[ திங்கட்கிழமை, 02 பெப்ரவரி 2015, 05:55.07 AM GMT ]
இந்த பாடசாலைகளில் 14 சிங்கள மொழிமூல ஆண்கள் பாடசாலைகளும், 17 மகளிர் பாடசாலைகளும், 5 கலவன் பாடசாலைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஐந்தாம் தர பரீட்சையில் 175 புள்ளிகள் பெறும் ஒரு வினாத்தாளுக்காக ஒரு மாணவன் பெறக்கூடிய சாதாரண புள்ளி 87.5 ஆகும்.
இந்த நடவடிக்கை மிகவும் அசாதாரணமானது என இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சிங்கள பத்திரிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்பில் பாடசாலை அதிபரின் சோதனை மூலம் கல்வி அமைச்சின் செயலாளரின் ஊடாக தீர்மானம் மேற்கொள்வதனாலேயே இந்நிலைமை தோற்றுவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்
http://www.tamilwin.com/show-RUmtyCTWKdnq1.html
கோத்தபாய பொதுபலசேனாவை வடிவமைக்கவில்லை: பொதுபல சேனா
[ திங்கட்கிழமை, 02 பெப்ரவரி 2015, 05:53.40 AM GMT ]
கோத்தபாய ராஜபக்ச அல்லது மகிந்த ராஜபக்ச அரசினால் பொதுபல சேனாவை வடிவமைத்தாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா விடுத்த அறிக்கை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத பொய் என தெரிவித்துள்ளார்.
அளுத்கமவில் இடம் பெற்ற துரதிஷ்டவசமான சம்பவம் தொடர்பாக நியாயமான விசாரணையை மேற்கொள்ளுமாறு ராஜபக்ச அரசாங்கத்திடமும் மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்திடமும் கேட்டுக்கொண்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்.
இ.மி.ச ஊழியர்களுக்கு எந்தவொரு ஊதிய உயர்வும் கிடையாது: சம்பிக்க ரணவக்க
[ திங்கட்கிழமை, 02 பெப்ரவரி 2015, 05:25.14 AM GMT ]
ஊழல் மோசடிகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் அமைப்பின் அழைப்பாளர் மக்கள் விடுதலை முன்னணியின் வசந்த சமரசிங்க முன்வைத்த கருத்தை தொடர்ந்தே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் இக்கருத்து தொடர்பில் தான் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அதிகாரிகளின் தேவைகளுக்கேற்ப சம்பளம் உயர்த்த முடியாத நிலையில், பொது முகாமையாரின் ஊடாக தனது தொழிநுட்ப ஊழியர்களின் சம்பளத்தை மாத்திரம் உயர்த்துவதற்கு பகிரங்க வேலைத்திட்டமொன்று இடம்பெற்றுள்ளதாகவும் இது தொடர்பில் முழுமையான தகவல்கள் தனக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அமைச்சர் சம்பிக்க தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை மின்சார சபையின் கட்டுப்பாட்டு அதிகாரிக்கு அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இனி வரும் காலகட்டங்களில் எரிசக்தி அமைச்சில் எந்தவொரு ஊழல் மோசடிகள் நடைபெறுவதற்கும் தாம் இடமளிக்க போவதில்லை எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நடைபெற்ற மற்றும் நடைபெறும் ஊழல் மோசடிகள் தொடர்பிலான தகவல்கள் தம்மிடம் இருப்பதாகவும், அது தொடர்பில் பாரபட்சம் பாராது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
வடமாகாண ஆளுனர் பதவியேற்பு விழாவில் புறக்கணிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள்
[ திங்கட்கிழமை, 02 பெப்ரவரி 2015, 04:57.56 AM GMT ]
வடமாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி படைப்பின்புலத்தைக் கொண்டவர் எனவும், படைப்பின்புலத்தைக் கொண்டவர் அளுநராக இருக்க முடியாது எனவும் குடாநாட்டு ஊடகங்கள் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டிவந்ததுடன், வடமாகாணசபை இதற்கெதிராக மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஊடகங்கள் வலுச்சேர்த்ததுடன், ஆளுநர் வடமாகாணத்திலும் வடக்கிற்கு வெளியேயும் மாளிகைகளையும், வேலையாட்களையும் கொண்டு மேற்கொண்டுவந்த ஊழல்களையும் குடாநாட்டு ஊடகங்கள் வெளிப்படுத்தியிருந்தன.
இதனோடு மைத்திரிபால சிறிசேனா தலைமையிலான புதிய ஆட்சியில் மாகாணத்திற்கான புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டதும், அவர் மாகாணத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்பதும் பெரியளவில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த அனுமதி மறுப்பு தொடர்பாக தற்போதும் வடமாகாண ஆளுநரின் செயலாளராக கடமையாற்றும் இளங்கோவனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது குறித்த நிகழ்வில் ஊடகங்கள் பங்கு பற்றுவதை விரும்பவில்லை என சாதாரணமாக பதிலளித்திருக்கின்றமை இங்கே குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyCTWKdnp7.html
Geen opmerkingen:
Een reactie posten