நாட்டை விட்டு வெளியேறும் உத்தேசம் கிடையாது என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் கப்ரால் தெரிவித்துள்ளார்.
என்னை அவமானப்படுத்தும் நோக்கில் போலியான குற்றச்சாட்டுக்கள் பிரச்சாரம் செய்யப்படுகின்றன. மத்திய வங்கியின் ஆளுனராக கடமையாற்றிய எட்டரை ஆண்டு காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
கடந்த 9ம் திகதி பதவியை ராஜனினாமா செய்ததுடன் கடந்த 15ம் திகதி உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்தும் வெளியேறினேன். எனது குற்றமற்றத்தன்மை எதிர்வரும் நாட்களில் நிரூபணமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
தமக்கு எதிராக சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் உண்மையில்லை எனத் தெரிவித்து கப்ரால் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
கடந்த அரசாங்க காலத்தில் அஜித் கப்ராலின் நடவடிக்கைகளினால் பாரியளவு நாட்டுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டதாக புதிய அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. கப்ராலின் நிதி முறைகேடுகள் ஊழல் மோசடிகள் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyBRXKcjt1.html
Geen opmerkingen:
Een reactie posten