தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 2 januari 2015

இந்திய உளவுப் பிரிவு அதிகாரி டெல்லிக்கு திருப்பியழைப்பு

ஜனாதிபதியின் அவசர தீர்மானங்கள் காரணமாகவே நாம் இன்று சுதந்திரமாக வாழ்கின்றோம்!- நாமல்
[ வெள்ளிக்கிழமை, 02 சனவரி 2015, 01:48.20 AM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அவசர தீர்மானங்கள் காரணமாகவே நாம் இன்று சுதந்திரமான முறையில் வாழ்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டின் பெரும் எண்ணிக்கையிலான அரச தலைவர்கள் அன்று ஒழித்தே இருந்தார்கள்.
நாம் ஒரு பக்கம் போரை முடிவுக்குக் கொண்டு வந்த போதுää மறு புறத்தில் முன்னாள் தலைவர்கள் தலைவிகள் நாட்டை காட்டிக் கொடுத்தார்கள்.
போரின் 75 வீதத்தை முடித்து விட்டதாக கூறும் தலைவியர் உண்மையில் 75 வீதமான போரை விட்டுச் சென்றிருந்தனர்.
நாடு அபிவிருத்திப் பாதையில் நகர்கின்றது. பாதைகள் வீதிகள் அபிவிருத்தி செய்யப்படுகின்றன.
அன்பார்ந்த தம்பி தங்கைகளுக்காக பாடசாலைகள் நிர்மாணிக்கப்படுகின்றன.
நாட்டின் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி நாட்டு மக்கள் மீதும் நாடு மீதும் நேசம் கொண்டுள்ளார்.
ஆயிரக் கணக்கான படைவீரர்களின் அர்ப்பணிப்புடனேயே இந்த நாடு பயங்கரவாதத்திலிருந்து மீட்கப்பட்டது.
புலம்பெயர் தமிழர்களும், வெளிநாட்டு சக்தகிளும் இந்த நாட்டை கட்டுப்படுத்த இடமளிக்க முடியாது.
வாழ்வதற்கு நாடு ஒன்று இருக்க வேண்டும். தியாகத்துடன் மீட்கப்பட்ட நாட்டை மீண்டும் பிளவடையச் செய்ய அனுமதிக்க முடியாது என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கண்டி வத்தேகம பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் அண்மையில் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTWKbmr7.html
கிராமப்புற வாக்குகள் தொடர்ந்தும் மஹிந்தவுக்கு உதவாது: தெ ஹிந்து
[ வெள்ளிக்கிழமை, 02 சனவரி 2015, 02:25.25 AM GMT ]
கிராமபுறங்களின் வாக்குகளை கொண்டு தேர்தல்களில் வெற்றியீட்டி வந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு இந்தமுறை பாரிய சவால் காத்திருப்பதாக தெ ஹிந்து தெரிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி முன்னதாக கிராமப்புற மக்கள் மத்தியில் மதிப்பை கொண்டிருந்தது.
எனினும் 1977ஆம் ஆண்டு ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன அறிமுகப்படுத்திய திறந்தபொருளாதார கொள்கைக்கு பின்னர் கிராமப்புற செல்வாக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மாறியது.
இந்தநிலையி;ல் 2005ஆம் ஆண்டு முதல் ராஜபக்சவின் வாக்கு வங்கிகளாக கிராமப் புறங்களே விளங்கின.
எனினும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்.கட்சியின் ஒருவரான மைத்திரிபால சிறிசேன களமிறங்கியுள்ளமையால் குறித்த கிராமப்புற வாக்கு வங்கியில் பிளவு ஏற்படும் என்று நம்பப்படுகிறது.
குறிப்பாக பொலநறுவை மற்றும் அநுராதபுரம் ஆகிய இடங்களில் உள்ள விவசாய மக்களின் வாக்குகள் மைத்திரிபால சிறிசேனவுக்கு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன எனவே ஜனவரி 8ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் வாழ்வா? சாவா? என்ற நிலையில் இடம்பெறுவதாக தெ ஹிந்து சுட்டிக்காட்டியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyBTWKbmsy.html
இந்திய உளவுப் பிரிவு அதிகாரி டெல்லிக்கு திருப்பியழைப்பு
[ வெள்ளிக்கிழமை, 02 சனவரி 2015, 02:39.14 AM GMT ]
இந்திய உளவுப் பிரிவின் பிரதானி இலங்கையிலிருந்து டெல்லிக்கு திருப்பியழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயம், ரோ அமைப்பின் பிரதானிக்கு மாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. 
குறித்த ரோ அதிகாரி, எதிர்க் கட்சிகளின் பொதுவேட்பாளர் உட்பட அக்கட்சிகளின் கூட்டணியினருடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலே திருப்பியழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரோ உளவுப் பிரிவின் இலங்கை செயற்படுகளுக்கான வரையறைகள் ஏற்கனவே இலங்கை அரசினால் வரையறுக்கப்பட்டிருப்பதாகவும், இதனை மீறிச் செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர் திருப்பியழைக்கப்பட்டுள்ளதாகவும் சிங்கள ஊடகமொன்று அறிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyBTWKbmsz.html

Geen opmerkingen:

Een reactie posten