தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 1 januari 2015

TV நிலையத்தை அப்-கிரேட் செய்வதாக கூறி கொழும்பில் புகுந்துள்ள இந்திய IT துறை நிபுணர்கள் !

மகிந்தர் கையிருப்பில் இருந்த தங்க கட்டிகள் மலேசியாவுக்கு கடத்தப்படுகிறது: தேர்தலில் தோற்றால்..

[ Jan 01, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 11420 ]
மகிந்த ராஜபக்ஷவிடமும் அவரது குடும்ப அங்கத்தவர்களிடமும் இருந்த பெருந்தைகையான தங்க கட்டிகள் கட்டநாயக்க விமான நிலையம் ஊடாக மலேசியாவுக்கு கொண்டு செல்லப்படுவதாக ஊர்ஜிதமற்ற சில செய்திகள் கசிந்துள்ளது. இலங்கையில் அவர்களின் பினாமி பெயரில் உள்ள சில சொத்துக்களை விற்று அதனை தங்கக் கட்டிகளாக்கி , வெளிநாட்டுக்கு கொண்டு சென்று வருவதாகவும் கூறப்படுகிறது. அலரி மாளிகைக்கு நெருக்கமான சில நபர்கள் பெருந்தொகைப் பணத்தை கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள சில தமிழ் நகைக்கடை உரிமையாளர்களிடம் கொடுத்துள்ளார்கள்.
அதனை அவர்கள் தங்க கட்டிகளாம மாற்றியுள்ளார்கள். மேலும் இந்தியா மலேசியா போன்ற நாடுகளில் தமது கிளைகளைக் கொண்ட நகைக் கடை உரிமையாளர்களிடம் தமது பணத்தை கொடுத்து அதற்கு சமமான தங்கக் கட்டிகளை அன் நாட்டில் பெற்றுக்கொள்ள நடவடிக்கையும் எடுத்துள்ளார்கள் மகிந்த குடும்பத்தினர். ஒருவேளை ஜனாதிபதி தேர்தலில் தோற்றால், சில சொத்துக் குவிப்பு வழக்கில் மகிந்த சிக்கக்கூடும். இதனால் இந்த அசையாச் சொத்துக்களை விற்று பணமாக்க முயல்வதாகவும் மேலும் அறியப்படுகிறது. கொழும்பில் தற்போது தங்கக் கட்டிகளுக்கு பெரும் பற்றாக்குறை நிலவுவதாகவும். கறுப்பு சந்தையில் விற்கப்படும் தங்க கட்டிகளை கூட, இவர்கள் வாங்கி வருவதாகவும் அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.
http://www.athirvu.com/newsdetail/1761.html

TV நிலையத்தை அப்-கிரேட் செய்வதாக கூறி கொழும்பில் புகுந்துள்ள இந்திய IT துறை நிபுணர்கள் !

[ Jan 01, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 10330 ]
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை மாற்றி அமைக்கும் முயற்சியில் இந்திய கணினி நிபுணர் குழுவொன்று இலங்கைக்கு வந்து கடும் வேலையில் ஈடுபட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்குழு பொரளை லெஸ்லி ரணகல வீதியில் அமைக்கப்பட்டுள்ள 'Head End' இல் இருந்து தமது பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். ஸ்ரீலங்கா டெலிகோம் நிறுவனத்திற்குச் சொந்தமான 'Pure TV' இன் திருத்தத்திற்கு எனக்கூறி இந்திய குழு தமது பரீட்சார்த்த முயற்சியை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்திய குழு 'Pure TV' திருத்தம் எதனையும் செய்யவில்லை என குழுவின் கணினி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த 'Head End' அலுகதத்தில் கணினி தரவு தயாரித்து வேறு இடங்களுக்கு அனுப்பும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும். கணினி தரவுகளை மாற்றம் செய்யும் சக்தி இந்த குழுவிற்கு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழு தேர்தல் வலையமைப்பையும் ஸ்ரீலங்கா டெலிகோம் நிறுவனமே மேற்கொள்கிறது. ராஜகிரிய தேர்தல் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து இடங்களுக்கும் தேவையான Dedicated Line மற்றும் Vertual Pin Number போன்றவற்றை ஸ்ரீலங்கா டெலிகோம் நிறுவனமே விநியோகிக்கிறது.
மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி அலுவலகத்தில் இருந்து தொலைநகல் மூலம் தேர்தல்கள் செயலகத்திற்கு முடிவு அனுப்பி வைக்கப்படும். அந்த நேரத்தில் தேர்தல் முடிவுகளை மாற்றி அமைக்க உள்ள வாய்ப்புக்கள் குறித்து இந்திய கணினி நிபுணர் குழு முற்சித்து வருவதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.athirvu.com/newsdetail/1765.html

Geen opmerkingen:

Een reactie posten