[ சனிக்கிழமை, 24 சனவரி 2015, 04:05.50 AM GMT ]
பிரதம நீதியரசரின் குறித்த வழக்கு விசாரனையை விசாரிக்கும் அதிகாரத்தை பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதாக குறித்த சங்கத்தின் செயலாளர் அஜித் பத்திரன தெரிவித்துள்ளார்.
மேலும் நீதி அனைவருக்கும் சமம் என புலப்படுவதாக அஜித் பத்திரன தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய, பிரதம நீதியரசரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் நேற்று வாக்குமூலம் பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyBRYKcioz.html
அதிபர்களுக்கான கேர்னல் தரங்கள் ரத்து செய்ய தீர்மானம்: கல்வி அமைச்சு
[ சனிக்கிழமை, 24 சனவரி 2015, 04:18.20 AM GMT ]
இதேவேளை ஆசிரியர்களுக்கு காணப்படுகின்ற வேதன பிரச்சினைக்கு விரைவில் தீர்க்கப்படும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் நேற்று தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான சந்திப்பு ஒன்றை நடத்தி இருந்தார். இதன் போது அவர் இந்த தீர்மானத்தை வெளியிட்டுள்ளார்.
தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் நீதிமன்ற செல்ல நடவடிக்கை!
[ சனிக்கிழமை, 24 சனவரி 2015, 04:34.45 AM GMT ]
இது தொடர்பில் தேர்தல் ஆணையாளர், அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் தேர்தல் கண்காணிப்பு இணைப்பாளர்கள் போன்றோருடன் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது அவதானம் செலுத்தப்பட்டதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRYKcio1.html
மனித உரிமைகள் குழுவுடன் பேச்சுவார்த்தைகள் நடத்த அரசாங்கம் ஆயத்தம்
[ சனிக்கிழமை, 24 சனவரி 2015, 04:45.50 AM GMT ]
அவர் இதனை நேற்று தெனியாய- மொரவக்க பிரதேசத்தில் இடமபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாடும் போது தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRYKcio3.html
அரசாங்கத்தை பலவந்தபடுத்த வேண்டாம்: வீ.ஆனந்த சங்கரி
[ சனிக்கிழமை, 24 சனவரி 2015, 04:58.52 AM GMT ]
கண்டியில் நேற்று மல்வத்து ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்தன் பின்னர் ஊடகத்திற்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தலைவர் தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்பதற்கு புதிய அரசாங்கத்திற்கு இன்னும் கால அவகாசம் வழங்குவது அவசியம் என தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRYKcio4.html
அரசியல் இலாபங்களுக்காக ஈழத் தமிழர் நல்வாழ்வை பலியாக்கக் கூடாது: கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி
[ சனிக்கிழமை, 24 சனவரி 2015, 05:26.22 AM GMT ]
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் ஆட்சி அமைந்த பத்தே நாட்களில் எல்லாம் நடந்து விடுமென்று நாம் எதிர்பார்க்க வேண்டாம்.
அதே சமயத்தில் இலங்கை அரசின் முயற்சிகளை ரணில் விக்ரமசிங்கவின் தமிழர் ஆதரவு பேச்சை நாடகமென்று கொச்சைப்படுத்தவும் வேண்டாம்.
தமிழகத்தின் சில தலைவர்கள் பேசுவதைப் பார்த்தால், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு வந்து விட்டால் தங்கள் அரசியல் செயல்பாடுகள் மூடுவிழா காணும் என்று அஞ்சுவதைப் போல் உள்ளது.
புதிய இலங்கை அரசுக்கும், இலங்கைத் தமிழர்களுக்கும் சுமூகமான உறவு வந்துவிடக் கூடாது என்று விரும்புவது போலவும் உள்ளது.
சுய அரசியல் இலாபங்களுக்காக இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வை பலியாக்கக் கூடாது. நாம் தமிழகத்திலிருக்கிற இலங்கைத் தமிழ் அகதிகளை நல்ல முறையில் கவனித்துக் கொள்வோம். அகதி முகாம்களில் அவர்கள் சந்தோசமாக இல்லை என்பது வேதனை அளிக்கிறது.
வெகு சீக்கிரம் இலங்கையில் நல்ல சூழல் உருவாகி அகதிகள் அனைவரும் இலங்கைக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்று ஆசைப்படுவோம்.
எங்கே இலங்கையில் நல்லது நடந்து விடுமோ என்ற ஆதங்கத்தில் இவ்வளவு சீக்கிரமாக இலங்கை அரசுக்கு எதிரான குரலை தமிழகத்தில் எழுப்பி நல்ல எண்ணமுள்ளவர்களைக் கூட கெட்டவர்கள் ஆக்க வேண்டாம்.
தமிழர்கள் அனைவரும் ராஜபக்ஷவுக்கு எதிராக வாக்களித்ததால் பொறுப்பேற்றிருக்கின்ற புதிய அரசு அமைந்திருக்கிறது என்ற உணர்வு இலங்கை ஆட்சியாளர்களுக்கு உள்ளது. அதன் விளைவாகத்தான் தமிழர் ஆதரவு பேச்சுக்கள் கிளம்பியிருக்கிறது.
ராஜபக்ஷவுக்கு என்ன நடக்க வேண்டுமென்று நாம் ஆசைப்பட்டோமோ அது நடக்கிறது.
தமிழகத் தமிழ் ஆர்வலர்கள் ஒன்றும் நடக்காது என்று அவ நம்பிக்கையை விதைப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். புதிய இலங்கை அரசு தமிழர்களை காப்பாற்றுவார்கள் என்றும் ராஜபக்ஷவுக்கு உரிய தண்டனையைத் தருவார்கள் என்றும் நம்புவோம் என அவர் விடுத்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBRYKcio5.html
Geen opmerkingen:
Een reactie posten