தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 15 februari 2015

சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்க சிறிசேனவுக்கு மோடி அழுத்தம் கொடுக்க வேண்டும்: வேல்முருகன்

பிரதி அமைச்சர் விஜயகலாவுக்கு அச்சுறுத்தல்! பொலிஸில் முறைப்பாடு
[ ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2015, 10:05.30 AM GMT ]
தன்னைத் தொலைபேசியில் அச்சுறுத்தியதாக கூறி யாழ்.பொலிஸ் நிலையத்தில் மகளிர் விவகார பிரதி அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
நேற்று இரவு தொலைபேசியில் தொடர்பு கொண்ட சிலர் தன்னை அச்சுறுத்தினர் எனத் தெரிவித்து இன்று அதிகாலை முறைப்பட்டினைப் பதிவு செய்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மேலதிக தகவலைப் பெற்றுக் கொள்ள பிரதி அமைச்சருடன் தொடர்பு கொண்ட போது அவர் பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை பிரதியமைச்சர் விஜயகலா மகேஜ்வரன் ஈபிடிபி கட்சியினருக்கு யாழ். கிளிநொச்சி மாவட்டங்களை விட்டு வெளியேற வண்டும் என ஊடகங்கள் மூலம் அறிக்கைவெளியிட்டிருந்தமை வேண்
http://www.tamilwin.com/show-RUmtyCSZKder7.html

நீதித்துறையின் மீது மக்களின் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப முடியும்: நீதியமைச்சர்
[ ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2015, 10:14.45 AM GMT ]
இலங்கை நீதித்துறை கட்டமைப்பு தொடர்பான மக்களின் நம்பிக்கையை 90 வீதம் கட்டியெழுப்ப முடியும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மொனராகலை பிபில பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டின் நீதியானது அதிகாரவர்க்கத்திற்கும், செல்வந்தர்களும், அவர்களின் வயிற்றுமாக இருக்கக் கூடாது.
தமது பிள்ளைகளுக்கு ஒரு வேளை உணவை வழங்க முடியாதவர்கள் நீதிமன்றங்களுக்கு வருகின்றனர்.
இப்படியானவர்களுக்கு நீதியையும் நியாயத்தை சரியான கையாண்டு தீர்ப்பொன்றை வழங்க முடியாவிட்டால் நீதிமன்றங்களினால் என்ன பயன் எனவும் அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நீதிமன்றத்தில் பலன் இருக்கின்றதா என்பதை பார்க்க வழக்கில் வழங்கும் தீர்ப்பை விட அதன் குணாதிசயத்தை பார்கக் வேண்டும் எனவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSZKdesz.html

ஹைதரபாத்தில் நாளை மோடியை சந்திக்கிறார் மைத்திரி- இந்தியா நோக்கிச் சென்றார் ஜனாதிபதி
[ ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2015, 10:28.30 AM GMT ]
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
இச்சந்திப்பு நாளை நண்பகல் ஹைதரபாத்தில் நடைபெறவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர், இன்று பிற்பகல் 01.55 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இந்தியா நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
இவர்கள் இலங்கை விமான நிலையத்திற்குச் சொந்தமான பயணிகள் விமானத்திலேயே புறப்பட்டுச் சென்றதாக தெரியவந்துள்ளது.
இந்த விஜயத்தில் சம்பிக்க ரணவக்க, ராஜித்த சேனாரத்ன மற்றும் பாதுகாப்பு குழுவினர் உள்ளிட்ட 17 பேர் கலந்துகொள்கின்றனர்.
ஜனாதிபதி எதிர்வரும் 18ம் திகதி வரை இந்தியாவில் தங்கியிருப்பார்.
இந்நிலையில் இலங்கை ஜனாதிபதி நாளை இந்திய ஜனாதிபதி மாளிகையில் வரவேற்கப்படவுள்ளதை தொடர்ந்து அந்நாட்டு பிரதமரை சந்திக்கவுள்ளார்.
இச்சந்திப்பின் போது இருநாட்டு நட்புறவுகள், தொழில் வர்த்தக உடன்பாடு குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் நீண்ட காலமாக நீடித்து வரும் தமிழக மீனவர்கள் பிரச்சினைகள் குறித்தும் இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளை மீண்டும் தாய்நாட்டிற்கு திருப்பியனுப்புவது குறித்தும் கவனம் செலுத்தப்படவுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் பின்னர் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதியில் இந்திய அரசாங்கத்தின் தலையீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகள்,
இடைத்தங்கல் முகாம்களிலுள்ள மக்களை மீள்குடியமர்த்தல், அதிக அதிகாரம் வழங்குதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் இச்சந்திப்பின் போது கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyCSZKdes0.html

அன்னத்திற்கு வாக்களித்தவர்கள் யானைக்கு அளிக்க மாட்டார்கள்: சஜின்வாஸ்
[ ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2015, 10:43.41 AM GMT ]
ஜே.வி.பியும் ஜாதிக ஹெல உறுமய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இரண்டு பிளவுபடுத்த முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அம்பலாங்கொடயில் இருக்கும் எனது எரிபொருள் நிரப்பும் நிலையம் 170 கடன் செலுத்த வேண்டியிருந்ததுடன் அதனை செலுத்தியதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறியிருந்தார்.
அது பொய்யானது நான் அப்படி கடன் வைக்கவும் இல்லை, அதனை செலுத்தவும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
தேர்தல் முறையில் மாற்றம் செய்யப்படுவதை ஐக்கிய தேசியக் கட்சி விரும்பவில்லை.
கடந்த முறை அன்னப் பறவை சின்னத்திற்கு வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் இம்முறை யானை சின்னத்திற்கு வாக்களிக்க மாட்டார்கள்.
எந்த தேர்தல் முறை வந்தாலும் எம்மால் வெற்றி பெற முடியும். தொகுதி வாரி தேர்தல் முறையை கொண்டு வருமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம்.
புதிய அரசாங்கம் இரண்டு மூன்று மாதங்களில் எந்த அபிவிருத்தியை மேற்கொள்ளாது எனவும் சஜின் வாஸ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இன்னும் பதவி விலகவில்லை!– ரஜீவ விஜேசிங்க
[ ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2015, 11:10.05 AM GMT ]
இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து தான் இன்னும் விலகவில்லை எனவும் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தி, அதில் கிடைக்கும் பதிலுக்கு அமைய தீர்மானம் எடுக்க போவதாகவும் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவராக இருந்த க்ஷனிக ஹிரிம்புரேகம பதவியில் இருந்து விலகியமைக்கு காரணம் தொடர்பில் சிக்கல் இருப்பதாகவும் அது சம்பந்தமாக ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தான் இல்லாத நேரத்தில் மானிய ஆணைக்குழுவின் தலைவரை விலக்கும் செயல் தவறானது எனவும் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் இருந்தால், விசாரணை நடத்தி சட்டத்திற்கு அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ரஜீவ விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.


தூய நீருக்கான பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றியம் உதயம்
[ ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2015, 11:40.50 AM GMT ]
சுன்னாகம் கிணறுகளில் கழிவு ஒயில் கலந்ததால் பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றிணைந்து “தூய நீருக்கான பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றியத்தை” உருவாக்கியிருக்கின்றனர்.
இன்றைய தினம் காலை சுன்னாகம், கதிரமலை சிவன் கோவில் மண்டபத்தில் இடம்பெற்ற ஒன்று கூடலின்போதே மக்கள் தமது குடிநீர் பிரச்சனைக்கு உறுதுணையாக புதிய ஒன்றியம் ஒன்றினை உருவாக்கி உள்ளனர்.
அதாவது இன்றுவரை எந்த அமைப்பினையும் சாராது கழிவு ஓயில் கலந்த குடிநீர் பிரச்சினைக்கு எதிராக குரல்கொடுத்து வந்த சுன்னாகம் கிழக்கு சனசமூக இளைஞர்கள், வலிகாமம் பகுதியில் பாதிக்கப்பட்ட பிரதேச மக்கள் அனைவரையும் பிரதிநிதித்துவம் செய்யும் நோக்கில் இவ் அமைப்பினை உருவாக்கி உள்ளனர்.
இதனூடே இனிவரும் காலங்களில் உத்வேகமான செயற்பாடுகளை முன்னெடுக்க முடிவும் செய்துள்ளார்கள்.
இவ் ஒன்றியத்தின் உறுப்பினர் விபரம்,
தலைவர்:- ந.நந்தரூபன் (பொறியியலாளர்)
உபதலைவர்:-ச.தஸிந்தன் (யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர்)
செயலாளர்:- சிவமைந்தன் (அபிவிருத்தி உத்தியோகத்தர்)
உபசெயலாளர்:-ந.தவசோதிநாதன்(ஆசிரியர்)
பொருளாளர்:-சி.லகிந்தன்
ஊடக இணைப்பளர்:-இ.றமேஸ்குமார் (அபிவிருத்தி உத்தியோகத்தர்)
இத்துடன் ஒவ்வொரு பிரதேசத்தினையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் பல அங்கத்தவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
மேலும் அங்கு கூடிய மக்களின் வேண்டுகோளிற்கு இணங்க வைத்திய கலாநிதி சிவசங்கர் அவர்கள் இவ் ஒன்றியத்தின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSZKdes4.html

முன்னாள் அமைச்சர்களுக்கு உத்தியோகபூர்வ வாகனங்களை வழங்கத் தீர்மானம்
[ ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2015, 12:25.38 PM GMT ]
முன்னாள் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வ வாகனங்களை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இது குறித்து ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.அபேகோன் கடிதம் மூலம் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு அறிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை பலன் தரும் வகையில் துரிதமான செயற்படுத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதுடன், அந்த வேலைத்திட்டத்தை கண்காணிக்க உதவ விரும்பும் முன்னாள் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த வாகனங்கள் வழங்கப்படும்.
இதனடிப்படையில் முன்னாள் அமைச்சர்களுக்கு தலா இரண்டு வாகனங்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா ஒரு வாகனமும் வழங்கப்படும்.
சாரதிகள், வாகனங்களுக்கான எரிபொருள் வழங்கப்பட்டு, கண்காணிக்கும் அமைச்சின் பணிகள் பகிரப்படும்.
இதனடிப்படையில், பொருளாதார அமைச்சினால் முன்னைய அரசாங்கத்தினால், எவருக்காவது வாகனங்கள் வழங்கப்பட்டிருந்தால், அந்த வாகனம் இந்த புதிய திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டதாக கருதப்படும் என ஜனாதிபதியின் செயலாளர் அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளரின் கடிதத்திற்கு அமைய பிரதியமைச்சர் ஒருவருக்கு வழங்கப்படும் எரிபொருள் தொகை கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்பட வேண்டும்.
ஊடகத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சுக்களினாலும் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் வழங்கப்பட உள்ளன.
http://www.tamilwin.com/show-RUmtyCSZKdes5.html

மகிந்த மீண்டும் வந்தால் சிறந்த பாடத்தை கற்பார்: சுஜீவ சேனசிங்க
[ ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2015, 12:56.49 PM GMT ]
மகிந்த ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வருவதன் மூலம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அழிந்து போகும் என பிரதியமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
வங்குரோத்து அரசியல்வாதிகள் சிலர் தோல்வியை பொறுத்து கொள்ள முடியாது மகிந்தவின் வருகை குறித்து பேசி வருகின்றனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் தேர்தலில் போட்டியிட வாய்ப்பை .இழக்கும் வங்குரோத்து அரசியல்வாதிகள் சிலரே அந்த கட்சியை அழிக்க போகின்றனர்.
மகிந்தவின் வருகை (இலங்கைக்கு பௌத்த மதத்தை கொண்டு வந்த மகிந்த தேரரின் வருகை) என்பது இலங்கையின் வரலாறு மற்றும் சமயத்துடன் சம்பந்தப்பட்ட வார்த்தை.
அந்த வார்த்தையை பயன்படுத்துவதன் மூலம் அவர்களுக்கு மன்னர் என்ற பைத்தியம் இன்னும் குணமாகவில்லை என்பது புரிகிறது. இது தற்போது கேலியாகி விட்டது.
மகிந்தவின் வருகை அல்ல, எதனை கூறி வந்தாலும் அவர் செய்த விடயங்கள் தொடர்பில் பெரும் பிரச்சினைகள் இருக்கின்றன. எந்த வகையிலும் மகிந்தவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு கிடைக்காது.
இது தோல்வியடையும் வேலை, இறுதி மகிந்த ராஜபக்ச வெட்கத்திற்கு உள்ளாகும் நிலைமையே ஏற்படும்.
தனது ஆலோசனையின்றி விமல் வீரவன்ஸ போன்றவர்கள் செய்யும் வேலையாக மகிந்த ராஜபக்ச இதனை காண்பிக்க முயற்சித்து வருகிறார்.
எதுவும் தெரியாதவர் எப்போதும் அவர் நடிக்கவே செய்தார். தற்போது அதற்கு இடமில்லை. மகிந்தவின் காலம் முடிந்து விட்டது.
மகிந்தவுக்கு 58 லட்சம் வாக்குகள் இல்லை. அது முடிவடைந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை. மைத்திரிபால ஆட்சிக்கு வந்தால், புலிகள் வந்து விடுவார்கள் என்று பிரசாரம் செய்தமைக்காக அந்த வாக்குகள் கிடைத்தன.
மகிந்தவுக்கு தற்போது சுமார் 70 வயதாகிறது. அவர் தற்போது ஓய்வுபெற வேண்டும். அதற்கான வயதை அவர் அடைந்து விட்டார். ஆட்சியில் இருந்த காலத்தில் செய்தது போதும். ஜனாதிபதியாக தோல்வியடைந்த ஒரே ஜனாதிபதி மகிந்த மாத்திரமே.
வரையறையை தாண்டி பதவியில் இருக்க வேண்டாம் என்று அந்த தோல்வியில் அவர் மாத்திரம் அல்ல அரசியல்வாதிகளும் சிறந்த பாடத்தை கற்றுள்ளனர்.
இதனையும் மீறி அவர் மீண்டும் வருவாரேயானால், இதனை விட சிறந்த பாடத்தை கற்றுக்கொள்ள முடியும் எனவும் சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSZKdes6.html

சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்க சிறிசேனவுக்கு மோடி அழுத்தம் கொடுக்க வேண்டும்: வேல்முருகன்
[ ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2015, 01:41.38 PM GMT ]
தமிழினப் படுகொலைக்கான சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்க இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரதமர் மோடி அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும், ஐ.நா. தீர்மானத்தை ஒத்திவைக்கும் சிங்களத்தின் முயற்சிக்கு துணை போகக் கூடாது என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி. வேல்முருகன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையின் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவுக்கு 4 நாள் பயணமாக இன்று விஜயம் செய்துள்ளார்.
சிறிசேனவின் இந்த பயணத்தின் நோக்கமே ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான எந்த ஒரு போர்க்குற்ற விசாரணை அறிக்கையும் தாக்கல் செய்யாமல் ஒத்திப்போட வைப்பதற்கு இந்தியாவின் ஆதரவைத் திரட்டுவதுதான் என்று கூறப்படுகிறது.
இலங்கையில் ஈழத் தமிழர்களின் வாக்குகளால் மட்டுமே வெற்றி பெற்ற மைத்திரிபால சிறிசேனவும் அவரது அரசும் அதிகாரத்தில் அமர்ந்ததும் தமது வழக்கமான சிங்களப் பேரினவாத புத்தியை வெளிப்படுத்தி வருகின்றன.
தமிழீழத் தாயகத்தில் இருந்து சிங்கள இராணுவத்தை விலக்க மறுத்த சிறிசேன அரசு தற்போது கொடுங்கோலன் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காக ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஒத்திவைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
சிங்களப் பேரினவாத அரசின் இந்த கபடவேடத்தை உணர்ந்ததாலேயே தமிழீழத்தின் வடக்கு மாகாண சபையில் 'இலங்கையில் நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலையே' என்றும் இதற்கு சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. வடக்கு மாகாண சபையின் இந்த தீர்மானத்தால் சிங்களப் பேரினவாதம் நடுநடுங்கிப் போய் அலறிக் கொண்டிருக்கிறது.
இந்த சூழ்நிலையில்தான் சிறிசேனா இன்று இந்தியாவுக்கு வந்து, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஒத்தி வைப்பதற்கு இந்தியாவின் ஆதரவைக் கோர இருக்கிறார்.
சிங்களத்தின் இந்த கபடநாடகத்துக்கு இந்திய மத்திய அரசு துணை போய்விடக் கூடாது என்பதே தாய் தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கையாகும்.
இலங்கைத் தமிழர்கள் மீது கரிசனையோடு இருப்பதாக கூறும் இந்தியப் பேரரசு, ஈழத்தில் நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலையே என்ற வடக்கு மாகாண சபையின் ஒருமித்த நீதி கோருகிற தீர்மானத்தை முழுமையாக ஏற்று சிறிசேன முன்வைக்கிற கோரிக்கையை முற்றாக நிராகரிக்க வேண்டும்.
அத்துடன் இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணைக்கு சிங்களப் பேரினவாத அரசு ஒத்துழைத்தாக வேண்டும் என்ற நெருக்கடியையும் அழுத்தத்தையும் சிறிசேனவுக்கு மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் தேவையில்லை; உள்நாட்டு விசாரணையே போதுமானது என்ற கொள்கையோடு சர்வதேச நாடுகளின் ஆதரவைக் கோருவதற்காக இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சரமரவீரா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒருபகுதியாகத்தான் சிறிசேனவும் இந்தியாவுக்கு வருகை தருகிறார்.
ஒன்றரை லட்சம் ஈழத் தமிழ் மக்களை ஈவிரக்கமின்றி சர்வதேசம் தடை செய்த பயங்கர ஆயுதங்களைக் கொண்டு அழித்த கொடுங்கோலன் ராஜபக்ச உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளான தங்களது சிங்களப் பங்காளிகளை காப்பாற்றுவதற்கு பகீரத பிரயத்தனம் செய்கிறது சிறிசேன அரசு.
தமிழீழத் தமிழர்கள் மீது இனப்படுகொலை நிகழ்த்தப்பட்ட காரணத்தினால்தான் இதுவரை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவும் தெரிவித்திருந்தன.
இந்த நிலைப்பாட்டில் இருந்து இந்தியா மாறிவிடக் கூடாது என்று வேண்டுகிறோம். தங்களுடைய சுய பிராந்திய நலன்களுக்காக சர்வதேச நாடுகள் சிங்களப் பேரினவாதத்தின் இந்த நரித்தனத்துக்கு உடந்தையாகிப் போனால், இலங்கைப் போர்க்குற்றவாளிகளை சர்வதேச கூண்டிலே நிறுத்த வகை செய்கிற நடவடிக்கைகளை கைவிட்டு இதற்கான விசாரணையை கொலைகாரர்கள் கையிலேயே கொடுத்தால் முள்ளிவாய்க்காலில் கொத்து கொத்தாக கொன்று அழிக்கப்பட்ட எங்களது ஒன்றை லட்சம் தமிழர் படுகொலைக்கான நீதியை நாங்கள் எங்கே பெறுவது? என்பதுதான் உலகம் முழுவதும் இருக்கிற தமிழினத்தின் ஒற்றை கேள்வியாகும்.
மேலும் இதுவரை ஈழத் தமிழர்கள் மீது நீங்கள் காட்டிய கரிசனையும் அக்கறையும் பொய்யானதுதானா? எங்களுக்கான நீதியை எங்கே போய் கேட்பது?
எங்களுக்கான நீதியை எங்களுக்கான வழியில்தான் பெற வேண்டும் என்கிற நிலையை உருவாக்கத்தான் இந்த சர்வதேச சமூகம் விரும்புகிறதா? என்ற கேள்வியையும் தமிழினம் முன்வைக்கிறது.
ஆகையால் இந்தியாவுக்கு வருகை தரும் சிறிசேனவிடம் தமிழீழ வடக்கு மாகாண சபை தீர்மானத்தை ஏற்று சர்வதேச விசாரணையை எதிர்கொள்ளுங்கள் என்று இந்தியப் பேரரசு வலியுறுத்த வேண்டும்.
நாங்கள் மாற்றத்தை கொண்டு வருகிறோம் என்ற முழக்கத்துடன் ஆட்சியில் அமர்ந்த மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள் இதைச் செய்ய வேண்டும் என்று இந்தியாவின் அங்கமாக இருக்கிற தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணைக் குழுவையும் இந்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
தமிழினத்தின் இத்தகைய எதிர்ப்பார்ப்புகளையும் வேண்டுகோளையும் புறந்தள்ளி கடந்த கால காங்கிரஸ் அரசைப் போல மீண்டும் மீண்டும் சிங்களத்தின் சதிகளுக்கு இந்தியப் பேரரசு உடந்தையாக இருந்தால் மகிந்த ராஜபக்ச, சிறிசேனாக்களை விட எங்களது இந்தியப் பேரரசைத்தான் தமிழகம் மிகக் கடுமையாக எதிர்க்கும்.
தமிழ்நாட்டின் மிகக் கடுமையான போராட்டங்களைத்தான் இந்திய அரசு எதிர்கொள்ள நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCSZKdes7.html

Geen opmerkingen:

Een reactie posten