமைகளே அதிகமாக இருக்கும்.
மகிந்த ராஜபக்ச தெரிவானால் உடடியான தீமையும் நீண்டகாலத்தில் நன்மையும் கிடைக்கலாம். மைத்திரிபால சிறிசேன தெரிவானால் உடனடி நன்மையும் நீண்ட காலத்தில் தீமையும் கிடைக்கலாம். எது எவ்வாறாக இருந்தாலும் ஒட்டுமொத்தமாக நோக்கின் தீமைகளே எம்மை நோக்கிச் சூழப் போகின்றன. இதனை மனதில் வைத்துத் தாயக மக்கள் தங்கள் தீர்மானங்களை எடுப்பார்கள் என நாம் நம்புகிறோம்.
தமிழ் மக்களின் உரிமைகள் சிங்களத் தலைவர்களின் கருணையால் ஒரு போதும் கிடைக்கப் போவதில்லை என்பதும் சிங்கள பௌத்த இனவாத அரசு தமிழர்களை ஒரு தனித்துவமான மக்களாக ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பதனையும் வரலாறு எமக்குத் தெளிவாகக் கற்றுத் தந்துள்ளது.
இதனால் எவர் ஜனாதிபதி பதவியைப் பெற்றுக்கொண்டாலும் எமது உரிமைப் போராட்டம் பாதுகாக்கப்படுவதற்கான கோரிக்கைளை முன்வைத்துத் தாயகத் தலைவர்கள் செயற்பட வேண்டும் என இப் புத்தாண்டுத் தினத்தில் நாம் கோருகிறோம். தற்போதய காலகட்டத்தில் பின்வரும் கோரிக்கைகள் தமிழ் தேசத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அவசியமானவை என நாம் கருதுகிறோம்.
1. சிறிலங்கா அரசின் தமிழ் மக்கள் மீதான இனஅழிப்புக் குறித்து அனைத்துலக விசாரணை தேவை.
2. தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வாக 13வது திருத்தச் சட்டத்தினை அடிப்படையாகக் கொள்வதனை ஏற்க முடியாது.
3. தமிழர் தாயகத்தின் சிவில் வெளியை உருவாக்குவதற்கு முன்நிபந்தனையாகத் தமிழர் தாயகப் பகுதியில் இருந்து சிறிலங்கா இராணுவத்தினர் வெளியேற்றப்பட வேண்டும்.
4. தமிழர் தாயகத்தில் சிங்களம் நடாத்தும் நிலக்கபளீகரம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
5. தமிழர் தாயகப் பகுதியின் மேம்பாட்டு நடவடிக்கைகளில் புலம் பெயர் தமிழ் மக்கள் அச்சமின்றிப் பங்குபற்றக்கூடிய வகையிலானதொரு பொறிமுறை அனைத்துலகச் சமூகத்தின் பங்குபற்றுதலுடன் உருவாக்கப்படவேண்டும்.
6. தமிழ் மக்கள் தமது அரசியல் எதிர்காலம் பற்றி ஜனநாயக வழியில் உரையாடவும் விவாதிக்கவும் தடையாகவுள்ள அரசியலமைப்பின் 6வது திருத்தச் சட்டம் நீக்கப்பட வேண்டும்.
மிகக் குறைந்த பட்சமான இவ் ஜனநாயகக் கோரிக்கைகளைத் தாயகத் தலைவர்கள் தமது கவனத்திற் கொள்வார்கள் என்றே நாம் நம்புகிறோம்.
2015 இன் பெருஞ்செயற்திட்டம்
2015ம் ஆண்டிலிருந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது செயல்முனைப்பை வேகப்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை அடையாளம் கண்டு நடைமுறைப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. இச் செயற்திட்டங்கள் பிரதமர் பணிமனையின் ஊடாக ஒருங்கிணைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
பதிப்பகம், ஆவணக் காப்பகம், Yes to Referendum அரசியல் இயக்கம், நிலக் கபளீகர எதிர்ப்பியக்கம், தமிழ்க் கல்வி மேம்பாட்டு மதியுரைப்பீடம், உலகத் தமிழர் பல்கலைக் கழகம், மாவீரர் நினைவாலயம், இந்தியாவில் தோழமை மைய பணிமனைகள், நல்லெண்ணத் தூதுவர்கள், மாவீரர் போராளிகள் குடும்ப நலன் பேணும் மையங்கள், தாயகத்தில் சுயதொழில் வளர்ச்சித் திட்டங்கள், பசுமையைக் காப்போம் - சூழல் விழிப்புணர்வு இயக்கம், உள்ளடங்கலாக 15 செயற்திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்ட வகையில் ஒரு பெரும் வேலைத்திட்டமாக (Massive Working Programme) 2015ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்த நாம் திடசங்கற்பம் பூண்டுள்ளோம்.
இத் திட்டங்களைச் செயற்படுத்துவதற்கு உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் பங்குபற்றுதல் மிகவும் அவசியமானதாகும். இத் திட்டங்களுடன் செயற்பட விரும்பும் அனைவரையும் எம்முடன் பின்வரும் மின்னஞ்சல் முகவரி ஊடாகத் தொடர்பு கொள்ளுமாறும் வேண்டுகிறோம்.
தொடர்புக்கான மின்னஞ்சல் முகவரி: massiveplan@tgte.org
புதிய ஆண்டில் எமது மண்ணும் மக்களும் முழுமையான விடுதலைபெறும் இலக்கு நோக்கிய இலட்சியப் பாதையில் முன்னோக்கிய காலடிகளைப் பதிப்போம் என உறுதி எடுத்துக் கொள்வோமாக!
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!
இவ்வாறு பிரதமர் வி.உருத்திரகுமாரனது புத்தாண்டுச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyBTVKbmq0.html

ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பின் முடிவுக்கு யாழ் வணிகர் கழகம் ஆதரவு
[ வியாழக்கிழமை, 01 சனவரி 2015, 03:59.02 PM GMT ]
நடைபெறவுள்ள ஐனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவிற்கு யாழ் வணிகர் கழகமும் முழுமையான ஆதரவை வழங்குவதாக கழகத்தின் தலைவர் ஆர்.ஜெயசேகரம் தெரிவித்துள்ளார்.
வடக்கிற்கு கடந்த செவ்வாய்க் கிழமை விஐயம் மேற்கொண்டிருந்த பொது எதிரணியினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது நல்லூர் சங்கிலியன் பூங்காவில் மாபெரும் கூட்டம் நடைபெற்றது.
இங்கு பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஐனாதிபதி சந்திரிக்கா உள்ளிட்ட பல தரப்பினர்களும் கலந்த கொண்டிருந்தனர்.
அதவேளையில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் டட்லி சிறிசேன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சிகளின் பிரதிநிதிகள் ஐனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வேண்டி கிறீன் கிறாஸ் ஹோட்டலில் யாழ் வர்த்தக சங்கத்த்தினருடன் சந்திப்பொன்றை நடத்தினர். இதன் போதே ஜெயசேகரம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்ததாவது..
நடைபெறவுள்ள ஐனாதிபதித் தேர்தலில் நாங்கள் எந்த முடிவுகளையும் எடுப்பதற்கு முன்னராக தமிழ்த் தலைமைகள் குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பனரின் முடிவிற்கு வர்த்தக சங்கத்தினரும் முழுமையான ஆதரவுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அவ்வாறு அவர்கள் எடுக்கின்ற முடிவுகளுக்கமைய வர்த்தக சங்கமும் கட்டுப்பட்டுச் செயற்படுமென்றும் எதுவானாலும் இன்று எமது மக்கள் எதிர் நோக்கி வருகின்ற பாதிப்புக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியமாகவே இருக்கின்றது.
தற்போது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட 100 நாள் வேலைத் திட்டத்தில் மிக முக்கியமாக செய்யப்பட வேண்டிய விடயங்களை அமுல்ப்படுத்துவதன ஊடாக மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும்.
அதாவது நீண்டகாலமாக விசாரணைகளின்றி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும்.
போரினால் பாதிக்கப்பட்டு நீண்ட காலமாக இடம்பெயர்ந்து வாழும் வலிகாமம் வடக்கு உட்பட முகாம்களில் தங்கியிருக்கின்ற மக்களை மீளக் குடியமர்த்த வேண்டும்.
மேலும் வெளிநாடுகளிலிருந்து வருகின்ற புலம்பெயர் உறவுகளுக்கு நடைமுறைப்படுத்தப்படும் பாஸ் நடைமுறையை நீக்கி ஓமந்தைச் சோதனைச் சாவடியை அகற்ற வேண்டும்.
இந்தியா உட்பட வெளிநாடுகளில் அகதிகளாக வாழும் எமது மக்கள் மீண்டும் நாட்டிற்கு வந்த குடியமர்வதற்கு இரட்டைப் பிராஐவுரிமை வழங்க வேண்டும்.
போரினால் பாதிக்கப்பட்ட விதவைக் குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித் திட்டங்களை உடனடியாக அமுல்ப்படுத்தல் ஆகியவற்றைக் குறிப்பிட்டார்.
இவைகளை 100 நாள் திட்டத்தில் உள்ளடக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததுடன் நீண்ட நாள் பிரச்சானையாக இருக்கின்ற தமிழ் மக்களின் இனப்பிரச்சனை தொடர்பில், நீங்கள் அமைக்கப் போகும் அரசு தமிழ்த் தலைமைகளுடன் கலந்தரையாடி நீடித்து நிலைத்து நிற்ககக் கூடிய நிலையான இறுதித் தீரவை ஏற்படுத்த வேண்டும் என்றும் ஜெயசேகரம் மேலும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTVKbmq1.html

Geen opmerkingen:

Een reactie posten