[ வெள்ளிக்கிழமை, 23 சனவரி 2015, 08:16.39 AM GMT ]
அதேவேளை மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் வழங்கிய வாழ்க்கை செலவு கொடுப்பனவும் அதிகரிப்பு இதனுடன் இணைத்து அரச துறை ஊழியர்களுக்கு வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதனையடுத்து எதிர்வரும் ஜூன் மாதம் மேலும் 5 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும். எவ்வாறாயினும் தனியார் துறை ஊழியர்களுக்கு இந்த ஊதிய அதிகரிப்பு வழங்கப்பட மாட்டாது எனவும் நிதியமைச்சர் கூறியுள்ளார்.
அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதி வழங்கியிருந்தார்.
இதனடிப்படையில் முதல் கட்டமாக 5 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் எனவும் அவர் உறுதியளித்திருந்தார்.
புதிய அரசாங்கம் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்கிறது
இலங்கையின் புதிய அரசாங்கம் எதிர்வரும் 29ஆம் திகதியன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ள இடைக்கால வரவுசெலவுத்திட்டத்தில் மக்களுக்கு அதிக நிவாரணங்களை வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இந்த வரவுசெலவுத்திட்டத்தில் அத்தியாவசிய 10 பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளன.
இதனை தவிர அரச பணியாளர்களின் சம்பளம் ஐயாயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கான உறுதிமொழி கடந்த ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களின்போது வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyBRXKcjt0.html
நாட்டை விட்டு வெளியேறும் உத்தேசம் கிடையாது: அஜித் கப்ரால்
[ வெள்ளிக்கிழமை, 23 சனவரி 2015, 08:22.33 AM GMT ]
என்னை அவமானப்படுத்தும் நோக்கில் போலியான குற்றச்சாட்டுக்கள் பிரச்சாரம் செய்யப்படுகின்றன. மத்திய வங்கியின் ஆளுனராக கடமையாற்றிய எட்டரை ஆண்டு காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
கடந்த 9ம் திகதி பதவியை ராஜனினாமா செய்ததுடன் கடந்த 15ம் திகதி உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்தும் வெளியேறினேன். எனது குற்றமற்றத்தன்மை எதிர்வரும் நாட்களில் நிரூபணமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
தமக்கு எதிராக சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் உண்மையில்லை எனத் தெரிவித்து கப்ரால் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
கடந்த அரசாங்க காலத்தில் அஜித் கப்ராலின் நடவடிக்கைகளினால் பாரியளவு நாட்டுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டதாக புதிய அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. கப்ராலின் நிதி முறைகேடுகள் ஊழல் மோசடிகள் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
தேர்தல் முறையை மாற்றினால் தேர்தல் நடத்த மூன்று மாதங்கள் அவகாசம் தேவை: மகிந்த தேசப்பிரிய
[ வெள்ளிக்கிழமை, 23 சனவரி 2015, 08:27.53 AM GMT ]
எனினும் தேர்தல் முறையில் மாற்றங்கள் செய்தால், தேர்தலை நடத்த மூன்று மாத கால அவகாசம் தேவை எனவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை தேர்தல் ஆணையாளர் இன்று அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.
தேர்தலில் அரச ஊழியர்களை தவிர ஊடக, தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளின் உறுப்பினர்களுக்கு தபால் மூலம் வாக்களிக்கும் உரிமையை வழங்குவது தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பூரண பொது மன்னிப்பை பெற்றுள்ள சரத் பொன்சேகாவுக்கு வாக்குரிமை இருக்கின்றதா என இதன் போது கேள்வி எழுப்பட்டது.
அவருக்கு வாக்குரிமை இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மீண்டும் வழங்குவது குறித்து சட்ட ஆலோசனையை எதிர்பார்ப்பதாகவும் தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRXKcjt2.html
தலதா மாளிகை வீதியை திறக்குமாறு மல்வத்து மாநாயக்க தேரர் கோரிக்கை
[ வெள்ளிக்கிழமை, 23 சனவரி 2015, 08:30.54 AM GMT ]
பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த அரசாங்க காலத்தில் தலதா மாளிகைக்கு எதிரில் உள்ள வீதி மூடப்பட்டிருந்தது.
இந்த வீதியை பொதுமக்களின் பாவனைக்காக திறந்து விடுமாறு மல்வத்து மாநாயக்க தேரர் கோரியுள்ளார்.
அமைச்சர் வசந்த அலுவிஹாரேயிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புத்த பிரான் உயிருடன் வாழ்ந்த காலத்திலும் மக்களின் நலனை கருத்திற் கொண்டு தீர்மானங்களை எடுத்ததாக மல்வத்து பீடாதிபதி தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த வீதியை தொடர்ந்தும் மூடி வைக்குமாறு அஸ்கிரி மாநாயக்க தேரர் புத்தரக்கித தேரர், அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்லவிடம் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyBRXKcjt3.html
பிள்ளைகளை சர்வதேசத்திற்கு ஏற்றவகையில் தயார்படுத்த வேண்டும்: ஜனாதிபதி
[ வெள்ளிக்கிழமை, 23 சனவரி 2015, 08:40.20 AM GMT ]
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டப சூழலில் நடைபெறும் எடேக்ஸ் கண்காட்சியை இன்று காலை ஆரம்பித்து வைத்து பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கையின் பிள்ளைகள் இலங்கையின் சவால்களுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டு விடக் கூடாது. தமது பிள்ளைகளுக்கு வகுப்பறையில் மாத்திமே போட்டியிருப்பதாக சில பெற்றோர் நம்புகின்றனர்.
எனினும் இலங்கையின் பிள்ளைகள் இலங்கையில் மாத்திரமல்ல சர்வதேசத்தையும் வெற்றி கொள்ளக் கூடிய வகையில் தயார்படுத்த வேண்டும் என்பதை சகலரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி வலிறுயுத்தியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRXKcjt4.html
கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி யாருக்கு?
[ வெள்ளிக்கிழமை, 23 சனவரி 2015, 08:58.42 AM GMT ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் அந்த கட்சியின் பிரதிநிதிகள் நேற்று ஜனாதிபதியை அவரது செயலகத்தில் சந்தித்து இது பற்றி பேச்சுவார்த்தை நடத்தினர்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி தமது கட்சிக்கு வழங்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளதால், முதலமைச்சர் பதவி தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் இரா.சம்பந்தன் இடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதுடன் எந்த இணக்கப்பாடும் அதில் எட்டப்படவில்லை.
37 உறுப்பினர்களை கொண்ட கிழக்கு மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 11 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கு 7 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 4 உறுப்பினர்களும் உள்ளனர்.
தேசிய சுதந்திர முன்னணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உட்பட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 15 உறுப்பினர்கள் உள்ளனர்.
கிழக்கு மாகாணத்தை பொறுத்த வரையில் 2012 சனத்தொகை கணக்கெடுப்பின்படி
தமிழர்கள் 609,584 (40%)
முஸ்லிம்கள் 569,182 (37%)
சிங்களவர்கள் 359,136 (23%)
இதன்படி 3 சமூகங்களும் ஒட்டுமையகத்தான் ஆட்சி செய்யவேண்டும் எனவே இரண்டு முறையான அதிகார பகிர்வை செய்யமுடியும்
ஆளுநர் - சிங்களவர்
ஆளுநரின் செயலாளர் - முஸ்லிம்
முதலமைசர் - தமிழர்
பத்து அமைசர்கள் என்றால்
5 - முஸ்லிம்கள்
3- தமிழர்கள்
2 - சிங்களவர்கள்
அல்லது
ஆளுநர் - சிங்களவர்
ஆளுநரின் செயலாளர் - தமிழர்
முதலமைசர் - முஸ்லிம்
பத்து அமைசர்கள் என்றால்
5 - தமிழர்கள்
3- முஸ்லிம்கள்
2 – சிங்களவர்கள்
என்ற விகிதத்தில் பகிரப்பட வேண்டும், இவ்வாறானதொரு 5 வருடங்களுக்கு ஒருமுறையான சுழற்சி ஆட்சியே கிழக்கு மாகாணத்தின் வளர்ச்க்கும் ஆரோக்கியத்திற்கும் சிறந்ததாகும்
தமிழர்கள் 609,584 (40%)
முஸ்லிம்கள் 569,182 (37%)
சிங்களவர்கள் 359,136 (23%)
இதன்படி 3 சமூகங்களும் ஒட்டுமையகத்தான் ஆட்சி செய்யவேண்டும் எனவே இரண்டு முறையான அதிகார பகிர்வை செய்யமுடியும்
ஆளுநர் - சிங்களவர்
ஆளுநரின் செயலாளர் - முஸ்லிம்
முதலமைசர் - தமிழர்
பத்து அமைசர்கள் என்றால்
5 - முஸ்லிம்கள்
3- தமிழர்கள்
2 - சிங்களவர்கள்
அல்லது
ஆளுநர் - சிங்களவர்
ஆளுநரின் செயலாளர் - தமிழர்
முதலமைசர் - முஸ்லிம்
பத்து அமைசர்கள் என்றால்
5 - தமிழர்கள்
3- முஸ்லிம்கள்
2 – சிங்களவர்கள்
என்ற விகிதத்தில் பகிரப்பட வேண்டும், இவ்வாறானதொரு 5 வருடங்களுக்கு ஒருமுறையான சுழற்சி ஆட்சியே கிழக்கு மாகாணத்தின் வளர்ச்க்கும் ஆரோக்கியத்திற்கும் சிறந்ததாகும்
http://www.tamilwin.com/show-RUmtyBRXKcjt5.html
Geen opmerkingen:
Een reactie posten