தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 23 januari 2015

வடக்கு மக்களுக்கு கூடிய அதிகாரங்களை வழங்குவது குறித்து அரசாங்கம் ஆராய்கிறது: ரணில் விக்ரமசிங்க

இந்தியாவில் இலங்கையரைக் கொண்டு ஒபாமாவை தாக்க பயங்கரவாதிகள் சதி
[ வெள்ளிக்கிழமை, 23 சனவரி 2015, 11:43.59 AM GMT ]
இந்திய குடியரசு தினத்திற்கு  அமெரிக்க அதிபர் ஒபாமா செல்லும் போது இலங்கையினரை கொண்டு தாக்குதல் நடத்த சில பயங்கரவாத அமைப்பினர்  சதி திட்டம் தீட்டியிருப்பதாக இந்திய மத்திய உளவுத்துறை ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனையடுத்து கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் மாலத்தீவில் வசிப்பவர்கள் மூலம் இந்த சதிச்செயலை நடத்த திட்டம் புனையப்பட்டள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குடியரசு தின விழாவில் முதன் முறையாக அமெரிக்க அதிபர் செல்லவுள்ளார்.
இதனையடுத்து லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷி முகம்மது ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் கைகோர்த்து செயல்பட முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
இந்திய- பாக்கிஸ்தான் எல்லையில் பலர் இந்தியாவுக்குள் ஊடுருவ திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்திய மத்திய உளவு பிரிவினர் டில்லி மற்றும் ஆக்ரா போலீசாருக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளனர்.
இதில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் ஒபாமா செல்லும் போது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதில் இலங்கை வாழ் நபர்கள், மாலத்தீவு நபர்கள் ஆகியோருடன் கூட்டு அமைத்துள்ளதாகவும் தெரிகிறது. இதனால் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுள்ளனர்.
இதனையடுத்து டில்லியில் நீண்ட நாள் தங்கி இருக்கும் வெளிநாட்டு பிரமுகர்களை போலீசார் தீவிரமாகவும், ரகசியமாகவும் கண்காணித்து வர உத்தரவிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியா– இலங்கைக்கிடையில் மீண்டும் பயணிகள் படகு சேவை ஆரம்பிப்பது பற்றி பேச்சு
[ வெள்ளிக்கிழமை, 23 சனவரி 2015, 11:38.24 AM GMT ]
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நேரடி பயணிகள் படகு சேவை ஒன்றை ஆரம்பிப்பது குறித்தும் தமிழகத்தில் இருக்கும் இலங்கை அகதிகளை மீண்டும் இலங்கைக்கு வரவழைப்பது தொடர்பாகவும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் இந்திய விஜயத்தின் போது ஆராயப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை அதிகரிப்பது, தலைமன்னாருக்கும் ராமேஸ்வரத்திற்கும் மற்றும் கொழும்புக்கும் தூத்துக்குடிக்கும் இடையில் பயணிகள் படகு சேவை ஆரம்பிப்பது பற்றியும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டதாக நேற்று வெளியிடப்பட்ட அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை தவிர பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள மலையக மக்களுக்காக 4 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பது.
இரு நாடுகளுக்கும் இடையிலான மீனவர்களின் பிரச்சினை, கொழும்பு – கண்டி இடையிலான ரயில் பாதையை இருவழி பாதையாக மேம்படுத்துவது, வர்த்தகம் மற்றும் முதலீடுகளை அதிகரிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyBRXKcju6.html
பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட குற்றவாளிகள் பொலிசார் மீது தாக்குதல்
[ வெள்ளிக்கிழமை, 23 சனவரி 2015, 11:00.49 AM GMT ]
மதுபோதை குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த மூவர் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் கீழ் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட பின் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரையும் இன்று வெள்ளிக்கிழமை யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய போது நீதவான் மூவரையும் தலா 2 லட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் விடுவித்தத்துடன் வழக்கினை எதிர்வரும் மார்ச் மாதம் 24ம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கோண்டாவில் பகுதியை சேர்ந்த குடும்பநல மருத்துவ மாது ஒருவர் தனது வீட்டில் இருந்து வெளியே புறப்படுகையில் வீட்டிற்கு அருகில் மது போதையில் நின்ற மூவர், அவர் தொடர்பாக அவதூறுகளை கூறியுள்ளனர்.
அதனை அடுத்து மருத்துவ மாதுவின் கண் பார்வையற்ற கணவர் அது தொடர்பில் மது போதையில் நின்றவர்களுடன் வாய் தர்க்கத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
அதனை அடுத்து போதையில் நின்ற மூவரும் கண்பார்வை அற்றவரை தாக்கியுள்ளனர். அங்கு கூடிய அயலவர்கள் போதையில் நின்றவர்களை அங்கிருந்து விரட்டி விட்டனர்.
தம் மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள் தொடர்பில் அவர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய சென்ற போது பொலிசார் அவர்களுடைய முறைப்பாட்டை ஏற்காமல் அசமந்த போக்காக இருந்தனர்.
குறித்த குடும்பத்தினர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்ற விடயத்தை கேள்வியுற்ற தாக்குதல் மேற்கொண்ட மூவரும் மேலும் 10 பேருடன் பொலிஸ் நிலையதிற்கு வந்து பொலிசார் முன்னிலையில் தமக்கு எதிராக முறைப்பாடு செய்தால் குடும்பத்தையே வெட்டுவோம் என மிரட்டியுள்ளனர்.
அதையடுத்து பொலிசார் தாக்குதல் மேற்கொண்ட மூவரையும் தவிர ஏனையவர்களை பொலிஸ் நிலையத்தை விட்டு செல்லுமாறு கூறிய போது மூவரும் பொலிசாருடன் முரண்பட்டதுடன் பொலிஸ் நிலையத்தில் இருந்த கதிரை மேசைகளையும் தள்ளி வீழ்த்தி அட்டகாசம் புரிந்துள்ளனர்.
அதனை தடுக்க சென்ற பொலிசார் மீதும் தாக்குதலை மேற்கொண்டனர். அதையடுத்து குறித்த மூவரையும் பொலிசார் கைது செய்தனர்.
மூவரும் கோப்பாய் பொலிசாருடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வருபவர்கள் எனவும் அதனாலையே அவர்கள் பொலிஸ் நிலையத்தினுள்ளே அட்டகாசம் புரிந்து பொலிசார் பொலிசார் மீது தாக்குதல் மேற்கொண்டார்கள் எனவும்.
அவர்கள் மீதான முறைப்பாட்டை ஒழுங்கான முறையில் பொலிசார் எழுதாமல் நீதிமன்றில் முற்படுத்தியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.
http://www.tamilwin.com/show-RUmtyBRXKcju5.html

வடக்கு மக்களுக்கு கூடிய அதிகாரங்களை வழங்குவது குறித்து அரசாங்கம் ஆராய்கிறது: ரணில் விக்ரமசிங்க
[ வெள்ளிக்கிழமை, 23 சனவரி 2015, 10:56.05 AM GMT ]
புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பது பாரிய சவால் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க, த வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலுக்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்துள்ளார்.
இதில் செய்யப்பட வேண்டிய பணிகளில் மிக முக்கியமான பணி ராஜபக்ஷ அரசாங்கம், அரசியலமயப்படுத்திய பொலிஸ் திணைக்களத்தை அதில் இருந்து விடுவிப்பது எனவும் அவர் கூறியுள்ளார்.
அதேபோல் இலங்கையின் சிறுபான்மை சமூகமான தமிழ் மக்களுக்காக அரசியல் தீர்வொன்றை வழங்க வேண்டும் என்ற கடும் நிலைப்பாட்டில் புதிய அரசாங்கம் இருக்கின்றது. ஜனவரி மாதம் நடந்த தேர்தல் மாற்றத்திற்காக நடந்த தேர்தல் எனவும் இந்த மாற்றத்தின் மூலம் நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.
தமிழ் மக்கள் வாழும் வடக்கு மாகாணத்திற்கு கூடிய அதிகாரங்களை வழங்குவது குறித்து தற்போதைய அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், கடந்த அரசாங்கம் சீனாவின் கடன் வழங்கும் நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்த நிறுவனங்களுடன் செய்து கொண்ட சில மோசடி கொடுக்கல் வாங்கல்கள் குறித்து புதிய அமைச்சரவைக்கு தகவல்கள் தெரியவந்துள்ளதை அடுத்து புதிய அரசாங்கம் கடும் போராட்டத்தை எதிர்நோக்கி வருகிறது.
ராஜபக்ஷ அரசாங்கம் உட்கட்டமைப்பு அபிவிருத்திகளுக்காக மேற்கொண்ட சில திட்டங்கள் விலை மனுகோரப்படாமல் வழங்கப்பட்டுள்ளன. அவை தொடர்பான தகவல்களை கடந்த அரசாங்கம் வெளிப்படையாக மக்களுக்கு முன்வைக்கவில்லை.
கொழும்பு காலிமுகத் திடலுக்கு எதிரில் சீனாவின் உதவியுடன் நிர்மாணிக்கப்படும் துறைமுக நகர அபிவிருத்தித் திட்டம் சுற்றுச் சூழல் ஆய்வின் பின் ஆரம்பிக்கப்பட்டதா என்பதை கண்டறிய வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRXKcju4.html

Geen opmerkingen:

Een reactie posten