தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 23 januari 2015

பெப்ரவரி 4இல் ஒரு தொகுதி தமிழ் இளைஞர்கள் விடுதலை செய்யப்படுவர்: விஜயகலா

வடக்கில் கல்வி நிலையை முன்னிலைப்படுத்த விசேட கவனம்: இராதாகிருஷ்ணன்
[ வெள்ளிக்கிழமை, 23 சனவரி 2015, 06:43.09 AM GMT ]
வடக்கில் மூடப்பட்டிருக்கும் பாடசாலைகள், பயிற்சிக் கலாசாலைகள் சர்வகலாசாலைகள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்படும் என இராஜாங்க கல்வி அமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமன்றி, அங்கு பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாக அங்குள்ள முதலமைச்சர் உட்பட மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து தீர்வை பெற்றுக்கொடுக்கவும் இது தொடர்பாக ஜனாதிபதி, பிரதமரின் கவனத்திற்குக் கொண்டுவரவும் எதிர்பார்த்துள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சின் கேட்போர் கூட மண்டபத்தில் நடைபெற்ற ஆசிரிய நியமனம் வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கை தேசிய கல்வியியல் கல்லூரி, ஆசிரிய பயிற்சிக் கலாசாலை, ஆசிரிய மத்திய நிலையங்களுக்கான தமிழ் மொழி மூலம் 107 பேரும் சிங்கள மொழி மூலம் 108 பேருமாக மொத்தம் 215 பேருக்கான நியமனங்கள் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், இராஜாங்க கல்வி அமைச்சர் இராதாகிருஷ்ணன் ஆகியோரால் கொழும்பில் அமைந்துள்ள இசுறுபாய அமைச்சின் கேட் போர் கூடத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
கல்வியின் மூலமே ஒரு நாட்டின் பல்வேறு துறைகளும் அபிவிருத்தி அடைய முடியும். உலகின் ஏனைய நாடுகளுக்கு நிகராக எமது இலங்கை உயர்வடைய வேண்டுமானால் கல்வித்துறை சரியான முறையில் அமுல்படுத்தப்பட வேண்டும்.
எமது நாட்டில் சிங்களவர், தமிழர், முஸ்லிம் ஆகிய மூவினத்தவர்களும் கல்வியைப் பெற்றுக்கொள்வதில் சம வாய்ப்பை பெற்றுக்கொடுக்க எனக்கு கிடைத்துள்ள இந்த அமைச்சுப் பதவியை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்வேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் நன்கு ஆராய்ந்து எனக்களித்துள்ள இந்த பதவியை எந்த நோக்கத்திற்காக எனக்கு வழங்கியுள்ளார்களோ அதன்படி செயலாற்றுவேன்.
மத்திய மாகாணத்தில் கல்வி அமைச்சராக இருந்த காலப்பகுதியில் மூவினத்தைச் சேர்ந்த கல்விப்பணிப்பாளர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் ஆகியோருடன் இணைந்து கல்வி மேம்பாட்டுக்காக ஒன்றிணைந்து செயலாற்றிய அனுபவம் எனக்கு உண்டு.
அதேசமயம் மலையக கல்வி எம் நாட்டில் பின்னடைவாகக் காணப்படுவதை அனைவரும் ஏற்றுக்கொள்ளும் ஒரு விடயமாகும். ஐந்து வீதமான மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்கு அனுமதி பெறவேண்டி இந்த காலகட்டத்தில் ஒரு வீதமான மாணவர்களே அனுமதி பெறுகின்றமை மிகவும் கவலைக்குரிய ஒரு விடயமாகும்.
மலையகத்தில் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பிரிவில் விஞ்ஞான, வர்த்தக துறைகளுக்கு தகுதியான மாணவர்கள் உருவான போதும் உயர் தரத்தில் இத்துறைகளில் பணிபுரிய போதிய ஆசிரிய ஆளணியினர் இல்லை. எனவே ஓரிரு பட்டதாரி ஆசிரியர்களுடன் மூன்று பாடங்களிலும் சித்திபெற மாணவர்கள் பெரும் இடர்பாடுகளை எதிர்நோக்குகின்றனர்.
இவ்வாறான ஒரு சூழ்நிலையில் மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியை பெறுவது மிகவும் சவாலான ஒரு விடயமாகும். இத்துடன் கல்விப் பொதுத் தராதர உயர்தரத்தில் ஆங்கில பாடம் கற்பிப்பதற்கும் அத்துறைசார் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்கள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றனர்.
எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் முன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் 74ஆவது உத்தேச நலன்சார் வேலைத்திட்டத்தின்படி பாடத்துறை சார்ந்த விசேட பாடசாலைகளை இனங்கண்டு அவற்றை அபிவிருத்தி செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதோடு குறைபாடான பாட ரீதியான ஆசிரிய நியமனங்கள் தொடர்பாக விரைவான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். அதேசமயம் தமிழ் மொழி மூலமான பட்டதாரி ஆசிரியர் நியமனங்களை விரைவுபடுத்தவும் ஆவன செய்யப்படும்.
இலங்கையில் இயங்குகின்ற முஸ்லிம் பாடசாலைகளிலும் பௌதீக வள, மனித வள குறைபாடுகளுடன் இயங்கி வருவதை நானறிவேன். இந்த விடயம் தொடர்பாக முஸ்லிம் அமைச்சர்களுடனும் பணிப்பாளர்களுடனும் அந்தந்த மாவட்டத்திற்குச் சென்று கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் முடிவு செய்துள்ளேன்.
பாடசாலைகளில் பல வருடகாலமாக நிலவும் ஆளணி வெற்றிடங்களுக்கு காவலாளி, தொழிலாளி, ஆய்வுகூட உதவியாளர் போன்ற சிற்றூழியர்களை நியமிக்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். சிங்கள மொழிமூல பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாக அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்து அவற்றை தீர்த்து வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRXKcjs5.html
சந்திரிக்காவை மீண்டும் சுதந்திரக்கட்சியின் தலைவராக நியமிக்க வேண்டும்: கட்சியின் உறுப்பினர்கள் யோசனை
[ வெள்ளிக்கிழமை, 23 சனவரி 2015, 06:49.10 AM GMT ]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்காலம் குறித்து கவலை கொண்டுள்ள அந்த கட்சியின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் தலைமைத்துவத்திற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை கொண்டு வர வேண்டும் என யோசனை முன்வைத்துள்ளனர்.
அவரை தலைமைத்துவத்திற்கு கொண்டு வருவதன் மூலம் கட்சியை வெற்றி பாதையில் இட்டுச் செல்ல முடியும் எனவும் அவர்கள் கருதுகின்றனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இன்றைய தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தன்னை ஜனாதிபதி பதவியில் அமர்த்த ஐக்கிய தேசியக் கட்சி உதவியதன் காரணமாக அந்த கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசங்கவின் அரசியல் எதிர்காலம் குறித்து அக்கறை காட்டி வருகிறார்.
இது சுதந்திரக் கட்சியின் முன்னோக்கிய பயணத்திற்கு தடையாக இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணுவதாக கூறப்படுகிறது.
கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரபல ஹொட்டல் ஒன்றில் கூடிய 20க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்கூறிய விடயங்கள் சம்பந்தமான விரிவாக கலந்துரையாடியுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyBRXKcjs6.html
மட்டக்களப்பில் இரு சிறுவர்கள் பரிதாப மரணம்- குடும்ப தகராற்றில் இளைஞர், பெண் பலி
[ வெள்ளிக்கிழமை, 23 சனவரி 2015, 07:26.21 AM GMT ]
மட்டக்களப்பு ஏறாவூர் தாமரங்கேணி பகுதியில் உள்ள சிறிய நீர்த்தேக்கத்தில் நீராடிக் கொண்டிருந்த இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தப் பரிதாப சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இதில் 10 மற்றும் 11 வயதுடைய இரு சிறுவர்களே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இரு சிறுவர்களினதும் உடல் ஏறாவூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பியகம- ரக்சபான – மல்வானை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி 28 வயதுடைய ஒருவர் பலியாகியுள்ளார் அத்தோடு புளத்சிங்கள பகுதியில் பெண் 35 ஒருவரும் குடும்ப பிரச்சினையில் கொலை செய்யப்படடுள்ளார்.
இந்த கொலைகள் தொடர்பில் சந்தேக நபர்கள் கைது செய்யபப்பட்டு நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பெப்ரவரி 4இல் ஒரு தொகுதி தமிழ் இளைஞர்கள் விடுதலை செய்யப்படுவர்: விஜயகலா
[ வெள்ளிக்கிழமை, 23 சனவரி 2015, 07:29.19 AM GMT ]
மகளிர் விவகார பிரதியமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் இன்று செத்சிரிபாயவின் புதிய கட்டிடத்தில் உள்ள மகளிர் விகார அமைச்சில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர்,
இந்த அமைச்சின் ஊடாக வட கிழக்கு உற்பட ஏனைய பிரதேசங்களிலும் துன்பப்பட்ட தமிழ் பேசும் பெண்கள் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு சேவையாற்றுவேன்.
இந்த பிரதியமைச்சுப் பொறுப்பை எனக்கு வழங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மற்றும் ஐ.தே.கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு எனது நன்றி.
வடக்கில் வாழ்ந்த மக்கள் பாரிய இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர். அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும். அதற்காக கூடுதலான நிதி மற்றும் ஏனைய அமைச்சர்களின் உதவியையும் பெற்றுக்கொள்வேன்.
கடந்த யுத்த காலத்தில் பல ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் எவ்வித விசாரணையுமின்றி சிறையில் வாடுகின்றனர். இவர்களது தாய், தந்தையர்கள், மனைவி மற்றும் பிள்ளைகள் மிகவும் துன்பநிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இவர்களை உரிய விசாரணைகளை மேற்கொண்டு விடுதலை செய்யப்படல் வேண்டும்.
எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திர தினத்தில் ஒரு தொகுதி தமிழ் இளைஞர்கள் விடுதலை பெறுவார்கள். அதற்காக ஜனாதிபதி பிரதமர், சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRXKcjty.html

Geen opmerkingen:

Een reactie posten