தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 2 januari 2015

மகிந்தவுக்கு ஆதரவாக… புலிகளின் மருத்துவர்கள்?

யாழில் மீண்டும் மோதல்…

இதன் போது வீதியில் இறங்கிய இரு குழுவினர் தங்களிற்கு கிடைத்த ஆயுதங்கள் சோடா போத்தல்களின் உதவியுடன் தாக்குதலை மேற்கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.
இம்மோதலால் 3 கடைகள் உடைக்கப்பட்டு அங்கிருந்த ஆயிரக்கணக்கான சோடா போத்தல் களவாக எடுக்கப்பட்டு தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.வீதிகளில் சில இடங்களில் இரத்தம் சிந்திக்காணப்படுவதை அவதானிக்கலாம்.
நேற்றிரவு 11 மணியளவில் இடம்பெற்ற இம்மோதல் சம்பவம் இராணுவத்தினர் ,பொலிசாரின் நடவடிக்கை காரணமாக அதிகாலை 2 மணியளவில் முடிவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.


தற்போது பொலிஸார் ,இராணுவம் இப்பகுதியில் ரோந்து சேசவையில் ஈடுபடுகின்றனர். கடந்த மாதம் நடைபெற்ற விளையாட்டு போட்டி ஒன்றில் ஏற்பட்ட பகையுணர்வே இம்மோதலுக்கு காரணம் என அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர். மேலும் அப்பகுதி வீதிகளில் சிதறிக்கிடக்கும் போத்தல் சிதறல்களை யாழ் மாநகர சபை ஊழியர்கள் சுத்தம் செய்கின்றனர்.JAFFNA-Arik-4JAFFNA-Arik-5JAFFNA-Arik-6JAFFNA-Arik-7JAFFNA-Arik-8JAFFNA-Arik-9JAFFNA-Arik-10JAFFNA-Arik-11
http://www.jvpnews.com/srilanka/92441.html

மகிந்தவுக்கு ஆதரவாக… புலிகளின் மருத்துவர்கள்?

கடந்த பாரளமன்ற தேர்தலில் தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கும் தமிழ்க் கட்சியான ஈரோசின்  சார்பில் இந்த மருத்துவர் வீரகத்திப்பிள்ளை சண்முகராஜா போட்டியிட்டிருந்தார் .
யுத்தத்தின் பின்னர்  நாட்டிற்கு தலைமைதாங்கி மீளக்கட்டியெழுப்புவதற்கு பொருத்தமானவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவே என்று நான் நம்புகிறேன். அவருக்கு ஆதரவாக நான் பணியாற்றுவேன் என்று சண்முகராஜா கூறியிருந்தார்.
மருத்துவர் வரதராஜா நெருக்கடியான காலகட்டத்தில் பணியாற்றியமைக்காக அமெரிக்க தொண்டு தொண்டு நிறுவனம் வழங்கிய விருதுக்காக அமேரிக்கா சென்று ஐநா போர்க்குற்ற விசாரணைக்கு சாட்சியம் கூறி தனது நம்பகத்தன்மையை மீண்டும் பதிவு செய்துள்ளார் .ஏனைய மருத்துவர்கள் விடுவிக்கப்பட்டு அமைதியாக இருந்தாலும் சிலர் தமது சொந்த விருப்பு வெறுப்புக்கு அமைய அவ்வப்போது அரசின் தமிழர் விரோத செயல்பாடுகளுக்கு துணை செய்கின்றனர் .
அந்தவகையில்முல்லைத்தீவு சுதந்திரக்கட்சி அமைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த  புலிகளின் மூத்த தளபதி செல்லக்கிளி அவர்களின் சகோதரரும் விடுதலைப்புலிகளின் போக்குவரத்து கழகத்தின் முகாமையாளரும் முன்னாள் நாடாளமன்ற உறுப்பினருமான கனகரத்தினத்தை ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் அதிரடியாக கட்சிப்பணிகளை சரியாக செய்யவில்லை என்ற குற்றம்சாட்டி முல்லை மாவட்ட அமைப்பாளர் பதவியில் இருந்து விலக்கி அந்த இடத்துக்கு மருத்துவர் வீரகத்திப்பிள்ளை  சன்முகரசாவை நியமித்துள்ளது இவர் ஜனாதிபதி தேர்தலில் அரசுக்கு விசுவாசமாக பணியாற்றி மகிந்த வெற்றிபெற்றால் எதிவரும் பாரளமன்ற தேர்தலில் சண்முகராசா அரசாங்க கட்சிசார்பாக வெட்பாளராக்கவும் உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

அதேபோன்று நேரடியாக அல்லாமல் மறைமுகமாக சில மருத்துவர்கள் மந்தநேயப்பணி என்றபோர்வையில் தமிழரின் தேசிய அரசியல் உணர்வுகளை ஆசுவாசப்படுத்தி அதன் வீரியத்தை சிதைக்கும் பணிக்காக  சிலரை அரசு பயன்படுத்துகின்றது.  அந்தவகையில் புலிகளின் சர்வதேச ஆயுத முகவராக செயல்பட்ட குமரன் பத்மநாதனை புலிகளின் செஞ்சோலைச் சிறார்களை பராமரிக்க அரசு அனுமதித்ததுபோல் மருத்துவர் சத்யமூர்த்தியையும் தனது மருத்துவப்பணிக்கப்பால் சுதந்திரமாக சர்வதேச பயணங்களுடன் கூடிய  சில சமூக சேவைப்பணிகளில் ஈடுபட அரசு அனுமத்துள்ளமையானது  எதிர்காலத்தில் அவரையும் தனது அரசியற் தேவைகளுக்கு பயன்படுத்தலாமென ஊகிக்க முடிகின்றது  .அதேபோன்று கிழக்கிலும் கருணா பிள்ளையான் போன்றவர்களை விட  முன்னாள் தளபதி ராம் போன்றவர்களைப் பயன்படுத்தினால் தமது வெற்றிக்கு வழிவகுக்குமென மகிந்த தரப்பு நம்புகின்றது  Ltte-DRLtte-DR-01
http://www.jvpnews.com/srilanka/92462.html

Geen opmerkingen:

Een reactie posten