கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே யாழ்ப்பாண தமிழ் அரசுகள் அங்கு சேது நாணயம், நந்திக் கொடி கொண்டு சிறப்பாக ஆட்சி நடத்தினர் என்பது வரலாற்று உண்மை.
கலிங்கப் போருக்குப் பின் அசோகர் பௌத்த மதத்தைத் தழுவினார். மகேந்திரன் தலைமையில் பௌத்த குழுவை இலங்கைக்கு அனுப்பினார்.
அனுராதபுரத்தில், தேவநம்பிய திஸ்ஸன் என்ற மன்னன் ஆட்சியில் மகேந்திரர் குழு அங்கு பௌத்த போதனைகளைப் போதித்த பின் பௌத்த மதம் அங்கு வந்தது என்று கூறப்படுகின்றது.
அதற்கு முன்பே அங்கு தமிழர்கள் வாழ்ந்தனர் என்பதுதான் வரலாற்று உண்மை. இப்படியெல்லாம் ஆண்ட தமிழ் இனம். இன்று இனப்பாகுபாடுகள் மற்றும் புதிதாக தற்போது உதித்துள்ள மட்டக்களப்பு எட்டப்பர்கள் காரணமாக அழிவில் உள்ளது.
போர்த்துக்கீசர், டச்சு, ஆங்கிலேயர் ஆட்சிகள் முடிவுக்கு வந்த பின் தமிழர்களின் பூர்வீகக் குடியின் அடையாளங்களைத் திட்டமிட்டு ஒதுக்கிய சிங்கள ஆட்சிகள் தமிழின அழிப்பு வேலைகளில் இறங்கின.
இலங்கையில் 1948 இல் ஆங்கிலேயர் வெளியேறிய பின் 1949 இல் குடியுரிமைச் சட்டம், 1956 இல் தனிச் சிங்களச் சட்டம், 1972இல் அரச மதவாதச் சட்டம் எனக் கொடிய சட்டங்களைக் கொண்டு வந்து சிங்கள அரசு தமிழுக்கு எதிராக நடந்து கொண்டது.
தமிழர்கள் சிங்கள அரசுக்கு எதிராக போராடினரே தவிர, தனிப்பட்ட சிங்களவரை எதிர்த்துப் போராடவில்லை. ஆனால், சிங்களத்தவர்களோ தமிழர்களை விரோதிகளாகக் கருதினர். தமிழர்கள் சம உரிமையுடன் வாழ வேண்டும் என்றுதான் போராடினார்கள் என்பதுதான் உண்மை.
இனம், நிறம், மொழி, மதம், கலாச்சாரம், பழக்கவழக்கங்கள், அரசியல் நிலைப்பாடுகள், தாய்மண், பிறப்பு என்ற நிலையில் உரிமைகளைப் பெற ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு என்று ஐ.நா. மன்றத்தின் பிரகடனம் 1948 இல் நடைமுறைக்கு வந்தது. மேற்குறிப்பிட்ட தகுதிகளைக் கொண்டுதான் தேசிய இனங்கள் வகுக்கப்படுகின்றன.
அந்நிலையில்தான் இலங்கையில் வாழும் தமிழர்களும் ஓர் இனம். 1990 ஆம் ஆண்டுக்குப் பின்பு வரை உலகளவில் 23 தேசிய இனங்கள் பிரிந்து தங்களுக்கான அரசுகளை அமைத்துக் கொண்டுள்ளன. இவை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
தன்னாட்சி சுய உரிமை உலகளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நியாயங்கள் ஆகும். 1775இல் நடைபெற்ற அமெரிக்க விடுதலைப் போரும், 1789 இல் ஏற்பட்ட பிரஞ்சுப் புரட்சியும் இன்றைக்கும் வரலாற்றில் பேசப்படுகின்றன.
இப்போராட்டங்கள் யாவும் தன்னாட்சி உரிமைக்கு வித்திட்டiவாகும். ஆதிக்கம், அடிமைத்தனம், பாசிசம் என்ற நிலையில் இன வேற்றுமையை பார்க்கும்போது புரட்சி, சுய நிர்ணயம், விடுதலை என்ற தாகம் ஏற்படுகிறது. இங்கிலாந்திலிருந்து அயர்லாந்தும், ரஷ்யாவிலிருந்து போலந்தும், பின்லாந்தும், சுவீடனிலிருந்து நோர்வேயும் தன்னாட்சி உரிமை பெற்றதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஒரு தேசிய இனம் சுய நிர்ணய உரிமையை நிலைநாட்டி வெற்றி பெறும்பொழுதுதான் அங்கு ஜனநாயகமும், மக்கள் ஆட்சியும் மலரும்.
உலக அளவில் இதுபோன்று தேசிய இனங்கள் பிரிந்து பல தனி நாடுகள் தோன்றியுள்ளன. வங்கதேசம், செக்கோஸ்லோவேகியாவிலிருந்து செக், ஸ்லோவிய என இரு நாடுகளும், யூகோஸ்லாவியாவிலிருந்து போர்னியா மற்றும் ஹெர்ஸிகோவினா, செர்பியா, குரோசியா, மாண்டனெக்ரே, மாசிடோனியா, சலவேனியா என ஆறு நாடுகள் தங்களது தேசிய இனத்தின் பிரச்சினைகளைக் கொண்டு சுய நிர்ணய உரிமைகளை நிலைநாட்டின.
அதேபோல கொசோவா போராட்டம், 27 ஆண்டுகள் நடைபெற்று தனி நாடாகியது. அல்பேனியா எழுச்சியும் வரலாற்றில் இடம்பெற்றுள்ளது.
கிழக்கு தீமோரும் தங்கள் தேசிய இனப் போராட்டத்தில் வெற்றி கொண்டு தங்களின் இறையாண்மையை நிலைநாட்டியது. பலஸ்தீனப் போராட்டம் இன்னும் உலக மக்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.பலஸ்தீனத்தை கடந்த மாதம் பிரான்ஸ் ஏற்றுக் கொண்டுள்ளது.இறுதியாக தெற்கு சூடான் பிரிந்துள்ளது.
இவ்வாறு உலகில் பல இனங்கள் தங்களது தேசிய இனத்தைத் தற்காத்துக் கொள்வதற்காக போராடி வெற்றி கண்டுள்ளன. அதே பாதையில்தான் இலங்கையிலும் தமிழ் இன மக்கள் போராடி வருகின்றனர். கடந்கால துன்பியல் பிரச்சினைகளைக் கொண்டு தொடர்ந்து தமிழர் பிரச்சினை தீண்டப்படாத பிரச்சினை என நினைப்பது மனித நாகரீகத்துக்கும் இயற்கையின் நீதிக்கும் புறம்பானது ஆகும்.
இந்திய மக்களுக்கும் பாராளுமன்றத்துக்கும் தெரியாமலே சோனியா அரசு இலங்கைவாழ் தமிழர்களைக் கொல்ல அனைத்து உதவிகளைச் செய்தது மட்டுமல்லாமல், இந்திய மக்கள் கொடுக்கும் வரிப்பணத்தின் மூலம் மஹிந்த அரசு பாகிஸ்தானிலிருந்து ஆயுதம் வாங்கக் கடன் கொடுத்ததில் என்ன நியாயம் உள்ளது?
தமிழக் கலாச்சாரச் சுவடுகளையே ராஜபக்ஷ அரசு அகற்றி வருகிறது. தமிழர் நாகரீகத்தைப் பற்றிய இந்திய - இலங்கைத் தொடர்பு, இங்குள்ள தமிழர் நாகரீகத்தைப் பற்றிய அகழ்வாராய்ச்சி சான்றுகள், செப்பேடுகள், பெருவழுதியின் சங்க கால நாணயங்கள் யாவும் அழிக்கப்பட்டுள்ளன.
காரைநகர் கந்தரோடை, அனுராதபுரம் என்று பரவலாக இலங்கையில் உள்ள 26 இடங்களில் தமிழ்க் கலாச்சார நாகரீகம் புழங்கிய அடையாளங்கள் யாவும் அழிக்கப்பட்டு விட்டன.
இதற்குக் காரணம் என்னவெனில், தமிழன் இங்கு பூர்வீகக் குடிமகன் என்று சொல்லக்கூடாது. அதற்கான அடையாளங்கள் கண்ணில் படக்கூடாது. என்று ராஜபக்ஷ அரசு திட்டமிட்டு அழித்து வருகிறது.
இங்கு ஒரு தேசிய இனம் தனது உரிமைக்காகப் போராடுகிறது. சிங்களப் பேரினவாதம் இனப்படுகொலையைத் திட்டமிட்டுச் செய்து வருகிறது. அதைக் கண்டிக்காமல் இலங்கைக்குள் வாய்மூடி மௌனியாக இருப்பது கொடுமையிலும் கொடுமை.
இதில் உள்ள நியாயங்களை எடுத்துச் சொன்னால் புலிகளுக்கு ஆதரவு என்று ஒரு தவறான வாதம் வைக்கப்படுகிறது.எங்களுக்கு புலி முத்திரை குத்தப்படுகின்றது.
1948 இல் இலங்கை விடுதலை பெறும்போது இங்குள்ள தமிழர்கள் அதை ஏற்றுக் கொண்டனர். இந்தியாவில் முஸ்லிம்கள் பாகிஸ்தானை கேட்டது போலத் தமிழர்களும் கேட்டிருந்தால் அப்போதே தனி ஈழம் உருவாகியிருக்கும். ஆனால், தமிழர்கள் சிங்களவர்களுடன் சேர்ந்து வாழலாம் என்று நம்பினர் அதுதான் அவர்கள் செய்த மிகப் பெரிய தவறு.
1948 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் இலங்கையை சிங்களவர்களிடம் விட்டுச் சென்ற போது இந்தியாவிடம் ஜின்னா பாகிஸ்தானை பிரித்தது போன்று தமிழர்கள் பிரித்திருந்தால் இவ்வளவு உயிர்கள் நாட்டில் அழிந்திருக்காது.
பல நூற்றாண்டுளுக்கு முன்னர் வன்னியிலும், யாழ்ப்பாணத்திலும் சிங்களவர்கள் வாழ்ந்துள்ளார்கள் என்றும், 1500 பௌத்த ஆலயங்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளதாக அண்மையில் ஹெல உறுமய கட்சி எம்பி ஒருவர் கூறியுள்ளார். அப்படியானால், 1500 பௌத்த சிலைகள் வடக்கில் மண்ணிற்குள் புதைக்கப்படவுள்ளது.
அகழ்வாராய்ச்சி என்ற போர்வையில் 1500 பௌத்த சிலைகளும் தோண்டி எடுக்கப்பட்டு குடியேற்றப்படவுள்ளனர்.
ஒன்றரைக் கோடி சிங்களத்திடம் 12 கோடி பெரும்பான்மைத் தமிழன் ஏமாந்துள்ளான். ஏமாற்றப்பட்டுள்ளான். நம்பிக்கை மோசடி செய்யப்பட்டுள்ளான்.
பாவங்களில் பெரும் பாவம் நம்பிக்கை மோசடி. நம்பி வந்த தமிழனை சிங்களம் நம்பிக்கை மோசடி செய்துள்ளது. வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும் எட்டப்பன் இருந்துதான் உள்ளான்.
போராட்டங்களில் எட்டப்பர்கள் தோன்றுவது தவிர்க்க முடியாதது. உலக போராட்டத் தந்தை சேகுவராவின் படுகொலைக்கும் எட்டப்பர்தான் காரணம்.
எட்டப்பர்களின் துரோகங்களைக் கடந்து வெற்றி பெறுவதுதான் போராட்டம். போராட்டங்களின் வடிவங்கள் மாறியுள்ளது. போராட்டம் மாறவில்லை.
எஞ்சியுள்ள கோவணத்தையாவது காப்பாற்ற வேண்டும். என்றுமில்லாத தமிழ் மக்கள் இந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க வேண்டும. ஆட்சி மாற்றம் வேண்டும்.
இலங்கைத் தமிழன் எதில் சளைத்தவன் எதில் குறைந்தவன்.இன்று உலக அரங்கில் இலங்கைத் தமிழன் தடம் பதித்து வருகின்றான்.அப்படிப்பட்ட தமிழன் இன்று இலங்கை;குகள் அடக்கி ஒடுக்கப்படுவது நசுக்கப்படுவது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.
தமிழ் தோற்றால் முஸ்லிம் இனம் அழிந்து விடும்
இலங்கையில் தமிழ் இனம் அடக்கப்படுமானால் முஸ்லிம்களின் நிலை என்னவாகும். ஆனால் அமையப் போகும் புதிய நாடாளுமன்றத்தில் தமிழ் கூட்டமைப்பு அரசின் பங்காளியாக மாறினால் முஸ்லிம் அரசியல்வாதிகளின் நிலை என்னவாகும்? காலம் மாறும் காட்சிகளும் மாறும்.
இன்று தமிழர்களை மட்டுமல்ல வடமாகாணம், திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய பகுதி முஸ்லிம்களையும் பாதிக்கப் கூடிய முஸ்லிம் மாவட்டத்தை முஸ்லிம் காங்கிரஸ் கோரி நிற்பது என்பது தமிழ் முஸ்லிம் இனஉறவில் மிகப் பெரிய விரிசலை உருவாக்கிவிடும்.
அமைதியாக இருக்கின்ற தமிழ் முஸ்லிம் உறவு பாதிக்கக் கூடிய நிலையை உருவாக்கப் பார்க்கின்றார்களா.
இலங்கை அரசின் இனப்படுகொலைக்குத் துணை போவதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழர்கள் தங்களது பூர்வீக மண்ணில் தங்களுடைய இறையாண்மையை நிலைநாட்டப் போராடுகின்றனர்.
அவர்களுக்கு உதவுவதை விட்டுவிட்டுக் கண்ணைக் கட்டிக் கொண்டு காரணம் இல்லாமல் தத்தமது நலனுக்காகவும் தங்களது சுகபோக வாழ்வுக்காகவும் தங்களது பக்கட்டை நிரப்புவதற்காகவும் ஈழத்தில் வாழும் தமிழர்களை அழிக்க சில முஸ்லிம் அணிகள் துணை போவதை வரலாறு மன்னிக்கவே மன்னிக்காது.
ஒரு இனத்தை நசுக்கிப் பிழிந்து அந்த இனத்தை அழித்து இன்னொரு இனம் முன்னேற முடியாது.அதை இறைவனும் மன்னிக்க மாட்டான். யாராக இருந்தாலும் இந்தக் கேவளம் கெட்ட அரசியலுக்காக ஒரே மொழி பேசும் மொழியால் ஒன்று பட்ட தமிழர்களை அழிக்கத் துணை போவதை நீதி நியாயமான மனித நேயமுள்ள மனிதர்கள் ஏற்றுக் கொள்ள முடியாது.
சில முஸ்லிம் தலைகளும் சிங்களமும் இணைந்து தமிழர்களை நசுக்குவது என்பது எதிர்கால முஸ்லிம்களுக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்பதை மீண்டும் மீண்டும் எத்திவைப்போம்.
தமிழர்கள் ஆட்சி மாற்றம் வேண்டி வாக்களிப்போம்
நாட்டிலுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களும் நாட்டில் ஆட்சி மாற்றம் வேண்டி வாக்களிக்கும் நிலையில் ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன என்ற நிலையை மாற்றி தமிழர்கள் ஆட்சி மாற்றம் வேண்டி வாக்களிக்க வேண்டும்.
தமிழர்கள் வாக்களிப்பை தவிர்த்து கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தேர்தல் பகிஷ்கரிப்பில் ஈடுபடுவார்களேயானால் நமது கண்ணை நாமே குத்தியது போன்று நமது மக்களை நாமே அளித்தது போன்று ஆகிவிடும்.
இந்த மாற்றங்களில் இருந்து நாம் விடுபடவும் தமிழர்களுக்கு நீதி கிடைக்கவும் வடக்கில் கொல்லப்பட்ட ஒன்றரை இலட்சம் மக்களுக்கு நீதி கிடைக்கவும் இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்.தேர்தலைப் பகிஷ்கரிக்க வேண்டாம்.
வடக்கில் குறைந்தது 3 இலட்சம் மக்கள் வாக்களிப்பார்களேயானால் நிச்சயம் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விடும்.
வடக்கில் தமிழ் மக்களின் வாக்களிப்பைத் தடுக்க எட்டப்பர்கள் களத்தில் இறங்குவார்கள்.இந்த கொடூர ஆட்சிக்கு எதிராக தமிழர்களும் முஸ்லிம்களும் ஆட்சி மாற்றம் வேண்டி வாக்களிப்போம்.
எம்.எம்.நிலாம்டீன்mmnilamuk@gmail.com
http://www.tamilwin.com/show-RUmtyBTWKbms2.html
Geen opmerkingen:
Een reactie posten