தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 2 januari 2015

பூநகரி மற்றும் ஆனையிறவை புலிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய சந்திரிக்கா!- அநுர யாப்பா

மஹிந்தவுக்கு இதுவே கடைசி ஆட்சி! பெட்டிகளை கட்டி தயாராக இருப்பதே நல்லது!- அத்துரலிய தேரர்
[ வெள்ளிக்கிழமை, 02 சனவரி 2015, 12:33.17 AM GMT ]
இலங்கையில் தமிழர் வாழும் பிரதேசங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 80 வீதமான மக்கள் ஆதரவு இருக்கின்றது. அவர்களுடன் நாங்கள் பகிரங்கமாக பேசுவதற்கு உரிமை உண்டு என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். 
எனவே அவர்களும் இலங்கை மக்களின் பிரதிநிதிகள், நாங்கள் ஏன் மறைமுகமாக ஒப்பந்தம் செய்ய வேண்டும். சிங்கள் மக்களும் தமிழ் மக்களும் சேர்ந்து வாழ்வதற்கு விரும்புகின்றனர்.
மஹிந்தவின் வீட்டு உரிமை பத்திரத்துக்கும், நகைகளுக்கும் சாதாரண தமிழ் மக்கள் சோரம் போக மாட்டார்கள். அவர்கள் தமிழ் தலைமைகளுக்கு மதிப்பளிக்கின்றனர், தலைமைகளும் சிந்தித்து செயற்பட வேண்டும்.
அரசாங்கம் எத்தனை மில்லியன் பணம் செலவு செய்தாலும் தமிழ் மக்களின் வாக்குகளை கொள்ளையடிக்க முடியாது.
மஹிந்தவுக்கு இதுவே கடைசி ஆட்சி, பெட்டிகளை கட்டி தயாராக இருப்பதே சிறந்தது என கூற விரும்புகின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTWKbmr0.html
தமிழ் கூட்டமைப்பு பொது வேட்பாளருக்கு ஆதரவளிப்பதில் சிக்கல் கிடையாது!– சம்பிக்க
[ வெள்ளிக்கிழமை, 02 சனவரி 2015, 12:46.41 AM GMT ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதில் எவ்வித சிக்கல்களும் கிடையாது என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் கொள்கைகள் தொடர்பில் ஜாதிக ஹெல உறுமயவிற்கு முரண்பாடுகள் உண்டு என்பதனை மறுப்பதற்கில்லை.
எனினும், பொது வேட்பாளர் மைத்திரிபாலவிற்கு கூட்டமைப்பு ஆதரவளிப்பது தொடர்பில் எவ்வித பிரச்சினையும் கிடையாது.
ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்ட மக்கள் பலமுடைய ஒர் அரசியல் கட்சி என்ற ரீதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பபு, மைத்திரிபாலவிற்கு ஆதரவளிப்பதில் எமது கட்சிக்கு எதிர்ப்பு கிடையாது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மைத்திரிபால சிறிசேனவிற்கு எவ்வித உடன்படிக்கையும் கிடையாது.
எனினும், சிலர் யானை, புலி,  நரி மற்றும் அசுத்த கூட்டமைப்பு என மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
மைத்திரிபால சிறினேவை சுற்றி ஆளும், எதிர்க்கட்சிகளும் நபர்களும் இணைந்து கொள்வது பொதுவான ஓர் நோக்கிலாகும். இதில் தனிப்பட்ட நோக்கங்கள் எதுவும் கிடையாது.
நாட்டில் காணப்படும் பொதுவான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் மைத்திரி அரசாங்கம் செயற்படுமே தவிர, நாட்டில் தனி ஆட்சி நிர்வாக அலகுகள் நிறுவப்பட மாட்டாது.
உடன்படிக்கைகள் தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு திம்பிரிகஸ்யாயவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTWKbmr1.html
காங்கேசன்துறை யாழ்.தேவி சேவையை மஹிந்த ஆரம்பித்து வைக்க மாட்டார்!
[ வெள்ளிக்கிழமை, 02 சனவரி 2015, 01:01.58 AM GMT ]
யாழிலிருந்து காங்கேசன்துறை வரையான யாழ்.தேவி சேவையினை மஹிந்த ஆரம்பித்து வைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த போதும் திடீரென திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்படாத உயர்பாதுகாப்பு வலயம் மற்றும் அங்கு இடித்தழிக்கப்பட்ட குடியிருப்புக்கள் என்பவை நிச்சயம் அம்பலமாகுமென அஞ்சப்பட்டதையடுத்து திட்டம் மாற்றப்பட்டுள்ளது.
 இதன் காரணமாக காங்கேசன் துறையிலிருந்து படையினருடன் மஹிந்த யாழ். செல்வதாகவிருந்த நிகழ்ச்சி நிரல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் யாழ்.நகரிலுள்ள ரில்கோ விடுதியில் காலை இடம்பெறும் தொழில்முயற்சி பற்றிய கூட்டமொன்றில் கலந்து கொள்ளும் மஹிந்த ராஜபக்ச, தொடர்ந்து துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளவுள்ளார் எனவும் அறியவந்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyBTWKbmr2.html
அரசாங்கத்தின் குற்றச்சாட்டுக்களை ஹக்கீம் நிராகரித்தார்!
[ வெள்ளிக்கிழமை, 02 சனவரி 2015, 01:09.33 AM GMT ]
கிழக்கில் தனியான முஸ்லிம் நிர்வாக மாவட்டம் தொடர்பிலோ அல்லது வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பிலோ எந்த ஒரு இரகசிய உடன்படிக்கைகளும் செய்து கொள்ளப்படவில்லை என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் இந்த மறுப்பை வெளியிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸூம் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இரகசிய உடன்படிக்கையை வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் செய்துகொண்டதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. எனினும் இதனை ஹக்கீம் நிராகரித்துள்ளார்.
நேற்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய ஹக்கீம், அம்பாறையில் வாழுகின்ற 96 வீத முஸ்லிம்களுக்காக மேலதிக மாவட்ட செயலாளர் ஒருவர் தொடர்பிலேயே அரசாங்கத்துடன் பேச்சு நடத்தப்பட்டது.
இதன்படி ஒரு மேலதிக செயலாளரும் நியமிக்கப்பட்டார்.
இதேபோன்றே வவுனியாவில் வாழும் சிங்களவர்களுக்காக சிங்கள் மேலதிக செயலர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனை திரிபுப்படுத்தி அரசாங்கம் பொய்யான செய்திகளை பரப்பி வருவதாகவும் ஹக்கீம் கூறினார்.
சிங்கள மக்களின் வாக்குகளை இலக்கு வைத்தே இந்த பொய் பிரசாரங்களை அராசாங்கம் மேற்கொள்வதாக ஹக்கீம் குற்றம் சுமத்தினார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTWKbmr3.html
பூநகரி மற்றும் ஆனையிறவை புலிகளுக்கு அன்பளிப்பாக வழங்கிய சந்திரிக்கா!- அநுர யாப்பா
[ வெள்ளிக்கிழமை, 02 சனவரி 2015, 01:15.00 AM GMT ]
இலங்கையில் போரின் வெற்றிக்கு தாம் 75 வீத பங்களிப்பை செய்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க வெளியிட்ட கருத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் அனுர பிரியதர்சன யாப்பா கண்டித்துள்ளார்.
சந்திரிக்காவுக்கு இந்த விடயத்தில் பேச எதுவும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
ஒரு அடி முன்வைத்த பின்னர் இரண்டு அடிகள் பின்வைப்பதை எவ்வாறு 75வீத போர் முடிவு என்று கூறமுடியும் என்று அநுர பிரியதர்சன யாப்பா கேள்வி எழுப்பினார்.
முன்னாள் ஜனாதிபதி, சந்திரிக்கா குமாரணதுங்க படைவீரர்களின் உயிர்களை மதிக்கவில்லை.
இந்த நிலையிலேயே பூநகரி மற்றும் ஆனையிறவு ஆகிய இடங்களை விடுதலைப் புலிகளுக்கு சந்திரிக்கா போரின் போது அன்பளிப்பாக வழங்கினார் என்றும் அநுர யாப்பா குற்றம் சுமத்தினார்.
http://www.tamilwin.com/show-RUmtyBTWKbmr4.html

Geen opmerkingen:

Een reactie posten