தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 2 januari 2015

புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க முந்திக் கொண்ட ஜனாதிபதி!

தேர்தல் நேரத்தில் சோதனை சாவடிகளும் நிறுவப்படும்! பாதுகாப்புக்காக 83,000 பேர் கடமையில்..
[ வெள்ளிக்கிழமை, 02 சனவரி 2015, 01:25.48 AM GMT ]
தேர்தலின் போது வன்முறைகளை கட்டுப்படுத்த 71 ஆயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார் 
இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் விசேட அதிரடிப்படைவீரர்களும் இணைத்துக்கொள்ளப்படுவர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலின் போது ஒரு வாக்குச்சாவடிக்கு இரண்டு ஆயுதம் தாங்கிய பொலிஸார் காவலில் இருப்பார்கள்.
அத்துடன் வீதிச் சோதனைச் சாவடிகளும் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் நிறுவப்படும் என்றும் ரோஹன தெரிவித்துள்ளார்.
தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்காக 83000 பேர் கடமையில்
தேர்தல் பாதுகாப்பு கடமைகளுக்காக 83000 பேர் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
பொலிஸ்,  விசேட அதிரடிப்படை மற்றும் சிவில் பாதுகாப்புப் பிரிவு ஆகியவற்றைச் சேர்ந்த 83,000 உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
இவர்களுக்கு மேலதிகமாக தேவை ஏற்பட்டால் இராணுவத்தினரின் ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.
இதேவேளை, தேர்தல் தினத்தன்று ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் அதனை தடுக்கும் நோக்கில் கலகத் தடுப்புப் பிரிவின் 150 குழுக்கள் ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்களுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடைபெறும் எதிர்வரும் 8ம் திகதி மற்றும் அதன் முன்னைய தினத்தில் நாடு முழுவதிலும் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய விசேட பொலிஸ் ரோந்து சேவைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.
420 பொலிஸ் வீதிச்சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு திடீர் சோதனைகள் நடத்தப்பட உள்ளதாகவும் காமினி நவரட்ன தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTWKbmr5.html
நாட்டில் தாங்கள் மட்டும் இருந்தால் போதும் என்று ராஜபக்சக்கள் நினைக்கின்றார்கள்!- சரத் பொன்சேகா
[ வெள்ளிக்கிழமை, 02 சனவரி 2015, 01:39.48 AM GMT ]
நாட்டில் தாங்கள் மட்டும் இருந்தால் போதும் என்று ராஜபக்சக்கள் நினைக்கின்றார்கள் என ஜனநயாகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நாட்டின் சாதாரண மக்களின் பிள்ளைகள் வயிறு பசியை போக்கிக் கொள்ள முடியாது இருக்கும் நிலையில் ராஜபக்ச பேபிக்களுக்கு லம்போகினி கார்கள் தேவைப்படுகின்றது.
சாதாரண மக்களின் பிள்ளைகளுக்கு குறைந்த பட்சம் ஓர் சைக்கிள் கூட வாங்க முடியவில்லை.
ராஜபக்ச குடும்பத்தினர் நினைக்கின்றார்கள் தாங்கள் மட்டும் வாழ்ந்தால் போதுமென்று.
தாங்கள் சாப்பிட்டு குடித்து வாழ்ந்தால் போதும் என்றே கருதுகின்றார்கள்.
அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு சாதாரண மக்களின் வயிற்றுப் பசி புரிவதில்லை.
இதுவா நாட்டின் ஆச்சரியம். இதுவா ஜனநாயகம்?
நாட்டில் காணப்பட்ட சுயாதீன நீதிமன்றக் கட்டமைப்பு இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. தங்களுக்கு தேவையான வகையில் நீதிமன்றம் வழிநடத்தப்படுகின்றது. இதனை எந்த நாளும் செய்ய முடியாது.
நாட்டின் படைவீரர்கள் வீதிகளில் கான்களை வெட்டுகின்றனர். படையினரின் வீரம் கூலித்தொழில்களில் ஈடுபடவே பயன்படுத்தப்படுகின்றது.
படைவீரர்கள் ராஜபக்ச குடும்பத்தின் அடிமைகள் அல்ல. எதிர்காலத்தில் படையினர் மற்றும் பொலிஸாரின் குறைந்தபட்ச சம்பளம் 40,000 ரூபாவாக உயர்த்தப்படும்.
எதிர்வரும் 8ம் திகதி மைத்திரிபாலவிற்கு வாக்களித்து நாட்டை மீட்டெடுக்க கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென சரத் பொன்சேகா அண்மையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTWKbmr6.html
புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க முந்திக் கொண்ட ஜனாதிபதி
[ வெள்ளிக்கிழமை, 02 சனவரி 2015, 03:00.39 AM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு குறுந்தகவல் ஊடாக புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பதில் முந்திக் கொண்டதாக அரசாங்க பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மலர்ந்துள்ள புதுவருடத்தை முன்னிட்டு (எஸ். எம். எஸ்.) குறுந்தகவல் ஊடாக புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
நேற்று புத்தாண்டு காலை வேளையிலேயே ஜனாதிபதியின் இந்த குறுந்தகவல் வாழ்த்து சகல கையடக்க தொலைபேசிகளுக்கும் வந்து சேர்ந்தன.
“உங்கள் எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்” என குறுந்தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வருடம் தோறும் இவ்வாறு புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறார்.
சிங்களம். தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் இச்செய்திகள் தெரிவிக்கப்பட்டன.
நாட்டின் தலைவரான ஜனாதிபதி இவ்வாறு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதில் முந்திக் கொண்டதை பலரும் பாராட்டியதாக எனஅந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்படுள்ளது
http://www.tamilwin.com/show-RUmtyBTWKbms0.html

Geen opmerkingen:

Een reactie posten