[ ஞாயிற்றுக்கிழமை, 22 பெப்ரவரி 2015, 04:05.03 AM GMT ]
நிலையான பாராளுமன்றத்தை அமைக்கும் வகையில் தேர்தல் முறையை மாற்ற வேண்டும் என தேசிய அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அரசாங்கம் முன்வைத்துள்ள யோசனைகள் தொடர்பாக விசேட குழு அமைத்து, பேச்சுவார்ததைகள் இடம் பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எங்கள் கட்சி நிலையானது தான் அரசியலமைப்பின் நிறைவேற்று அதிகாரங்களை பாரிய அளவில் குறைக்கப்படல் அல்லது நிறைவேற்று அதிகாரங்களை ஒழித்தலுக்கு இணையாக நாட்டின் வளர்ச்சிக்கு நிலையான அரசாங்கத்தை உருவாக்கலாம் என தேசிய அமைப்பாளர் குறிப்பிட்டுள்ளார். எனவே அதற்காக பாராளுமன்றம் நிலையானதாக காணப்படல் வேண்டும்.
பாராளுமன்றத்தின் தேர்தல் முறையானது நிலையான பாராளுமன்றத்தினை உருவாக்குவதாக அமைய வேண்டும் அதற்காக பாராளுமன்றத்தின் தேர்தல் முறையில் மாற்றம் ஒன்றினை காண வேண்டிய அவசியம் உள்ளதாக கட்சி வட்டாரங்களில் பேசப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தின் தேர்தல் முறையானது நிலையான பாராளுமன்றத்தினை உருவாக்குவதாக அமைய வேண்டும் அதற்காக பாராளுமன்றத்தின் தேர்தல் முறையில் மாற்றம் ஒன்றினை காண வேண்டிய அவசியம் உள்ளதாக கட்சி வட்டாரங்களில் பேசப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRWSUnr7D.html
குடும்ப மரம் அல்லது குடும்ப வனம் தமது கொள்கை அல்ல: ஜனாதிபதி மைத்திரி
[ ஞாயிற்றுக்கிழமை, 22 பெப்ரவரி 2015, 05:22.53 AM GMT ]
அப்படியான குடும்ப மரம் அல்லது குடும்ப வனம் ஒன்றை அமைக்க நினைத்திருந்தால் ஜனாதிபதியாக கடமை புரிவதற்கு முன்னர் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே அதாவது எனது 25 வருட அரசியல் வாழ்க்கையிலேயே அமைத்திருக்க முடியும்.
முழு நாடு மற்றும் கிராமங்களை தன்னுடையதாக எண்ணுவதோடு நாட்டு மக்கள் தனது உறவுகளாக எண்ணி நாட்டுக்காக அர்பணிப்புடன் செயற்படுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிறப்பிடமான யாகொட பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
மேலும் கடந்த அரசாங்கம் பின்பற்றிய குடும்ப அரசியலை தாம் பின்பற்றப் போவதில்லை என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதேவேளை சகல மதகுருமார்களும் அடங்கிய ஆலோசனை சபை ஒன்றினை அமைக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyCRWSUnr7E.html
குறைவான புள்ளி பெற்ற மாணவன் மீது தாக்குதல்! கிளிநொச்சியில் சம்பவம்
[ ஞாயிற்றுக்கிழமை, 22 பெப்ரவரி 2015, 05:47.35 AM GMT ]
பரீட்சையில் குறைவான புள்ளி பெற்ற ஒன்பது வயது பாடசாலை மாணவனான சிறுவனை உறவினர்கள் மோசமாக தாக்கிய சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சிறுவன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
குறித்த மாணவன் பாடசாலை செல்லும் வசதிக்காக விஸ்வமடு தொட்டியடியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்து கல்வி கற்று வந்தார்.
இதன்போது பரீட்சையில் குறைவான புள்ளி எடுத்தமைக்காக குறித்த உறவினர் இவரை தாக்கி காயப்படுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmtyCRWSUnr7F.html
Geen opmerkingen:
Een reactie posten